Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரியங்க் கார்கே

பிரியங்க் கார்கே
பிரியங்க் கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன் கார்கேயின் மூத்த மகன் ஆவார். அவர் முக்கிய காங்கிரஸ் தலைவராவார்.
By Rashmi | Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

பிரியங்க் கார்கே சுயசரிதை

பிரியங்க் கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன் கார்கேயின் மூத்த மகன் ஆவார். அவர் முக்கிய காங்கிரஸ் தலைவராவார். இவர் குல்பர்காவில் பிறந்தார், கிராஃபிக் வடிவமைப்பு மற்றும் அனிமேஷனில் டிப்ளமோ பட்டம் பெற்றார். இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் உறுப்பினராக இருந்தபோது அவரது தலைமைத்துவ குணங்கள் வெளிச்சத்திற்கு வந்தது. இது அவரது அரசியல் பயணத்திற்கான வழிகளைத் தந்தது. மாணவர் ஆர்வலராக இருந்த குறுகிய காலத்தில் அவர் காங்கிரஸில் சேர்ந்த உடன் விரைவில் கர்நாடகா மாநில இளைஞர் காங்கிரசின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் . 2008ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சித்தாபூர் தொகுதியில் போட்டியிட்டு தீவிர அரசியலில் நுழைந்தார். ஆனால் சிறு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார். 2013ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். 2016 ஆம் ஆண்டில் தகவல் அறிவியல் மற்றும் உயிர் தொழில்நுட்ப அமைச்சராக பொறுப்பேற்றார். 2018 ஆம் ஆண்டில் ஹெச்.டி.குமரசுவாமி கூட்டணி அரசில் சமூக நலத்துறை மற்றும் பின்தங்கிய வகுப்பு அமைச்சராக செயல்படுகிறார்.

மேலும் படிக்க

பிரியங்க் கார்கே தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் பிரியங்க் கார்கே
பிறந்த தேதி 22 Nov 1978 (வயது 47)
பிறந்த இடம் குல்பர்கா, கர்நாடகா
கட்சி பெயர் Indian National Congress
கல்வி 12th Pass
தொழில் சிறு தொழிலதிபர் +ஆலோசகர்
தந்தை பெயர் மல்லிகார்ஜுன கார்கே
தாயார் பெயர் ராதாபாய் கார்கே
துணைவர் பெயர் ஸ்ருதி பி கார்கே
துணைவர் தொழில் தொழில்
மதம் இந்து

பிரியங்க் கார்கே நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹16.54 CRORE
சொத்துக்கள்
₹16.83 CRORE
கடன்கள்
₹28.75 LAKHS

பிரியங்க் கார்கே சுவாரசிய தகவல்கள்

2016ம் ஆண்டு கர்நாடக அமைச்சரவையில் அமைச்சராக பதவியேற்றபோது பிரியங்க் கார்கேுக்கு வது மிக மிக குறைவு. இளம் அமைச்சர் அவர்தான். கிராபிக்ஸ் டிசைன் மற்றும் கம்ப்யூட்டர் அனிமேஷனில் அவர் அட்வான்ஸ்ட் டிப்ளமோ வைத்துள்ளார்.

புத்தகம் படிப்பது பிடிக்கும். அதிலும் காமிக் புத்தகம் மிகவும் பிடிக்குமாம்.

பிரியங்க் கார்கே அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2018: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்றத் தேர்தலில் சித்தாபூர் தொகுதியில் போட்டியிட்டு 4393 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு ஹெச். டி. குமாரசாமி அமைச்சரவையில், சமூக நல மற்றும் பின்தங்கிய வகுப்புத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
  • 2016: கர்நாடகா ஹைதராபாத் பிராந்தியத்திலேயே முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினர் உதவி மையம் தொடங்கி வைத்தார்.
  • 2016: டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 125 வது பிறந்த நாள் விழாவையொட்டி லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் உடன் இணைந்து பெங்களூரில் கொண்டாடவம், இதுதொடர்பாக பெங்களூரில் ஸ்கூல் ஆப் எக்கானாமிக்ஸை நிறுவ பாடுபட்டார்.
  • 2016: கர்நாடக அரசு உருவாக்கிய என்ஆர்ஐ கொள்கை மற்றும் தொழிற் கொள்கை (ஹைதராபாத் கர்நாடகா) உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார்.
  • 2016: லண்டனில் நடந்த உலக கல்வி மன்றம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
  • 2016: சித்தராமையா அரசில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 2014: லண்டன் காமன்வெல்த் பாராளுமன்ற கூட்டு குழு கூட்டத்தில் சேர்ந்தார்.
  • 2013: இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் சித்தாபூர் தொகுதியில் போட்டியிட்டு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரான வால்மிகி நாயக்கை விட 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
  • 2011: கர்நாடகா மாநில இளைஞர் காங்கிரஸின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2013ம் ஆண்டு வரை அப்பணியை செய்து வந்தார்.
  • 2008: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளராக சித்தாபூர் தொகுதியில் போட்டியிட்டு 1600 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரிடம் தோற்றார்.
  • 2007: கர்நாடகா மாநில இளைஞர் காங்கிரசின் பொதுச் செயலாளராக அவர் உயர்த்தப்பட்டார். 2011ம் ஆண்டு வரை அப்பதவியில் வகித்து வந்தார்.
  • 2005: கர்நாடகா மாநில இளைஞர் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஆனார்.
  • 2001: 2005ம் ஆண்டு வரை கர்நாடகா மாநில இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றினார்.
  • 2000: 2001ம் ஆண்டு வரை கல்லூரியின் இந்திய தேசிய மாணவர் சங்க பொது செயலாளராக நியமிக்கப்பட்டார்.
  • 1999: பிரியங்க் கார்கே இந்திய தேசிய காங்கிரஸில் முறையாக இணைந்தார்.

முந்தைய வரலாறு

  • 1996 - 2001: 5 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய மாணவர் படையில் கேடட் (ஏர் விங்) ஆக இருந்தார். 2 ஆண்டுகள் சிறந்த கேடட் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவா மற்றும் கர்நாடகாவில் நடந்த தேசிய ஒருங்கிணைப்பு முகாம்களில் கலந்து கொண்டார். ஒரிசா, ருர்கேலாவில் அவர் குடியரசு தினத் தேர்வு முகாமில் கலந்து கொண்டார். கர்நாடகாவில் 3 அடிப்படை முகாம்களுக்கு சென்றுள்ளார். கர்நாடகாவில் இயந்திர கிளைடர் பயிற்சியில் ஐந்து முறை தேர்வாகினார்.

பிரியங்க் கார்கே சாதனைகள்

கர்நாடக அரசுக்காக, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்கியவர் இவர்.

கர்நாடக தொழில் துறையின் "யுவ யுகா" ஊழியர் பயிற்சித் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

சித்தாபூரில் தேசிய முதலீட்டு உற்பத்தி மண்டலத்தை உருவாக்குவதற்காக 12,500 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பேட்டையை ஏற்படுத்தினார்.

தும்கூர் அங்கன்வாடிகளில் சோதனை அடிப்படையிலான இ-ஐசிடிஎஸ் தொடங்கப்பட்டது.

ஹைதராபாத் கர்நாடக மக்களுக்கு 371 (ஜே) திருத்தத்தை உறுதி செய்வதில் பிரியங்க் கார்கே மிக முக்கிய பங்கு வகித்தார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நாடுகளை வரவழைத்ததிலும், இன்வெஸ்ட் கர்நாடக மாநாட்டிற்கும் முக்கியப் பங்காற்றியவர் பிரியங்க் கார்கே.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+