முகப்பு
 » 
கிரிராஜ் சிங்

கிரிராஜ் சிங்

கிரிராஜ் சிங்

கிரிராஜ் சிங் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாஜகவைச் சேர்ந்தவர்.

கிரிராஜ் சிங் சுயசரிதை

கிரிராஜ் சிங் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாஜகவைச் சேர்ந்தவர். நவதா தொகுதியிலிருந்து 16வது லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) பொறுப்பில் உள்ளார். நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்துள்ளார். பீகார் அரசில் கூட்டுறவு, கால்நடைத்துறை மீன்வளத்துறை அமைச்சராக இருந்துள்ளார். 1952ம் ஆண்டு பீகார் மாநிலம் பரஹியா லக்கிசராய் மாவட்டத்தில் செப்டம்பர் 8ம் தேதி பிறந்தார் கிரிராஜ் சிங். பரஹியாவில் உள்ள அரசுப் பள்ளியில் படித்தார். பின்னர் 1971ம் ஆண்டு மகத் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு படித்தார். இவர் பூமிகார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி பெயர் உமா சின்ஹா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

மேலும் படிக்க
By Shalini Updated: Sunday, January 31, 2021, 12:08:56 PM [IST]

கிரிராஜ் சிங் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் கிரிராஜ் சிங்
பிறந்த தேதி 08 Sep 1952 (வயது 71)
பிறந்த இடம் பரஹியா மாவட்டம், லக்கிசராய், பீகார்
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Graduate
தொழில் விவசாயி
தந்தை பெயர் திரு ராம்வதார் சிங்
தாயார் பெயர் மறைந்த திருமதி தாரா தேவி
சமூக வலைதளங்கள் சமூக வலைதளங்கள்:

கிரிராஜ் சிங் நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹5.01 CRORE
சொத்துக்கள்:₹5.01 CRORE
கடன்கள்: N/A

கிரிராஜ் சிங் சுவாரசிய தகவல்கள்

i) விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த கிராமப்புற மேம்பாடு ii) சூரிய சக்தி iii) மதுராவில் உள்ள ஐசிஏஆர் துணையுடன் மொரிங்கா பயோமாஸ் அடிப்படையிலான கால்நடை தீவண உற்பத்தி. (இதுதொடர்பான ஆய்வுக் கட்டுரை மற்றும் காப்புரிமைக்கான விண்ணப்பம் நிலுவையில் உள்ளது.)

கிரிராஜ் சிங் அரசியலில் கடந்து வந்த பாதை

2019
  • கால்நடை வளர்ப்பு, பால் வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2019
  • 17 வது மக்களவைத் தேர்தலில் பெகுசாரை தொகுதியில் போட்டியிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை 5,00000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார் .
2017
  • மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) பதவியில் அமர்த்தப்பட்டார்.
2016
  • மக்கள் தொகைப் பெருக்கம் குறித்த சர்ச்சைக்கிடமான கருத்தை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் சம எண்ணிக்கையில் குழந்தை பெற்றுக் கொண்டால் மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம் என அவர் கூறியிருந்தார். பின்னர் அக்டோபர் மாதம் ஹிந்துக்கள் அதிக குழந்தை பெற்றுக் கொளள வேண்டும் என்று கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.
2014 - 2017
  • 2014 நவம்பர் 9ம் தேதி மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணை அமைச்சரானார்.
2014
  • 2014, செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம், படிகள் குறித்த கூட்டுக் குழுவின் உறுப்பினரானார்.
2014
  • 2014, நவம்பர் 9ம் தேதி தொழிலாளர் துறை நிலைக்குழு உறுப்பினரானார்.
2014
  • 2014, செப்டம்பர் 1ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம், படிகள் குறித்த கூட்டுக் குழுவின் உறுப்பினரானார்.
2014
  • 16வது லோக்சபாவுக்கு நவதா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆர்ஜேடி வேட்பாளர் ராஜ் பல்லப் பிரசாத்தை 2,50,091 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
2010-2013
  • பீகார் மாநில கால்நடை, மீன்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2005-2010
  • பீகார் மாநில கூட்டுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2002
  • 2002 முதல் அரசியலில் இருக்கிறார் கிரிராஜ் சிங். அந்த வருடம் நடந்த தேர்தலில் பீகார் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிரிராஜ் சிங் சாதனைகள்

தகவல் இல்லை

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X