Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கீர்த்தி ஆசாத்

கீர்த்தி ஆசாத்
கீர்த்திவர்தன் பகவத் ஜா ஆசாத் எல்லாரும் அறிந்த கிரிக்கெட், கிரிக்கெட் உலகில் இவரது பெயர் கீர்த்தி ஆசாத். இவர் விளையாட்டு வீரராக இருந்து அரசியலுக்கு வந்தவர்.
By Ajay M V | Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

கீர்த்தி ஆசாத் சுயசரிதை

கீர்த்திவர்தன் பகவத் ஜா ஆசாத் எல்லாரும் அறிந்த கிரிக்கெட், கிரிக்கெட் உலகில் இவரது பெயர் கீர்த்தி ஆசாத். இவர் விளையாட்டு வீரராக இருந்து அரசியலுக்கு வந்தவர். கீர்த்தி ஆசாத் பீகார் மாநிலம் பூர்னியாவில் பிறந்தார். தில்லியில் தனது படிப்பை முடித்தார். பீகாரில் உள்ள தர்பங்கா தொகுதியில் போட்டியிட்டு அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். அரசியல் தவிர அவர் ஒரு புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர் ஆவார். கீர்த்தி ஆசாத் பல்வேறு சமூக சேவைகளை செய்து கொண்டே இருப்பார். அவர் கர்மா சமூக நல அமைப்பை நிறுவி செயல்பட்டு வருகிறார். 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையைத் தவிர, அவர் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய குறிப்பிடத்தக்க இன்னிங்ஸ்களை மறக்க முடியாது. இவர் பாஜகவிலிருந்து விலகி 2019, பிப்ரவரி 18ம் தேதி காங்கிரஸில் இணைந்தார்.

மேலும் படிக்க

கீர்த்தி ஆசாத் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் கீர்த்தி ஆசாத்
பிறந்த தேதி 02 Jan 1959 (வயது 67)
பிறந்த இடம் பூர்னியா, பீகார்
கட்சி பெயர் Indian National Congress
கல்வி Graduate
தொழில் விளையாட்டு வீரர், பத்திரிகையாளர், சமூக சேவகர்
தந்தை பெயர் பகவத் ஜா ஆசாத்
தாயார் பெயர் திருமதி. இந்திரா ஜா ஆசாத்
துணைவர் பெயர் திருமதி பூனம் ஆசாத்
குழந்தைகள் 2 மகன்(கள்)

கீர்த்தி ஆசாத் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹2.81 CRORE
சொத்துக்கள்
₹2.85 CRORE
கடன்கள்
₹4.32 LAKHS

கீர்த்தி ஆசாத் சுவாரசிய தகவல்கள்

கீர்த்தி ஆசாத் நலிவடைந்தவர்களுக்காக கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

கீர்த்தி ஆசாத் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2019: பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் கீர்த்தி ஆசாத். இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில், நான் இன்று திரு ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். அவருக்கு பாரம்பரிய மிதிலியா முறையில் பாராட்டு தெரிவித்தேன் என்று கூறியுள்ளார்.
  • 2015: தில்லி கிரிக்கெட் சங்கத்தில் முறைகேடுகள் நடந்ததாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக பாரதிய ஜனதா கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
  • 2015: கீர்த்தி ஆசாத் துணை கமிட்டி 2, மதிப்பீட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆனார். 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை இப்பதவியில் நீடித்தார்.
  • 2014: கீர்த்தி ஆசாத் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஊரக வளர்ச்சித் துறையின் நிலைக்குழு உறுப்பினராகவும், உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவம், நாடாளும்ற தொகுதி வளர்ச்சி திட்டத்தின் கமிட்டி உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.
  • 2014: கீர்த்தி ஆசாத் மீண்டும் அலி அஷ்ரப் பாட்மியை தோற்கடித்து அதன் மூலம் அவரது தர்பங்கா தொகுதியை தக்கவைத்துக் கொண்டார். பின்னர் 2014 ஆகஸ்ட் மாதம் 4ம் நாள் முதல் 2016 ஏப்ரல் 30ம் தேதி வரை வரை அவர் நாடாளுமன்ற மதிப்பீட்டு குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
  • 2009: கீர்த்தி ஆசாத் மனிதவள அபிவிருத்தித் துறை நிலைக்குழு உறுப்பினராகவும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நிலைக் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். ஆகஸ்டு 21 ம் தேதி அவர் பணியாளர், பொது குறைபாடுகள், சட்டம் மற்றும் அமைச்சகத்தின் நிலைக்குழு உறுப்பினராகவும் பாராளுமன்ற வளாக கூட்டுக் குழுவின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். மேலும் அவர் காதி மற்றும் கிராமிய கைத்தொழில் அமைப்பின் உறுப்பினராகவும், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு, ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்
  • 2009: கீர்த்தி ஆசாத் மீண்டும் பதினைந்தாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2009 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி அவர் ஹவுஸ் கமிட்டியின் உறுப்பினராக ஆனார். கீர்த்தி ஆசாத் இந்த குழுவின் உறுப்பினராக 18 மே 2014 வரை இருந்தார்.
  • 2004: கீர்த்தி ஆசாத் தர்பாங்காவில் போட்டியிட்டு ஆர்.ஜே.டி வேட்பாளர் எம்.டி. அலி அஷ்ரஃப் ஃபட்மிக்கு எதிராக 143,463 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
  • 1999: கீர்த்தி ஆசாத் தர்பங்காவில் போட்டியிட்டு பதிமூன்றாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆர்.ஜே.டி யின் எம்.டி. அலி அஷ்ரஃப் ஃபட்மியை தோற்கடித்தார்.
  • 1993: கீர்த்தி ஆசாத் தில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 1998 ஆம் ஆண்டு வரை அவர் அப்பதவியில் பணியாற்றினார்.

முந்தைய வரலாறு

  • 1981: வெல்லிங்டனில் பிப்ரவரி 21 முதல் 25 வரை நடந்த நியூஸிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் முறையாக பங்கேற்றார். 1983 ல் அகமதாபாத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தனது கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடினார்.
  • 1980: கீர்த்தி ஆசாத் மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். ஷார்ஜாவில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஷத் தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
  • 1976: கீர்த்தி ஆசாத் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். அவர் தில்லி அணியின் ஆல் ரவுண்டராக திகழ்ந்தார்.

கீர்த்தி ஆசாத் சாதனைகள்

கீர்த்தி ஆசாத் மிக பிரபலமான கிரிக்கெட் வீரர் மற்றும் தொலைக்காட்சி வர்ணனையாளர். 1983ம் ஆண்டு ப்ரூடென்சியல் உலக கோப்பை அணி வெற்றி பெற்ற இந்திய அணியில் கீர்த்தி ஆசாத்தும் முக்கிய வீரராக இடம் பெற்றிருந்தார்.

கீர்த்தி ஆசாத் தில்லி மற்றும் வடக்கு மண்டல கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தார். அவர் ஏழு டெஸ்ட் போட்டிகளிலும் இருபத்தைந்து ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+