• search
முகப்பு
 » 
அரசியல்வாதிகள்
 » 
ராம் விலாஸ் பஸ்வான்

ராம் விலாஸ் பஸ்வான்

சுயசரிதை

ராம் விலாஸ் பஸ்வான் மறைந்த ஸ்ரீ ஜாமுன் பாஸ்வான் மற்றும் மறைந்த சியா தேவி ஆகியோருக்கு பிறந்தார். தலித் குடும்பத்தில் பீகாரில் உள்ள காகர்யா மாவட்டத்தில் உள்ள ஷாஹார்பானி கிராமத்தில் பிறந்தார். பஸ்வான் சட்ட இளங்கலை பட்டமும் மற்றும் கோசி கல்லூரி, பில்கி மற்றும் பாட்னா பல்கலைக்கழகத்தின் கலைப் பட்டம் ஆகியவற்றையும் பெற்றுள்ளார். 1960 களில் அவர் ராஜ்குமாரி தேவியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரை 1981ம் ஆண்டிலேயே விவாகரத்து செய்து விட்டதாக 2014ஆம் ஆண்டு தேர்தல் சமயத்தில் அவர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். மேலும், 1983 ஆம் ஆண்டில் அமிர்தசரஸைச் சேர்ந்த ஏர் ஹோஸ்டஸ் ரெனா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. அவரது மகன் சிராக் பஸ்வான் நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் ஆவார்.

சிராக் தற்போது பீகார் அமைச்சரவையில், நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது பகிர்மான துறை அமைச்சராக உள்ளார். ராம் விலாஸ் பஸ்வான் சமுயுக்த சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து 1969 ல் பீகார் சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் 1974 ல் லோக்தள் கட்சியில் சேர்ந்தார். அதன் பொது செயலாளர் ஆனார். அவசர நிலையை எதிர்த்தார். அந்த காலகட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவர் 1977 ல் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹஜ்பூர் தொகுதியிலிருந்து 1980, 1989, 1996 மற்றும் 1998, 1999, 2004, மற்றும் 2014ஆண்டுகளில் லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவர் ஆவார். அவர் எட்டு முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2000 ஆம் ஆண்டில், லோக் ஜன சக்தி கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2004 ஆம் ஆண்டில் அவர் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் இணைந்தார். வேதி மற்றும் உரங்கள் மற்றும் எஃகு துறை அமைச்சராகவும் இருந்தார். 2004 லோக்சபா தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். ஆனால் 2009 தேர்தலில் தோல்வி அடைந்தார் . 2010 முதல் 2014 வரை ஒரு ராஜ்ய சபா உறுப்பினராக இருந்த பின்னர் 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஹஜிப்பூர் தொகுதியில் இருந்து பதினாறாவது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பஸ்வான் 1969 ஆம் ஆண்டில் பீகார் மாநில சட்டசபைக்கு சம்யுக்த சோசியலிசக் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1974 ஆம் ஆண்டில், லோக்தள் பொதுச் செயலாளராக ஆனார். 1975 ஆம் ஆண்டில், இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, ​​அவர் கைது செய்யப்பட்டார் மற்றும் முழுநேரத்தையும் சிறைச்சாலையில் கழித்தார். 1977 ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்ட அவர், ஜனதா கட்சியின் உறுப்பினராகவும், முதல் தடவையாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்தார்.

1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் ஹஜ்பூர் தொகுதியிலிருந்து ஏழாவது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1983 ஆம் ஆண்டில் அவர் தலித் விடுதலை மற்றும் நலன்புரிவிற்கான ஒரு அமைப்பான தலித் சேனாவை நிறுவினார். 1989 ஆம் ஆண்டில் ஒன்பதாவது மக்களவைக்கு பஸ்வான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவருக்கு விபி சிங் அமைச்சரவையில், தொழிலாளர் மற்றும் நலத் துறை அமைச்சர் பதவி கிடைத்தது. பின்னர் 1996ல் ரயில்வே அமைச்சராக பதவியேற்றார். 1998 ஆம் ஆண்டு வரை அந்த பதவியை அவர் தொடர்ந்து வந்தார். அதன்பிறகு, அவர் அக்டோபர் 1999 முதல் செப்டம்பர் 2001 வரை தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார். ஏப்ரல் 2002 நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது நிலக்கரி துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.

2000 ஆம் ஆண்டில் லோக் ஜன சக்தி கட்சியைத் தொடங்கினார். ஜனதாதளத்திலிருந்து விலகினார். 2004 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பஸ்வான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இணைந்தார். வேதி மற்றும் உரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 2005 பீகார் மாநிலத் தேர்தலில், பஸ்வான் கட்சி இந்திய தேசிய காங்கிரசுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டது. பீகாரில் தொங்கு சட்டசபை உருவானது. லாலு , பஸ்வான் ஆதரவைக் கோரினார். ஆனால் பஸ்வான் தர மறுத்து விட்டார். பீகார் ஆளுநராக இருந்த பத்தா சிங், சட்டமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். பீகாரில் ஜனாதிபதி ஆட்சி அமலானது.

நவம்பர் 2005 பீகார் மாநிலத் தேர்தலில் பஸ்வான் அமைத்த மூன்றாவது அணி பெரும் தோல்வியைத் தழுவியது. லாலு பிரசாத் யாதவ்-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று அரசு அமைத்தது.

ராம் விலாஸ் பஸ்வான் ஹஜிப்பூர் தொகுதியில் இருந்து 2014 பொதுத் தேர்தலில் பதினாறாவது மக்களவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது மகன் சிராக் பஸ்வான் பீகாரில் ஜமுய் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் ராம் விலாஸ் பஸ்வான்
பிறந்த தேதி 05 Jul 1946 (வயது 73)
பிறந்த இடம் ஷாஹார்பானி , காகரியா மாவட்டம், பீகார்
கட்சி பெயர் Ljnsp
கல்வி Post Graduate
தொழில் சமூக சேவகர்
தந்தை பெயர் மறைந்த திரு ஜாமுன் பஸ்வான்
தாயார் பெயர் மறைந்த திருமதி. சியா தேவி
துணைவர் பெயர் திருமதி. ரீனா பஸ்வான்
துணைவர் தொழில் சமூக சேவகர்
மகன்கள் 1
மகள்கள் 3

தொடர்பு

நிரந்தர முகவரி ஷாஹார்பானி கிராமம் மற்றும் அஞ்சல் , மந்திரி டோலா பெல்லாஹி, காகரியா மாவட்டம், பீகார் -851204
தற்காலிக முகவரி 12,ஜன்பத், புது தில்லி - 110011
தொடர்பு எண் 01123017681
மின்னஞ்சல் ramvilas.p@sansad.nic.in
இணையதளம் ljp.co.in

சுவாரஸ்ய தகவல்கள்

ராம் விலாஸ் பஸ்வான் எட்டு முறை மக்களவை உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.
2002 ஆம் ஆண்டு விஜய் சக்தியின் தலைவர் ஆவார்.
எஸ் சி மற்றும் எஸ் டி யின் நலக் குழுவின் உறுப்பினராக 1977-78ம் ஆண்டில் இருந்தார். டி டி எ ஆலோசனைக் குழு உறுப்பினராக 1980-85 வரை செயல்பட்டார்.
பாராளுமன்ற அதிகாரபூர்வ மொழி கமிட்டி உறுப்பினராக 1980-85 ஆண்டிலும் மற்றும் 1989-95 ஆண்டிலும் இருந்தார்.
1991-1996 வரை எய்ம்ஸ் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்தார். நீதிமன்றம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், 1998-99
இந்தியா- டிரினிடாட் மற்றும் டொபாகோ பாராளுமன்ற நட்பு குழு (ஜூலை 2010 முதல்)
அவர் சதுரங்கத்திலும் ஆர்வம் கொண்டவர்.
நிகர மதிப்பு96.42 LAKHS
சொத்துக்கள்96.42 LAKHS
கடன்கள்N/A

Disclaimer: The information relating to the candidate is an archive based on the self-declared affidavit filed at the time of elections. The current status may be different. For the latest on the candidate kindly refer to the affidavit filed by the candidate with the Election Commission of India in the recent election.

சமூக வலைதளம்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more