Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எஸ். ராஜேந்திரன்

எஸ். ராஜேந்திரன்
விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தவர் எஸ். ராஜேந்திரன்.
By Ajay M V | Friday, March 29, 2019, 05:33:11 PM [IST]

எஸ். ராஜேந்திரன் சுயசரிதை

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தவர் எஸ்.ராஜேந்திரன். சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 2014 ம் ஆண்டு நடந்த தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியின் வேட்பாளராக விழுப்புரம் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய வேதி, உரத்துறை நிலைக்குழு உறுப்பினராகவும், சிவில் விமானப் போக்குவரத்து துறை ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். பிப்ரவரி 23,2019 அன்று திண்டிவனம் அருகே நடந்த கோரமான சாலை விபத்தில் உயிரிழந்தார். ராஜந்திரனுக்கு வயது 62.

ராஜேந்திரன் 1956ம் ஆண்டு பிறந்தார். வானூர் ஒன்றியம் ஆதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்பராயன் - பாக்கியம் தம்பதியின் மகன்தான் ராஜேந்திரன். ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். இவர் அடிப்படையில் ஒரு விவசாயி ஆவார். பி.ஏ படித்துள்ளார். குடியிருந்து வந்தது சென்னையில்தான். இவரது மனைவி சாந்தா ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திவ்யா, தீபிகா என இரு மகள்களும், விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.

நீண்ட காலமாக அதிமுகவில் இருந்து வரும் இவர் 2001 முதல் 2006 வரை விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக இருந்துள்ளார். விழுப்புரம் வடக்கு மாவட்ட விவசாய அணிச் செயலாளராக இருந்தார். இது போக மாவட்ட ஊராட்சிக்குழு 29ஆவது வார்டு உறுப்பினராகவும் இருந்தார். ராஜேந்திரன் ஒருமுறை கூட எம்எல்ஏவாக இருந்து கூட பழக்கப்பட்டது கூட கிடையாது. முதல் முறையாக எம்பி பதவிக்கு போட்டியிட்டு வெற்றியும் பெற்றவர்.

மேலும் படிக்க

எஸ். ராஜேந்திரன் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் எஸ். ராஜேந்திரன்
பிறந்த தேதி 01 Jun 1956
இறந்த தேதி 23 Feb 2019 (வயது 62)
பிறந்த இடம் அதனப்பட்டு, விழுப்புரம், தமிழ்நாடு
கட்சி பெயர் All India Anna Dravida Munnetra Kazhagam
கல்வி Graduate
தொழில் விவசாயி
தந்தை பெயர் திரு. ஆர். சுப்புராயன்
தாயார் பெயர் திருமதி. ஆர். பாக்கியம்
துணைவர் பெயர் திருமதி. சாந்தா ராஜேந்திரன்
குழந்தைகள் 1 மகன்(கள்) 2 மகள்(கள்)

எஸ். ராஜேந்திரன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹38.29 LAKHS
சொத்துக்கள்
₹62 LAKHS
கடன்கள்
₹23.71 LAKHS

எஸ். ராஜேந்திரன் சுவாரசிய தகவல்கள்

ராஜேந்திரன் பல்வேறு பதவிகளை வகித்தபோதும் சமூக சேவையையும் விடாமல் செய்து வந்தவர். குறிப்பாக வயதானவர்களுக்கு உதவுவது, ஆதரவு அற்ற குழந்தைகள் முகாம்களில் கலந்து கொண்டு சுகாதார விழிப்புணர்வு ஏற்பாடு செய்தல், குழந்தைகள் பள்ளிக்கூடங்கள் செல்வதன் அவசியம் ஆகியவற்றைக் கற்பித்தல் மற்றும் கிராமங்களில் விழிப்புணர்வு திட்டங்களில் பங்கேற்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.

எஸ். ராஜேந்திரன் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2019: 2019, பிப்ரவரி 23ம் தேதி நடந்த கார் விபத்தில் எஸ்.ராஜேந்திரன் மரணமடைந்தார். அதிகாலை 4 மணிக்கு அவரது கார் விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது திண்டிவனம் அருகே விபத்துக்குள்ளானது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது தைலாபுரம் இல்லத்தில் அளித்த விருந்தில் கலந்து கொண்டு சொந்த ஊரான வானூர் திரும்பிய ராஜேந்திரன், காலையில் அங்கிருந்து புறப்பட்டு விழுப்புரம் வந்தபோதுதான் விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார்.
  • 2014: செப்டம்பர் 1, 2014 அன்று வேதி, உரத்துறை அமைச்சக நிலைக்குழு உறுப்பினராகவும், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.
  • 2014: விழுப்புரம் தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்ற கழக கட்சி வேட்பாளரான கே. முத்தையனை தோற்கடித்ததன் மூலம் பதினாறாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2001: 2001 - 2006: எஸ். ராஜேந்திரன் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+