முகப்பு
 » 
ஆர்.சரத்குமார்

ஆர்.சரத்குமார்

ஆர்.சரத்குமார்

ஆர். சரத்குமார் ஒரு இந்திய திரைப்பட நடிகர், அரசியல்வாதி மற்றும் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆவார்.

ஆர்.சரத்குமார் சுயசரிதை

ஆர்.சரத்குமார் ஒரு இந்திய திரைப்பட நடிகர், அரசியல்வாதி மற்றும் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆவார். சரத்குமார் தனது சொந்த அரசியல் கட்சியான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை ஆகஸ்ட் 31, 2007 அன்று தொடங்கினார். திரைப்பட துறையில் பல்வேறு மொழிகளில் இவர் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத் துறையில் நன்கு அறியப்பட்ட நடிகர்.

1996 ஆம் ஆண்டில், சரத் குமார் அரசியலில் நுழைந்தார். திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) மூலம் அரசியலுக்குள் வந்தார். 1998ல் திருநெல்வேலியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு சரத்குமார் தோல்வியடைந்தார். ஜூலை 2001ல், திமுக கட்சி அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கியது. 2006ல் நடந்த சட்டமன்றத் தேர்தல் சரத்குமார் அதிமுகவில் இணைந்தார். ஆனால் அக்டோபர் 2006 இல், அவரது மனைவி ராதிகா கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து நவம்பர் 2006 இல் சரத்குமார் அதிமுகவிலிருந்து விலகினார்.

2011 சட்டமன்றத் தேர்தலில், சரத்குமார் அதிமுக கூட்டணியில் சேர்ந்து தென்காசியில் போட்டியில் வெற்றி பெற்றார். 2016 சட்டமன்றத் தேர்தலில், திருச்செந்தூர் தொகுதியில் சரத்குமார் திமுக வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனிடம் தோற்றார்.

மேலும் படிக்க
By Keshav Karna Updated: Sunday, January 31, 2021, 12:11:19 PM [IST]

ஆர்.சரத்குமார் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் ஆர்.சரத்குமார்
பிறந்த தேதி 14 Jul 1954 (வயது 69)
பிறந்த இடம் சென்னை
கட்சி பெயர் All India Anna Dravida Munnetra Kazhagam
கல்வி B.Sc.
தொழில் நடிகர், அரசியல்தலைவர்
தந்தை பெயர் எம் ராமநாதன்
தாயார் பெயர் புஷ்பலீலா ராமநாதன்

ஆர்.சரத்குமார் நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹46.68 CRORE
சொத்துக்கள்:₹64.32 CRORE
கடன்கள்: ₹17.64 CRORE

ஆர்.சரத்குமார் சுவாரசிய தகவல்கள்

தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழிகளைத் தவிர, சரத்குமாருக்கு ரஷ்ய மொழியும் தெரியும்.
சரத்குமார் ஒரு நடிகராக மாறுவதற்கு முன்பு ஒரு பத்திரிகையாளராக இருந்தார்.

ஆர்.சரத்குமார் அரசியலில் கடந்து வந்த பாதை

1996
  • 1996 ஆம் ஆண்டில், சரத் குமார் அரசியலில் நுழைந்தார். திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) மூலம் அரசியலுக்குள் வந்தார்.

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X