கனிமொழி

கனிமொழி
தொழில்முறை பத்திரிகையாளர் மற்றும் கவிஞரான கனிமொழி, 2009 ஆம் ஆண்டு பாராளுமன்ற மேலவைக்கு திமுக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதனமூலம் அரசியலில் அடியெடுத்துவைத்தார். திமுகவின் இலக்கிய அணி செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இவர், கலை, இலக்கியம் மற்றும் பகுத்தறிவு ஆகியவை குறித்து சிறப்பாக பேசக்கூடிய கனிமொழி, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சிறந்த தலைவர் என அரசியல் அரங்கில் தனது பெயரை பதியவைத்துள்ளார்.
By Rashmi | Thursday, May 30, 2019, 03:56:19 PM [IST]

கனிமொழி சுயசரிதை

தொழில்முறை பத்திரிகையாளர் மற்றும் கவிஞரான கனிமொழி, 2009 ஆம் ஆண்டு பாராளுமன்ற மேலவைக்கு திமுக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதனமூலம் அரசியலில் அடியெடுத்துவைத்தார். திமுகவின் இலக்கிய அணி செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இவர், கலை, இலக்கியம் மற்றும் பகுத்தறிவு ஆகியவை குறித்து சிறப்பாக பேசக்கூடிய கனிமொழி, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சிறந்த தலைவர் என அரசியல் அரங்கில் தனது பெயரை பதியவைத்துள்ளார். இவர் தி இந்து தேசிய பத்திரிகை ஊழியர்கள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதியின் மகள் இவர், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மற்றும் முன்னாள் தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் சகோதரி ஆவார். தமிழ்நாட்டின் தனிப்பெரும் பெண் அரசியல் தலைவராக உருவெடுத்துள்ள கனிமொழி, சிறந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர் என்ற விருதை துணை ஜனாதிபதி திரு.வெங்கைய நாயுடுவின் கைகளால் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க

கனிமொழி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் கனிமொழி
பிறந்த தேதி 05 Jan 1968 (வயது 58)
பிறந்த இடம் சென்னை(தமிழ்நாடு)
கட்சி பெயர் Dravida Munetra Kazhagam
கல்வி
தொழில் அரசியல்வாதி, கவிஞர், பத்திரிகையாளர்
தந்தை பெயர் திரு. கருணாநிதி
தாயார் பெயர் திருமதி. இராஜாத்தி கருணாநிதி
துணைவர் பெயர் திரு. ஜி. அரவிந்தன்
துணைவர் தொழில் வெளிநாட்டு ஆலோசகர்
குழந்தைகள் 1 மகன்(கள்)

கனிமொழி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
N/A
சொத்துக்கள்
N/A
கடன்கள்
N/A

கனிமொழி சுவாரசிய தகவல்கள்

2018 ஆம் ஆண்டு முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான தேர்வுக்குழுவால், சிறந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர் என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை ஜனாதிபதி திரு. வெங்கையா நாயுடு இந்த விருதை வழங்கி கவுரவித்தார்.

கனிமொழி அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2024: தூத்துக்குடியில் இருந்து 18வது லோக்சபாவிற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்; திமுக நாடாளுமன்ற கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • 2022: திமுகவின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
  • 2019-2022: வேதிப்பொருட்கள் & உரங்கள் மற்றும் கிராமப்புற மேம்பாடு & பஞ்சாயத்து ராஜ் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராகவும்.
  • 2019: தூத்துக்குடியில் இருந்து 17வது லோக்சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்; லோக்சபாவில் திமுகவின் துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • 2017: தி இந்து தேசிய பத்திரிகை ஊழியர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் (முதல் பெண்).
  • 2015-2022: பெண்கள் அணி செயலாளராக, திமுகவில் பணியாற்றினார்.
  • 2013: ராஜ்ய சபாவிற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (திமுக).
  • 2012: உள்துறை குழு உறுப்பினராகவும், ஆகஸ்ட் 2012 முதல் மனித வள மேம்பாட்டுக் குழுவின் கல்வி உரிமைச் சட்ட அமலாக்கத்திற்கான துணைக்குழு-I உறுப்பினராகவும் பணியாற்றினார்.
  • 2012: கனிமொழி இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சிலின் பொது சபை உறுப்பினராக பணியாற்றினார்.
  • 2010: கனிமொழி கிராமப்புற மேம்பாட்டுக் குழு உறுப்பினராக பணியாற்றினார்.
  • 2009: வெளியுறவு அமைச்சகத்திற்கான ஆலோசனை குழு உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற வளாக உணவு மேலாண்மைக்கான கூட்டுக்குழு உறுப்பினர் ஆக பணியாற்றினார்.
  • 2007: ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2009 வரை சுகாதாரம் மற்றும் குடும்ப நலக் குழு உறுப்பினராக பணியாற்றினார்.

முந்தைய வரலாறு

  • 2005: அரசியலில் நுழைவதற்கு முன்பு, கனிமொழி தி இந்து பத்திரிகையின் துணை ஆசிரியராகவும், குங்குமம் (ஒரு தமிழ் வார இதழ்) பொறுப்பு ஆசிரியராகவும், சிங்கப்பூர்-அடிப்படையிலான தமிழ் செய்தித்தாளில் தமழ் முரசு துணை ஆசிரியராகவும் பணியாற்றினார்.

கனிமொழி சாதனைகள்

2008 ஜூன் மாதம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியபட்டி என்ற கிராமத்தில் சோதனை முயற்சியாக துவங்கப்பட்ட வேலைவாய்ப்பு முகாமையை, கனிமொழி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஒருங்கிணைத்து வருகிறார். 2010 மார்ச் மாதம் வரை சுமார் இரண்டு ஆண்டுகளுக்குள், இந்த முயற்சி பல்வேறு கிராமங்களுக்கும் காட்டுத்தீ போல பரவி நாகர்கோவில், வேலூர், உதகமண்டலம், திருச்சிராப்பள்ளி மற்றும் விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் இதே போன்ற வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த கனிமொழி திட்டமிட்டுள்ளார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+