Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபு மனோகர் பாரிக்கர்

பிரபு மனோகர் பாரிக்கர்
மனோகர் பாரிக்கர் அரசியல் வாழ்க்கை, பாம்பே ஐஐடியில் மெட்டலர்ஜிகல் இன்ஜினியரிங் படிப்பை முடித்ததுமே துவங்கியது. 1994ம் ஆண்டு பாரிக்கர் கோவா சட்டசபைக்கு பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
By Ajay M V | Sunday, March 17, 2019, 09:56:57 PM [IST]

பிரபு மனோகர் பாரிக்கர் சுயசரிதை

மனோகர் பாரிக்கர் அரசியல் வாழ்க்கை, பாம்பே ஐஐடியில் மெட்டலர்ஜிகல் இன்ஜினியரிங் படிப்பை முடித்ததுமே துவங்கியது. 1994ம் ஆண்டு பாரிக்கர் கோவா சட்டசபைக்கு பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவா முதல்வராக 2000மாவது ஆண்டில் பதவியேற்றார். ஐஐடியில் படித்த ஒருவர் மாநில முதல்வராக பதவியேற்றது அதுவே முதல் முறையாகும். சட்டம் மற்றும் நன்னடத்தை ஆகியவற்றில் தீவிர அக்கறை உள்ளவர் பாரிக்கர். இதனால், அவர் படிப்பை முடித்ததும் ஆர்எஸ்எஸ்சில் இணைந்தார். பள்ளிப்படிப்பை முடித்ததுமே ஆர்எஸ்எஸ்ஸில் இணைந்து முக்கிய சிஷ்டக்காக உயர்ந்தவர்.

மேலும் படிக்க

பிரபு மனோகர் பாரிக்கர் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் பிரபு மனோகர் பாரிக்கர்
பிறந்த தேதி 13 Dec 1955
இறந்த தேதி 17 Mar 2019 (வயது 63)
பிறந்த இடம் மபுசா
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Graduate Professional
தொழில் என்ஜீனியர்
தந்தை பெயர் கோபால்கிருஷ்ண பாரிக்கர்
தாயார் பெயர் ராதாபாய் பாரிக்கர்
துணைவர் பெயர் மேதா பாரிக்கர்
துணைவர் தொழில் தகவல் இல்லை
குழந்தைகள் 2 மகன்(கள்)
இணையதளம் www.goa.gov.in

பிரபு மனோகர் பாரிக்கர் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹2.97 CRORE
சொத்துக்கள்
₹3.4 CRORE
கடன்கள்
₹43.83 LAKHS

பிரபு மனோகர் பாரிக்கர் சுவாரசிய தகவல்கள்

2004ம் ஆண்டு இவரை சிறந்த முதல்வராக இந்தியா டுடே தேர்ந்தெடுத்தது. கோவாவில் இவருக்கு மிஸ்டர் கிளீன் என்ற பெயர் உண்டு. இவர் மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோதுதான் ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்தார். பாரிக்கர் பதவிக்காலத்தின்போதுதான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் மியான்மரில் இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக் நடவடிக்கையை எடுத்தது.

பிரபு மனோகர் பாரிக்கர் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2019: மனோகர் பாரிக்கர் 2019ம் ஆண்டு, மார்ச் 17ம் தேதி மரணமடைந்தார்
  • 2017 : கோவா முதல்வராக 2017ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி பதவியேற்றார் மனோகர் பாரிக்கர்.
  • 2014 : மனோகர் பாரிக்கருக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அருண் ஜேட்லிக்குப் பதில் இப்பதவிக்கு அவர் வந்தார்.
  • 2012 : 2012ம் ஆண்டு மார்ச்சில் நடந்த கோவா சட்டசபைத் தேர்தலில் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் தோல்வியடைந்தது.
  • 2007 : திகம்பர் காமத் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜகவை கோவா சட்டசபைத் தேர்தலில் தோற்கடித்தது.
  • 2005 : பாகவின் 4 எம்எல்ஏக்கள் சட்டசபையிலிருந்து ராஜினாமா செய்ததால் 2005ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி மனோகர் பாரிக்கர் அரசு சட்டசபையில் மைனாரிட்டி அரசாக மாறியது.
  • 2002 : 2002ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் மனோகர் பாரிக்கர். மீண்டும் முதல்வராக பணியாற்றினார்.
  • 2000 : 2000ம் ஆண்டு கோவா தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக முதல்வரானார். ஆனால் நீண்டகாலம் நீடிக்க முடியாமல் 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதியே இவரது பதவி முடிவுக்கு வந்தது.
  • 1999 : 1999ம் ஆண்டு ஜூன் முதல் நவம்பர் வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
  • 1994 : ஆர்எஸ்எஸில் நீண்ட காலம் பணியாற்றிய அவர் 1994ம் ஆண்டு தனது அரசியல் பணியைத் தொடங்கினார். கோவா சட்டசபைக்கு பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முந்தைய வரலாறு

  • 1981: ஆர்எஸ்எஸ்ஸில் உள்ளூர் இயக்குநராக உயர்ந்தார். வடக்கு கோவா ஆர்எஸ்எஸ் பிரிவில் தீவிரமாக களப் பணியாற்றினார். 1992ம் ஆண்டு ராம் ஜென்மபூமி இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார்.
  • 1978: மார்கோவாவில் உள்ள லயோலா உயர் நிலைப் பள்ளியில் படித்தார் பாரிக்கர். மராத்தியில் தனது பள்ளிப் படிப்பை படித்தார். 1978ம் ஆண்டு அவர் பாம்பே ஐஐடியில் மெட்டலர்ஜிகல் என்ஜீனியரிங் படிப்பை படித்தார்.
  • 1973: ஆர்எஸ்எஸ் அமைப்பில் முக்கிய சிஷ்டக் ஆக நியமிக்கப்பட்டார். அப்போது இவர் இன்டர்மீடியட் படித்துக் கொண்டிருந்தார். ஐஐடி படிப்பை முடித்த பிறகும் கூட அவர் தொடர்ந்து ஆர்எஸ்எஸ்ஸில் இணைந்து செயலாற்றினார்.
  • Early 1970s: பாரிக்கர் ஆர்எஸ்எஸ்ஸில் இணைந்தார். ஆர்எஸ்எஸ் தொண்டராக செயலாளற்றிய அவர் பல வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

பிரபு மனோகர் பாரிக்கர் சாதனைகள்

கோவா முதல்வராக முதல் முறை இவர் பதவி வகித்தபோது, மாநில நலனுக்காக பல திட்டங்களைக் கொண்டு வந்தார். தயானந்த் சமஜிக் சுரக்ஷா யோஜனா திட்டத்தைக் கொண்டு வந்தார். இதன் மூலம் மூத்த குடிமக்கள், கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு வகையான நிதி உதவிகளை செய்ய முடிந்தது. இது ஒரு மாதாந்திர ஓய்வூதியத் திட்டமாகும். மாணவர்களுக்கு வட்டி இல்லாத கடன் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். சைபரேஜ் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டன. காமேதனு திட்டத்தை கொண்டு வந்து பால் உற்பத்தியை அதிகரித்தார். முதல்வர் வேலைவாய்ப்புத் திட்டத்தைக் கொண்டு வந்து குறைந்த வட்டியில் சிறு தொழில் முனைவோருக்கு கடன் வழங்க வகை செய்தார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+