• search
முகப்பு
 » 
அரசியல்வாதிகள்
 » 
இந்திராகாந்தி

இந்திராகாந்தி

சுயசரிதை

இந்திராகாந்தி நாட்டை வழிநடத்திய மிகவும் மக்களை கவரக்கூடிய, சர்ச்சைக்குரிய அரசியல் தலைவராக இருந்தார். 1966 முதல் 1977 வரை மற்றும் 1980 முதல் 1984 ல் இறக்கும் வரை பிரதம மந்திரி பதவியில் இருந்தார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மகளான இவர்,சோகத்தினால் கட்டமைக்கப்பட்ட தனது வளர்ப்பின் காரணமாக தனிமை குழந்தை என வர்ணிக்கப்பட்டார். அவரின் வளர்ப்பு . இளம் வயதிலேயே தாயை இழந்த நிலையில், தந்தை நேருவும் சுதந்திர போராட்டத்தின் போது அடிக்கடி சிறையில் அடைக்கப்பட்டார். தனது பெரும்பாலான குழந்தை பருவத்தை வீட்டு பணியாளர்கள் துணையுடனும், பல உண்டுஉறைவிட பள்ளிகளிலும் கழித்தார். 1942 ஆம் ஆண்டில் இந்திரா ஃபெரோஸ் காந்தியை மணந்தார். பின்னர் அவரது தந்தை பிரதமரான பிறகு அவருக்கு உதவியாக பணியாற்றினார். கட்சியின் அரசியல் சச்சரவில் தன்னை தானே ஈடுபடுத்திக்கொண்ட இந்திரா, நேருவின் இறப்பிற்கு பிறகு லால் பஹ்தூர் சாஸ்திரியின் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

1966 ஆம் ஆண்டு கட்சியின் ஆதரவோடு பிரதமராக பதவியேற்ற இந்திரா, மெல்லிய தலைவராக இருப்பார் என்ற கணிப்புகளுக்கு நேர்எதிராக, அவர் கட்சி உறுப்பினர்களிடையேயை எதிர்ப்புக்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளையும் தேசியமயமாக்கினார். கட்சிக்குள்ளே இருந்த விரோதபோக்கினால் பதிவியிலிருத்து அவரை அகற்ற சிலர் முயன்றாலும், ஒவ்வொரு முறையும் அவற்றையெல்லாம் முறியடித்து, அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டார். இந்திரா பிரமராக இருந்த காலக்கட்டத்தில் ஊழல் மற்றும் சர்வாதிகார ஆட்சி என்ற சர்ச்சை எழுந்ததன் விளைவாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, பின்னர் வந்த தேர்தலில் எதிர்கட்சி கூட்டணியிடம் ஆட்சியை பறிகொடுத்தார். தன் மீதான விமர்சனங்களை எல்லாம் முறியடித்து, 1980ல் மீண்டும் ஆட்சியை பிடித்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆயினும் அவசரமான நகர்வுகள் மற்றும் முடிவெடுப்பதில் பிழை போன்றவை அவரது மரணத்திற்கு அபாய வகுத்தன. நூற்றுக்கணக்கான சீக்கியர்களுக்கு மரணத்திற்கு காரணமான ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்க்கு உடந்தையாக இருந்தது, வாக்குவங்கியை பலப்படுத்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கியது, நெல்லி படுகொலையில் உச்சக் கட்டம், தனது பதவிக்கு தகுதியற்றவர் என நிரூபித்தது, மக்களின் கோபம் போன்றவை 1984ல் அவரது படுகொலைக்கு வழிவகுத்தது.

தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் இந்திராகாந்தி
பிறந்த தேதி 19 Nov 1919
இறந்த தேதி 31 Oct 1984 (வயது 64)
பிறந்த இடம் அலகாபாத், ஆக்ரா மற்றும் ஔத் ஐக்கிய மாகாணங்கள், பிரிட்டிஷ் இந்தியா
கட்சி பெயர் Indian National Congress
கல்வி
தொழில் அரசியல்வாதி மற்றும் சமூக சேவகர்
தந்தை பெயர் ஜவகர்லால் நேரு
தாயார் பெயர் கமலா நேரு
துணைவர் பெயர் பெரோஷ் காந்தி
மகன்கள் 2

தொடர்பு

நிரந்தர முகவரி அலகாபாத், ஆக்ரா மற்றும் ஔத் ஐக்கிய மாகாணங்கள், பிரிட்டிஷ் இந்தியா
தற்காலிக முகவரி அலகாபாத், ஆக்ரா மற்றும் ஔத் ஐக்கிய மாகாணங்கள், பிரிட்டிஷ் இந்தியா
தொடர்பு எண் NA
மின்னஞ்சல் NA

சுவாரஸ்ய தகவல்கள்

உயர் விளைச்சல் தரும் விதைகள் மற்றும் நீர்ப்பாசனத்தை அறிமுகப்படுத்தி, அதிகளவில் உணவுதானியங்களை உற்பத்தி செய்து விவசாய உற்பத்தியை ஊக்கப்படுத்தினார் இந்திரா. மேலும் பிரதமராக இருந்தபோது அணுசக்தி திட்டத்தை முன்னெடுத்து, 1974 ல் நிலத்தடி சாதனத்தை வெடிக்க செய்ததன் மூலம் அணுசக்தி காலத்திற்கு நாட்டின் அழைத்துசென்றார்.

அரசியல் காலவரிசை

 • 1980
  1980 ஜனவரி முதல் பாதுகாப்பு அமைச்சர்
 • 1971
  மார்ச் 1971 முதல் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர்
 • 1970
  1970 ஜூன் முதல் நவம்பர் 1973 வரை உள்துறை அமைச்சர்
 • 1969
  ஜூலை 16, 1969 முதல் ஜூன் 26, 1970 வரை நிதியமைச்சர்
 • 1967
  அதேசமயம், செப்டம்பர் 1967-மார்ச் 1977; ஜூன் 1972-மார்ச் 1977; ஜனவரி 1980 முதல் அணு சக்தி மற்றும் விண்வெளி அமைச்சர். செப்டம்பர் 5, 1967 முதல் பிப்ரவரி 14, 1969 வரை வெளிவிவகாரத்துறை அமைச்சர்
 • 1966
  ஜனவரி 1966-மார்ச் 1977 மற்றும் ஜனவரி 14, 1980 முதல் இந்திய பிரதம மந்திரி. 1966-77 காலக்கட்டத்தில் திட்டக்குழு தலைவர்
 • 1964
  ராஜ்யசபா உறுப்பினர் மற்றும் இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர்
 • 1955
  காங்கிரஸ் பணிக் குழு மற்றும் கட்சியின் மத்திய தேர்தல் குழு உறுப்பினர்
நிகர மதிப்புN/A
சொத்துக்கள்N/A
கடன்கள்N/A

Disclaimer: The information relating to the candidate is an archive based on the self-declared affidavit filed at the time of elections. The current status may be different. For the latest on the candidate kindly refer to the affidavit filed by the candidate with the Election Commission of India in the recent election.

சமூக வலைதளம்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more