Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணீஷ் சிசோடியா

மணீஷ் சிசோடியா
தொழில்முறை பத்திரிக்கையாளரான மணீஷ் சிசோடியா, ஜீ நியூஸ் மற்றும் அகில இந்திய வானொலியில் பணியாற்றியுள்ளார். மேலும் அரசுசாரா நிறுவனமான பரிவர்தன்-ல் தன்னார்வலராகவும் சிறப்பாக செயல்பட்டவர்.
By Zainab Ashraf | Tuesday, February 19, 2019, 01:36:47 PM [IST]

மணீஷ் சிசோடியா சுயசரிதை

தொழில்முறை பத்திரிக்கையாளரான மணீஷ் சிசோடியா, ஜீ நியூஸ் மற்றும் அகில இந்திய வானொலியில் பணியாற்றியுள்ளார். மேலும் அரசுசாரா நிறுவனமான பரிவர்தன்-ல் தன்னார்வலராகவும் சிறப்பாக செயல்பட்டவர். 2011ல் அன்னா ஹாசாரே-ஆல் முன்னெடுக்கப்பட்ட "ஊழலுக்கு எதிரான இந்தியா" எனும் இயக்கத்தின் உறுப்பினராகவும் திகழ்ந்தார். ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகார குழுவின் உறுப்பினராக இருக்கும் மணீஷ் சிசோடியா, 2013ல் நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் படிக்க

மணீஷ் சிசோடியா தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் மணீஷ் சிசோடியா
பிறந்த தேதி 05 Jan 1972 (வயது 54)
பிறந்த இடம் ஹபூர் மாவட்டம், உத்தரபிரதேசம்
கட்சி பெயர் Aam Aadmi Party
கல்வி Others
தொழில் பத்திரிக்கையாளர்
தந்தை பெயர் தரம்பால் சிங்
தாயார் பெயர் N/A
துணைவர் பெயர் சீமா சிசோடியா
துணைவர் தொழில் இல்லத்தரசி
குழந்தைகள் 1 மகன்(கள்)
மதம் இந்து
இணையதளம் http://aamaadmiparty.org/teams/manish-sisodia

மணீஷ் சிசோடியா நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹-0.11 CRORE
சொத்துக்கள்
₹1.43 CRORE
கடன்கள்
₹1.54 CRORE

மணீஷ் சிசோடியா சுவாரசிய தகவல்கள்

அகில இந்திய வானொலியில் 'பூஜ்ய நேரம்' எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிசோடியா அவர்கள், 2006ல் பப்ளிக் காஷ் ரிசர்ச் பவுண்டேசன் எனும் அறக்கட்டளையை நிறுவினார். இவருக்கு பிடித்தமான உணவு வகை தென்னிந்திய மற்றும் பஞ்சாபி உணவுகள் ஆகும்.

மணீஷ் சிசோடியா அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2015: டெல்லி மாநிலத்தின் முதல் துணை முதலமைச்சராக பிப்ரவரி 14 அன்று பதவியேற்றுக்கொண்டார். இந்த தேர்தலில் பட்பார்கன்ச் தொகுதியிலிருத்து தேர்வானார் மணீஷ் சிசோடியா.
  • 2013: டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் நகுல் பரத்வாஜ்-ஐ தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.
  • 2012: மணீஷ் சிசோடியா தனது நண்பரான அரவிந்த் கெஜ்ரிவால் உடன் இணைந்து "ஆம் ஆத்மி கட்சி" எனும் அரசியல் கட்சியை உருவாக்கினார்.

முந்தைய வரலாறு

  • 2011: ஊழலுக்கு எதிரான அன்னா ஹாசாரேயின் இயக்கத்தில் இணைந்தார் சிசோடியா.
  • 2006: கெஜ்ரிவால் மற்றும் அபிநந்தன் சிக்ரி உடன் இணைந்து 2006ல் பப்ளிக் காஷ் ரிசர்ச் பவுண்டேசனை துவங்கிய சிசோடியா, கபீர் எனும் அரசுசாரா அமைப்பில் முக்கியஸ்தராகவும் இருந்தார்.
  • 1997: செய்தி தயாரிப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளராக ஜீ நியூஸ் தொலைகாட்சியில் சேர்ந்து, 2005 வரை அங்கேயே பணியாற்றினார்.
  • 1996: அகில இந்திய வானொலியில் 'பூஜ்ய நேரம்' எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
  • 1993: பாரதிய வித்யா பவனில் 1993ஆம் ஆண்டு மாஸ் கம்யூனிகேசன் டிப்ளமோ பட்டம் பெற்ற பின்னர் பத்திரிக்கையாளராக தனது தொழில் வாழ்க்கையை துவங்கினார் சிசோடியா.

மணீஷ் சிசோடியா சாதனைகள்

"சிறந்த கல்வி அமைச்சர்" என்ற விருதுக்கு சொந்தக்காரரான சிசோடியா, விருதுபெற்ற ஆவணப்படத்தை எடுத்தவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட 2016ன் சக்தி வாய்ந்த 100 இந்தியர்கள் பட்டியலில் இடம்பிடித்தார் சிசோடியா.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+