Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்

ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்
கலோனல் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் 1970ம் ஆண்டு ஜனவரி 29ம் நாள் பிறந்தார். இவர் இந்திய அரசியல்வாதி ஆவார்.
By Anushree | Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் சுயசரிதை

கலோனல் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் 1970ம் ஆண்டு ஜனவரி 29ம் நாள் பிறந்தார். இவர் இந்திய அரசியல்வாதி ஆவார். துப்பாக்கி சுடும் வீரரான இவர் டபுள் டிராப் பிரிவில், 2004ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 20 வருடமாக துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பல பதக்கங்களைப் பெற்றுள்ளார். பத்ம ஸ்ரீ விருதை 2005 இல் பெற்றார். ராணுவம் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் இருந்து ஓய்வு பெற்றபின், 2014 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2017 ஆம் ஆண்டில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு இணை அமைச்சராக (தனிப் பொறுப்பு) நியமிக்கப்பட்டார்.

மேலும் படிக்க

ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்
பிறந்த தேதி 29 Jan 1970 (வயது 56)
பிறந்த இடம் ஜெய்சால்மர், ராஜஸ்தான்
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Graduate
தொழில் பாதுகாப்பு துறை சேவைகள் (ஓய்வு), விளையாட்டுவீரர் (ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்)
தந்தை பெயர் ஸ்ரீ லட்சுமண் சிங் ரத்தோர்
தாயார் பெயர் திருமதி. மஞ்சு ரத்தோர்
துணைவர் பெயர் டாக்டர். காயத்ரி ரத்தோர்
துணைவர் தொழில் தகவல் இல்லை
குழந்தைகள் 1 மகன்(கள்) 1 மகள்(கள்)

ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹8.36 CRORE
சொத்துக்கள்
₹8.37 CRORE
கடன்கள்
₹1.17 LAKHS

ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் சுவாரசிய தகவல்கள்

விளையாட்டு மற்றும் சமூக சேவையில் மிகவும் ஆர்வம் கொண்டவர்.

ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2018: மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சர் (தனிப் பொறுப்பு), மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு).
  • 2017: மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சர் (தனிப் பொறுப்பு), மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை (தனிப் பொறுப்பு). அமைச்சராக 2017ம் ஆண்டு செப்டம்பர் 3 முதல் 2018ம் ஆண்டு மே 14வரை பணியாற்றினார்.
  • 2014: 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் 2014ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி வரை பாதுகாப்புத் துறை நிலைக் குழுவில் உறுப்பினராக செயல்பட்டார். 2014ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி முதல் 2017ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி வரை தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மாநில அமைச்சராகவும் இருந்தார்.
  • 2014: ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ரூரல் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டாக்டர். சி. பி.ஜோஷியை தோற்கடித்து பதினாறாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்

ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் சாதனைகள்

பத்ம ஸ்ரீ' மற்றும் 'அதி விஷிஸ்த் சேவா பதக்கம்' பெற்றுள்ளார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+