கலைஞர் மு. கருணாநிதி

கலைஞர் மு. கருணாநிதி
தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்னும் சிறு கிராமத்தில் பிறந்த கருணாநிதி, தனது 14 வயதிலேயே பல்வேறு சமூக இயக்கங்களில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டு அரசியலில் நுழைந்தார். தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான பல்வேறு போராட்டங்களுக்கு மூல காரணமாக இருந்தவர் கருணாநிதி.
By Samraj | Tuesday, February 19, 2019, 01:36:47 PM [IST]

கலைஞர் மு. கருணாநிதி சுயசரிதை

தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்னும் சிறு கிராமத்தில் பிறந்த கருணாநிதி, தனது 14 வயதிலேயே பல்வேறு சமூக இயக்கங்களில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டு அரசியலில் நுழைந்தார். தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான பல்வேறு போராட்டங்களுக்கு மூல காரணமாக இருந்தவர் கருணாநிதி. இவர் துவங்கிய முரசொலி பத்திரிகை பின்னாளில் திமுக கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையானது. ஒருபுறம் முழுநேர அரசியல்வாதியாக இயங்கிக்கொண்டிருந்தாலும், தமிழ் திரையுலகிலும் கவனம் செலுத்தி பல்வேறு திரைப்படங்களில் வசனகர்த்தாவாக தனது திராவிட சித்தாந்தங்களை பரப்பினார். இவரது முதல் படமான ராஜகுமாரி 1947லும், கடைசிபடம் பொன்னர் சங்கர் 2011லும் வெளியானது. திருக்குறள் உரை, சங்கத்தமிழ், குறளோவியம், தென்பாண்டி சிங்கம், ரோமாபுரி பாண்டியன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உரைநடை மற்றும் இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். தூக்குமேடை, மணிமகுடம், நானே அறிவாளி உள்ளிட்ட மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை கன்னியாகுமரியில் நிறுவியவர். வயோதிக பிரச்சனைகளால் உடலுறுப்புகள் செயலிழந்து, 07 ஆகஸ்ட் 2018ல் தனது 94வது வயதில் காலமானார் கருணாநிதி.

மேலும் படிக்க

கலைஞர் மு. கருணாநிதி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் கலைஞர் மு. கருணாநிதி
பிறந்த தேதி 03 Jun 1924
இறந்த தேதி 07 Aug 2018 (வயது 94)
பிறந்த இடம் திருக்குவளை, திருவாரூர், இந்தியா
கட்சி பெயர் Dravida Munetra Kazhagam
கல்வி 8ஆம் வகுப்பு தேர்ச்சி
தொழில் எழுத்தாளர், அரசியல்வாதி
தந்தை பெயர் முத்துவேலர்
தாயார் பெயர் அஞ்சுகம் அம்மையார்
துணைவர் பெயர் 1) பத்மாவதி, 2) தயாள அம்மாள், 3) ராஜாத்தி அம்மாள்
துணைவர் தொழில் இல்லத்தரசிகள்
குழந்தைகள் 4 மகன்(கள்) 2 மகள்(கள்)

கலைஞர் மு. கருணாநிதி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹51.05 CRORE
சொத்துக்கள்
₹62.99 CRORE
கடன்கள்
₹11.94 CRORE

கலைஞர் மு. கருணாநிதி சுவாரசிய தகவல்கள்

பள்ளியில் படிப்பதை காட்டிலும் இசை, எழுத்து மற்றும் சமூக செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வமாகவும், ஈடுபாட்டுடனும் இருந்தார் கருணாநிதி. பள்ளி இறுதியாண்டில் மூன்று முறை தோல்வியுற்றதால் பள்ளிப்படிப்பை கைவிட்டார். இவருக்கு பத்மாவதி, தயாள அம்மாள், ராஜத்தி அம்மாள் என மூன்று மனைவிகள். கருணாநிதி - பத்மாவதி தம்பதிக்கு பிறந்த மகன் முத்து. தயாள அம்மாளுக்கு அழகிரி, ஸ்டாலின், தமிழரசு என மூன்று மகன்களும், செல்வி என்ற மகளும் உள்ளனர். ராஜத்தி அம்மாளுக்கு பிறந்தவர் கனிமொழி. பேச்சுத்திறன் மற்றும் அறிவாற்றலால் வெற்றிகரமான வசனகர்த்தாவாகவும், பிரபல அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார்.

கலைஞர் மு. கருணாநிதி அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2006: கருணாநிதி ஐந்தாவது முறையாக தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றார்.
  • 1996: கருணாநிதி நான்காவது முறையாக தமிழ்நாட்டின் முதல்வரானார்.
  • 1989: மூன்றாவது முறையாக, கருணாநிதி தமிழ்நாட்டின் முதல்வரானார்.
  • 1971: கருணாநிதி இரண்டாவது முறையாக தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றார்.
  • 1969: "கருணாநிதி முதல் முறையாக தமிழ்நாட்டின் முதல்வரானார்.அவர் திமுகவின் தலைவராகவும் ஆனார்."
  • 1967: கருணாநிதிக்கு தமிழ்நாடு அரசாங்கத்தின் பொதுப்பணித்துறையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
  • 1962: கருணாநிதி தமிழ்நாடு சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவரானார்.
  • 1961: கருணாநிதி திமுகவின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.
  • 1957: கருணாநிதி குளித்தலை தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டசபையில் நுழைந்தார்.

முந்தைய வரலாறு

  • 1924: கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. அவரது ஆரம்ப பள்ளிப் படிப்பு திருக்குவளையிலும், பின்னர் திருவாரூரிலும் இருந்தது. ஒரு இளம் வயதினராக, கருணாநிதி பல்வேறு தமிழ் தலைவர்களின் அரசியல் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். அவர் மானவ நேசன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார், அது பின்னர் முரசொலி தினசரி செய்தித்தாளாக மாற்றப்பட்டது.

கலைஞர் மு. கருணாநிதி சாதனைகள்

திரு. கருணாநிதி அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக சுமார் 50 ஆண்டுகள் பதவி வகித்தார்.


தமிழகத்தின் முதல்வராக நான்கு தசாப்தங்களில் ஐந்து முறை பதவி வகித்துள்ளார்.

1957லிருந்து 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இவர், இதுவரை தோல்வியடைந்ததே இல்லை.

1971 மற்றும் 2006 என இருமுறை கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

இவரது "தென்பாண்டி சிங்கம்" புத்தகத்திற்காக தமிழ் பல்கலைக்கழகம் ராஜராஜன் விருது வழங்கி சிறப்பித்துள்ளது

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+