முகப்பு
 » 
எம். வீரப்ப மொய்லி

எம். வீரப்ப மொய்லி

எம். வீரப்ப மொய்லி

மார்பாடி வீரப்ப மொய்லி இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.

எம். வீரப்ப மொய்லி சுயசரிதை

மார்பாடி வீரப்ப மொய்லி இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். கர்நாடகத்தைச் சேர்ந்தவர். சிக்கப்பல்லபூர் லோக்சபா தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் ஆவார். முன்னாள் மத்திய பெட்ரோலியம், சட்டத்துறை அமைச்சரும் ஆவார்.

2009ம் ஆண்டு சிக்கப்பல்லபூர் தொகுதியிலிருந்து மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்தவர் வீரப்ப மொய்லி.

2014 தேர்தலில் சிக்கபல்லபூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆந்திர பிரதேச மாநிலத்துக்கான காங்கிரஸ் பொறுப்பாளராக செயல்படுகிறார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நெருங்கிய ஆலோசகரும் கூட.

மேலும் படிக்க
By Shalini Updated: Tuesday, February 19, 2019, 01:51:58 PM [IST]

எம். வீரப்ப மொய்லி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் எம். வீரப்ப மொய்லி
பிறந்த தேதி 12 Jan 1940 (வயது 84)
பிறந்த இடம் மூட்பித்ரி, தக்ஷின கன்னடா மாவட்டம், கர்நாடகா
கட்சி பெயர் Indian National Congress
கல்வி Graduate Professional
தொழில் அரசியல்வாதி, எம்.பி, வழக்கறிஞர், எழுத்தாளர்,கவிஞர்
தந்தை பெயர் பூவம்மா
தாயார் பெயர் தம்மையா
இணையதளம் http://www.moily.org
சமூக வலைதளங்கள் சமூக வலைதளங்கள்:

எம். வீரப்ப மொய்லி நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹9.79 CRORE
சொத்துக்கள்:₹13.74 CRORE
கடன்கள்: ₹3.94 CRORE

எம். வீரப்ப மொய்லி சுவாரசிய தகவல்கள்

பல்வேறு முன்னணி பத்திரிகைகள், மின்னணு ஊடகங்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். பல்வேறு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். அதில் முக்கியமானது Unleashing India - The Fire of Knowledge. இதுதவிர ஸ்ரீ ராமாயணா மஹன்வேஷனம் என்ற நூலையும் எழுதியுள்ளார்.

இந்தியப் பொருளாதாரம் குறித்த மிகுந்த புரிதல் உண்டு. இந்திய நிதிக் கட்டமைப்பு, மாநிலங்களுக்குத் தேவையான மேக்ரோ மற்றும் மைக்ரோ நிதித் தேவைகள் குறித்தும் நன்கு அறிந்தவர்.

இவருக்குப் பிடித்த விளையாட்டு கிரிக்கெட்.

எம். வீரப்ப மொய்லி அரசியலில் கடந்து வந்த பாதை

2015
  • 2015 ஜனவரி 29 ல் பொது நோக்கக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2014
  • 16வது லோக்சபாவுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (2வது முறை). 2014 செப்டம்பர் 1ம் தேதி நிதித்துறை உறுப்பினர், நிலைக்குழு தலைவர், வெளியுறவுத்துறை ஆலோசனைக் கமிட்டி, வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறையில் செயல்பட்டு வருகிறார்.
2009
  • 2009ம் ஆண்டு 15வது லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 முதல் 2012 வரை மத்திய நிதி, நீதித்துறை, கம்பெனி விவகாரம், மின்சாரம், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு ஆகிய அமைச்சர் பதவிகளை வகித்தார்.
1992
  • 1992 முதல் 1994 வரை கர்நாடக முதல்வராக இருந்தார்.
1990
  • 1990ல் கர்நாடக அமைச்சரவையில் கல்வித்துறை கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
1989
  • 1989ல் கர்நாடக அமைச்சரவையில் சட்டத்துறை கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
1983
  • கர்நாடக சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்த வீரப்ப மொய்லி, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரானார்.
1980
  • 1980- 83 காலகட்டத்தில் கர்நாடக அமைச்சரவையில் நிதித்துறை கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
1975
  • கர்நாடக அமைச்சரவையில் சிறு தொழில்துறை இணை அமைச்சரானார்.
1972
  • 1972 முதல் 1979 வரை கர்நாடக சட்டசபை உறுப்பினாராக இருந்தார் (6 முறை)

முந்தைய வரலாறு

Early 60's
  • மங்களூரில் உள்ள ஹம்பன்கட்டாவில் உள்ள அரசுக் கல்லூரியில் (தற்போது இது பல்கலைக்கழக கல்லூரியாகி விட்டது) பிஏ படித்தார். பின்னர் பெங்களூரு பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் பிஎல் முடித்தார்.
Early 40's
  • 5 வயது பையனாக மொய்லி இருந்தபோது அவரது குடும்பத்தினர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர், அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றினார். அப்போது தனது தாயாரின் மடியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் மொய்லி. இந்த சம்பவம் அவரது மனதில் ஆறாத வடுவாக பதிந்து விட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் நீதிக்கான அவரது தேடலும் தொடங்கியது.

எம். வீரப்ப மொய்லி சாதனைகள்

பல்வேறு குடிநீர்த் திட்டங்கள், வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டங்கள், வீட்டு வசதித் திட்டங்களை அமல்படுத்தினார்.

கர்நாடகத்தின் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு வரலாறு காணாத அளவுக்கு உதவினார். கர்நாடக நீர்ப்பாசனப் பரப்பளவு அதிகரிக்க இவரே முக்கியக் காரணம்.

1992-93, 1994-95, 1980-81, 1981-82, 1983-83 ஆகிய ஆண்டுகளில் கர்நாடகத்தின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

நிதி அமைச்சராக இருந்தபோது ஒவ்வொரு முறையும் உபரி வருவாயை உருவாக்கி சாதனை படைத்தார்.

வருவாய் சீர்திருத்த ஆணையத்தின் தலைவராக இருந்தார்.

அமீன் சத்பாவனா விருது - 2000
தேவராஜ் அர்ஸ் பிரசாஷ்தி - 2001
ஆர்யபட்டா விருது - 2001
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் விருது - 2002
மூர்த்திதேவி விருது - 2007
சரஸ்வதி சம்மான் - 2014

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X