Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொன். இராதாகிருஷ்ணன்

பொன். இராதாகிருஷ்ணன்
தமிழ்நாட்டில் தீவிரமாக செயல்படும் பா. ஜ.
By Keshav Karna | Sunday, March 7, 2021, 02:32:45 PM [IST]

பொன். இராதாகிருஷ்ணன் சுயசரிதை

தமிழ்நாட்டில் தீவிரமாக செயல்படும் பா.ஜ.க தலைவர்களில் ஒருவர் பொன்.ராதாகிருஷ்ணன். வழக்கறிஞரான இவர் கன்னியாகுமரியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2017 ஆம் ஆண்டு இவர், மத்திய நிதித்துறை இணை அமைச்சராகவும், கப்பல் துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தார். 1991 முதல் தொடர்ந்து நாகர்கோவில் தொகுதியில் இருந்து ஐந்து முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இருப்பினும் அந்த ஐந்து தேர்தல்களில் நான்கு முறை தோல்வியடைந்த பொன். இராதாகிருஷ்ணன் 1999 மக்களவைத் தேர்தலில் மட்டுமே வெற்றி பெற்றார். ஆயினும் 2014 ஆம் ஆண்டு கன்னியாகுமரி தொகுதியில் 16 வது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1999-2004 காலகட்டத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

2019 லோக்சபா தேர்தலில் பொன். ராதாகிருஷ்ணன் குமரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இங்கு காங்கிரஸ் சார்பாக வெற்றிபெற்ற வசந்தகுமார் எம்பி காலமானதை அடுத்து இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதனால் பொன். ராதாகிருஷ்ணன் பாஜக சார்பாக குமரி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார்.

மேலும் படிக்க

பொன். இராதாகிருஷ்ணன் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் பொன். இராதாகிருஷ்ணன்
பிறந்த தேதி 01 Mar 1952 (வயது 74)
பிறந்த இடம் ஆலதான்கரை கிராமம், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் (தமிழ்நாடு)
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Graduate Professional
தொழில் வழக்கறிஞர்
தந்தை பெயர் திரு.பொன்னையா ஐயப்பன்
தாயார் பெயர் திருமதி. தங்ககனி
துணைவர் பெயர் திருமணமாகவில்லை

பொன். இராதாகிருஷ்ணன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹7.5 CRORE
சொத்துக்கள்
₹7.5 CRORE
கடன்கள்
N/A

பொன். இராதாகிருஷ்ணன் சுவாரசிய தகவல்கள்

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான பொன்.இராதாகிருஷ்ணன், 1991 முதல் 7 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 2 முறை மட்டுமே வெற்றிபெற்றுள்ளார்.

பொன். இராதாகிருஷ்ணன் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2019: 2019 லோக்சபா தேர்தலில் பொன். ராதாகிருஷ்ணன் குமரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
  • 2017 : மத்திய நிதித்துறை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 2014 : 16-வது மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்.இராதாகிருஷ்ணன், அங்கு காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமாரை 1,28,662 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
  • 2009 : கன்னியாகுமரி தொகுதியில் இருந்து 15-வது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு 33% வாக்குகளைப் பெற்றும் திமுக வேட்பாளரான டேவிட்ஸன் ஹெலனிடம் தோல்வியடைந்தார்.
  • 2004 : நாகர்கோவில் தொகுதியில் சிபிஎம் கட்சியின் பெர்லமினிடம் தோல்வியடைந்தார்.
  • 1999 : அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தில் 2004 வரை இணை அமைச்சராகவும் பணியாற்றினார்.
  • 1999 : இறுதியாக தனது பழைய போட்டியாளரான டென்னிஸை தோற்கடித்த பொன்.இராதாகிருஷ்ணன், நாகர்கோவில் தொகுதியில் 50% வாக்குகளைப் பெற்றார்.
  • 1998 : நாகர்கோவிலில் மூன்றாவது முறையாக மீண்டும் டென்னிஸிடம் தோல்வியடைந்தார்.
  • 1996 : 11 வது மக்களவைத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் டென்னிஸிடம் தோல்வியடைந்த இவர், 30% வாக்குகளைப் பெற்றார்.
  • 1991 : 1991 மக்களவை தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்ட பொன்.இராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் டென்னிஸிடம் 2,79,813 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

பொன். இராதாகிருஷ்ணன் சாதனைகள்

மத்திய நிதித்துறை இணை அமைச்சராக பொன். இராதாகிருஷ்ணன் இருந்த காலக்கட்டத்தில்,2018 ஆம் ஆண்டில் மட்டும் 11,703 கோடி ரூபாய் மதிப்புள்ள 67 வெளிநாட்டு நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.மூத்த குடிமக்கள் ரூ15 லட்சம் வரம்பிற்கு உட்பட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை துவங்க அனுமதிக்கும் திட்டத்தையும் செயல்படுத்தியுள்ளார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+