முலாயம் சிங் யாதவ் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் ஆவார். இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத பெரிய தலைவர். உத்தரப் பிரதேச முதல்வராக 3 முறை பதவி வகித்துள்ளார். 1989 முதல் 91 வரை, பின்னர் 1993 முதல் 95 வரை, பிறகு 2003 முதல் 2007 வரை அவர் முதல்வராக இருந்துள்ளார். முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவ். தற்போது அசம்கர் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக 1996 முதல் 1998 வரை இருந்துள்ளார். உ.பி சட்டசபைக்கு 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி கண்டவர் முலாயம் சிங். உபியில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வருபவர். தற்போது ஆறாவது முறையா அவர் லோக்சபா எம்.பியாக பதவி வகித்து வருகிறார்.
| முழுப் பெயர் | முலாயம் சிங் யாதவ் |
| பிறந்த தேதி | 21 Nov 1939 |
| இறந்த தேதி | 10 Oct 2022 (வயது 82) |
| பிறந்த இடம் | சபாய், எடாவா, உத்தரப் பிரதேசம் |
| கட்சி பெயர் | Samajwadi Party |
| கல்வி | Post Graduate |
| தொழில் | விவசாயி, அரசியல்வாதி, சமூக சேவகர் |
| தந்தை பெயர் | ஸ்ரீசுகர் சிங் யாதவ் |
| தாயார் பெயர் | மூர்த்தி தேவி |
| துணைவர் பெயர் | சாதனா யாதவ் |
| துணைவர் தொழில் | இல்லத்தரசி |
| குழந்தைகள் | 2 மகன்(கள்) |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.