Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கே.எம். காதர் மொஹிதீன்

கே.எம். காதர் மொஹிதீன்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவராக கே. எம்.
By Rashmi | Tuesday, February 19, 2019, 01:51:58 PM [IST]

கே.எம். காதர் மொஹிதீன் சுயசரிதை

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவராக கே.எம். காதர் மொஹிதீன் இருக்கிறார். 14வது லோக்சபாவில் உறுப்பினராக இருந்தவர். வேலூர் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கே.எம். காதர் மொஹிதீன் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் கே.எம். காதர் மொஹிதீன்
பிறந்த தேதி 05 Jan 1940 (வயது 86)
பிறந்த இடம் திருநல்லூர், மாவட்டம் புதுக்கோட்டை, தமிழ்நாடு
கட்சி பெயர் Indian Union Muslim League
கல்வி Post Graduate
தொழில் அரசியல்வாதி, பத்திரிகையாளர், சமூக சேவகர்
தந்தை பெயர் முகம்மது ஹனீப்
தாயார் பெயர் காசிம் பீபி
துணைவர் பெயர் திருமதி லத்தீபா பேகம்
துணைவர் தொழில் இல்லத்தரசி
குழந்தைகள் 3 மகன்(கள்)
இணையதளம் NIL

கே.எம். காதர் மொஹிதீன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹23.5 LAKHS
சொத்துக்கள்
₹28 LAKHS
கடன்கள்
₹4.5 LAKHS

கே.எம். காதர் மொஹிதீன் சுவாரசிய தகவல்கள்

கேஎம் காதர் மொஹிதீன் வாழும் நெறி உள்ளிட்ட பல்வேறு மதம் சார்ந்த நூல்களை எழுதியுள்ளார். தமிழில் நூற்றுக்கணக்கான கவிதைகளையும் புனைந்துள்ளார். முபாரக், தாருல் குரான் உள்ளிட்ட பல்வேறு இதழ்களிலும் ஆசிரியராக இருந்துள்ளார்.

வாசிப்பது, ஒருங்கிணைப்பது, ஏழைகளுக்கும் தாய்மார்களுக்கும் உதவுவது இவருக்குப் பிடித்தமானது. மதச் சார்பற்று பல்வேறு சமூக ஏழைகளுக்கும் உதவியுள்ளார். மத, ஆன்மீக உரைகளை கேட்பதில் ஆர்வம் கொண்டவர்.

இளம் வயதிலேயே ஏழைகளுக்கு உதவுவதற்காக அமைப்பைத் தொடங்கியவர். ஏழைகளுக்கு வட்டியில்லாத கடன் கொடுக்க பாடுபட்டவர். தமிழக மொஹல்லா ஜமாத் சம்மேளனத்தை உருவாக்கியவர். திருச்சி, மதுரை, சேலம் மற்றும் சென்னையில் நடந்த பல்வேறு மதங்களுக்கு இடையிலான மாநாட்டில் கலந்து கொண்டவர். மதம் தொடர்பான மாநாட்டை நடத்தியவர்.

கே.எம். காதர் மொஹிதீன் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2007: 2007 முதல் உள்துறை கமிட்டி உறுப்பினராக செயல்பட்டார்.
  • 2006: 2006ம் ஆம்டு வக்பு வாரியத்திற்கான கூட்டு நாடாளுமன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2006 ஆகஸ்ட் 5ம் தேதி உள்துறை கமிட்டி உறுப்பினரானார்.
  • 2004: 14வது லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மின்சாரத்துறை ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
  • 2003: உள்துறை அமைச்சகத்தில் கமிட்டி உறுப்பினராகவும், மின்துறை அமைச்சகத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டார்.

முந்தைய வரலாறு

  • 1965: பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். ஜமால் முகம்மது கல்லூரியில் வரலாற்றுத்துறை பேராசிரியராகப் பணியாற்றினார். அத்துறையின் தலைராக இருந்தவர். பின்னர் முதல்வராகவும் உயர்ந்தார். பிறகு தனது வேலையை விட்டு விட்டு முழு நேர அரசியலுக்கும், சமூகப் பணிக்கும் வந்தார்.
  • Early 1960s: சென்னை பல்கலைக்கழகத்தில் எம்ஏ வரலாறு படிப்பை படித்தார். அரபி, உருது ஆகியவற்றில் டிப்ளமோ படித்துள்ளார். மாணவராக காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாஹேப்பால் கவரப்பட்டவர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாணவர் பிரிவில் இணைந்து செயலாற்றினார். முஸ்லீம் மாணவர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

கே.எம். காதர் மொஹிதீன் சாதனைகள்

சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக இருந்துள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1970களில் நிலைக்குழு உறுப்பினராக இருந்துள்ளார்.

திமுகவுடன் கூட்டணி வைத்து திமுக சின்னத்தில் போட்டியிட்டார்.

லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல் முறை போட்டியிட்டபோதே வெற்றி பெற்றவர்.

2003ம் ஆண்டு இவர் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+