முகப்பு
 » 
எச். டி. தேவெ கெளடா

எச். டி. தேவெ கெளடா

எச். டி. தேவெ கெளடா

எச். டி.

எச். டி. தேவெ கெளடா சுயசரிதை

எச்.டி. தேவெ கெளடா, இ்தியாவின் 11வது பிரதமர் ஆவார். கர்நாடக மாநிலத்தின் 14வது முதல்வரும் ஆவார். இந்தியாவின் பிரதமராக 1996 முதல் 97 வரையிலும், கர்நாடக முதல்வராக 1994 முதல் 96 வரையிலும் அவர் பணியாற்றினார். கர்நாடக சட்டசபைக்கு முதல் முறையாக 1962ம் ஆண்டு அவர் போட்டியிட்டார். இந்தியாவின் பிரதமராக ஐக்கிய முன்னணி சார்பில் 1996ம் ஆண்டு பொறுப்பேற்றார். 16வது லோக்சபாவில் உறுப்பினராக இருக்கும் தேவெ கெளடா, கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனதாதளம் (மதச்சார்பற்றது) கட்சியின் தேசிய தலைவராக இருக்கிறார்.

மேலும் படிக்க
By Shalini Updated: Tuesday, February 19, 2019, 01:51:58 PM [IST]

எச். டி. தேவெ கெளடா தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் எச். டி. தேவெ கெளடா
பிறந்த தேதி 18 May 1933 (வயது 91)
பிறந்த இடம் ஹோலேநரசிபுரா, மாவட்டம் ஹசன், கர்நாடகா
கட்சி பெயர் Janata Dal (Secular)
கல்வி Others
தொழில் விவசாயி, பொறியாளர், சமூக சேவகர்
தந்தை பெயர் தொட்டே கெளடா
தாயார் பெயர் திருமதி தேவம்மா
மதம் இந்து
இணையதளம் http://www.hddevegowda.in/home.htm
சமூக வலைதளங்கள் சமூக வலைதளங்கள்:

எச். டி. தேவெ கெளடா நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹5.03 CRORE
சொத்துக்கள்:₹6.01 CRORE
கடன்கள்: ₹97.98 LAKHS

எச். டி. தேவெ கெளடா சுவாரசிய தகவல்கள்

சமூகத்தின் ஒவ்வொரு தரப்பினரின் கருத்தையும் மிகவும் பொறுமையுடன் கேட்கக் கூடியவர் எச்.டி தேவெ கெளடா. இதனால் இவரை மண்ணின் மைந்தன் என்று அனைவரும் அன்போடு அழைப்பர்.

சட்டசபை வளாகத்தில் உள்ள நூலகத்திற்கு அடிக்கடி சென்று புத்தகம் படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் தேவெ கெளடா.

நாடாளுமன்றத்தின் மாண்புகளையும், பாரம்பரியத்தையும் மதித்து நடக்கக் கூடியவர் தேவெ கெளடா.

எச். டி. தேவெ கெளடா அரசியலில் கடந்து வந்த பாதை

2014
  • மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், 16வது லோக்சபாவுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் தேவெ கெளடா (இது அவருக்கு 6வது எம்.பி. வெற்றியாகும்). 2014ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி பாதுகாப்புத்துறைக்கான நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
2009
  • 15வது லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் 5வது முறையாக எம்.பி. ஆனார் தேவெ கெளடா. ஆகஸ்ட் 31ம் தேதி பாதுகாப்புத்துறை கமிட்டியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
2006
  • 2006 -2008ல் ரயில்வே துறையின் கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
2004
  • 14வது லோக்சபாவுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (4வது முறை)
1999
  • 1999ம் ஆண்டு மதுதண்டவதே உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தேவெ கெளடா தலைமையிலான ஜனதாதளம் (மதச்சார்பற்றது) கட்சியில் வந்து இணைந்தனர். அந்த கட்சியின் தேசியத் தலைவராக தேவெ கெளடா பொறுப்பேற்றார். அதே ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். இருப்பினும் 2002ம் ஆண்டு நடந்த கனகபுரா இடைத் தேர்தலில் அவர் வெற்றி பெற்று அதிர வைத்தார்.
1996
  • 1996ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. ஆனால் வேறு எந்தக் கட்சிக்கும் லோக்சபாவில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதே ஆண்டு அதாவது 1996ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி பிரதமராக பதவியேற்றார் தேவே கெளடா. 1997 ஏப்ரல் 11 வரை இப்பொறுப்பில் தொடர்ந்தார். பிரதமராக அவர் இருந்தபோது, பெட்ரோலியம் கெமிக்கல், பெர்சனல், பொதுக் குறை தீர்ப்பு, ஓய்வூதியம், அணு சக்தி, உள்துறை, விவசாயம், உணவுப் பதப்படுத்துதல் தொழில், நகர்ப்புற விவகாரம், வேலைவாய்ப்பு மற்றும் மரபு சாரா எரி சக்தி ஆகிய துறைகளையும் அவர் தன் வசம் வைத்திருந்தார்.
1995
  • 1995ம் ஆண்டு ஜனவரி மாதம் கெளடா, சுவிட்சர்லாந்துக்குச் சென்று அங்கு சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டார். அதேபோல சிங்கப்பூருக்கு பயணம் செய்து கர்நாடகத்திற்கு பெருமளவிலான முதலீடுகளை கொண்டு வந்தார்.
1994
  • 1994ம் ஆண்டு ஜனதா தளம் கட்சியின் கர்நாடக மாநில தலைவரானார். கட்சியை 1994 சட்டசபைத் தேரத்லில் வெற்றிக்கு இட்டுச் சென்றார். டிசம்பரில் நடந்த தேர்தலில் ராமநகரா தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்று, கர்நாடகத்தின் 14வது முதல்வராக பொறுப்பேற்றார்.
1983
  • கர்நாடகத்தில் ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையில் 1983ம் ஆண்டு முதல் 1988 வரை ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோது அமைச்சராக பணியாற்றினார்.
1975
  • 1975-77 வரை எமர்ஜென்சி காலகட்டத்தில் கைது செய்யப்பட்டு பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
1972
  • காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தபோது காங்கிரஸ் (ஓ) பிரிவில் இணைந்தார் கெளடா. 1972 மார்ச் முதல் 1976 மார்ச் வரையிலும், பின்னர் 1976 நவம்பர் முதல் 1977 டிசம்பர் வரையிலும் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார்.
1962
  • 1962ம் ஆண்டு கர்நாடக சட்டசபைக்கு ஹோலேநரசிபுரா தொகுதியிலிருந்து சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் கெளடா. பின்னர் அதே தொகுதியில், 1962ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை 6 முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கெளடா.
1953
  • 1953ம் ஆண்டு தேவெ கெளடா இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1962ம் ஆண்டு வரை காங்கிரஸிலேயே இருந்தார்.

முந்தைய வரலாறு

1976
  • 1976ம் ஆண்டு மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
1952
  • 1952 முதல் 1962ம் ஆண்டுவரை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்தார் தேவெ கெளளடா.
Late 1950's
  • 1950களில் ஹசன் நகரில் உள்ள எல்வி பாலிடெக்னிக்கில் சிவில் என்ஜீனியரிங் படிப்பில் டிப்ளமோ பெற்றார் தேவெ கெளடா.

எச். டி. தேவெ கெளடா சாதனைகள்

மாணவப் பருவத்தில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
தாலுகா வளர்ச்சி வாரியம், கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக இருந்துள்ளார்.
விவசாயம், தோட்டக்கலை இவரது விருப்பங்கள் ஆகும்.
ஐக்கிய முன்னணி கூட்டணியின் ஒருங்கிணைப்புக் கமிட்டியின் தலைவராக இருந்து ஹோலேநரசிபுரா ஆஞ்சநேயா கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார்.
கீழ்த்தட்டு மக்களின் உயர்வுக்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும் பாடுபட்ட முக்கியமான அரசியல் தலைவர் தேவெ கெளடா.
சிறுபான்மையினர், பிற்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், பெண்களுக்காக தனி இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியவர் தேவெ கெளடா.

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X