• search
முகப்பு
 » 
அரசியல்வாதிகள்
 » 
செல்வி ஜெ.ஜெயலலிதா

செல்வி ஜெ.ஜெயலலிதா

சுயசரிதை

நடிகையாக இருந்து அரசியல்வாதியானவரும், ஆறு முறை தமிழக முதல்வராக இருந்தவருமான ஜெயலலிதா, 1961ல் தனதுதிரை வாழ்க்கையை குழந்தை நட்சத்திரமாக கன்னட திரைப்படமான "ஶ்ரீ சைலா மகாத்மே" லிருந்து துவங்கினார். இவர் 1965ல் ஶ்ரீதரின் 'வெண்ணிற ஆடை' எனும் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் எம்.ஜி.ஆர் உடன் 28 திரைப்படங்களும், சிவாஜி கணேசனுடன் 17 திரைப்படங்களும் நடித்து, தனது நடிப்பிற்காக பல்வேறு விருதுகளையும் பெற்றார். எம்ஜிஆர் துவங்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்து தனது அரசியல் வாழ்வை துவங்கினார் ஜெயலலிதா. 1984 முதல் 1989 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1987ல் எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர், 1989ல் அஇஅதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்று, 1991ல் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து பதவிகாலம் முழுவதும் ஆட்சியிலிருந்த முதல் தமிழக பெண் முதல்வர் என பெயர் பெற்றார்.6முறை தமிழகத்தின் முதல்வராக இருத்த இவர், இடையே சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்தார். 75நாட்கள் மருத்துவமனையில் இருந்து, 5 டிசம்பர் 2016அன்று காலமான நிலையில், இன்னமும் அவரது இறப்பில் பல்வேறு சர்ச்சைகள் நிலவுகின்றன

தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் செல்வி ஜெ.ஜெயலலிதா
பிறந்த தேதி 24 Feb 1948
இறந்த தேதி 05 Dec 2016 (வயது 68)
பிறந்த இடம் மேலுகோட்டை, மாண்டியா மாவட்டம், மைசூர், கர்நாடகா
கட்சி பெயர் All India Anna Dravida Munnetra Kazhagam
கல்வி 10th Pass
தொழில் திரைப்பட நடிகை, அரசியல்வாதி, எழுத்தாளர்,நாட்டிய தாரகை
தந்தை பெயர் ஜெயராம்
தாயார் பெயர் வேதவள்ளி

தொடர்பு

நிரந்தர முகவரி வேதாநிலையம், 81 போயஸ் கார்டன், சென்னை- 600086
தற்காலிக முகவரி வேதாநிலையம், 81 போயஸ் கார்டன், சென்னை- 600086
தொடர்பு எண் 044-24992121
மின்னஞ்சல் jayalalithaa1948@gmail.com

சுவாரஸ்ய தகவல்கள்

1964ஆம் ஆண்டு சென்னை சர்ச் பார்க் கான்வென்ட்-ல் மெட்ரிக்குலேசன் படிப்பை முடித்து உயர்கல்வி பயில உதவித்தொகை கிடைத்தும், திரைப்படங்களில் நடிக்க முடிவெடுத்தார் ஜெயலலிதா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 140க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயலலிதாவின் தாயாரும் திரைப்பட நடிகை தான், அவரது திரைப்பெயர் சந்தியா. மாநிலங்களவையில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஜெயலலிதாவின் பேச்சை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வெகுவாக பாராட்டியுள்ளார்.இவரது வளர்ப்புமகன் சுதாகரனின் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

அரசியல் காலவரிசை

  • 2016
    தமிழகத்தின் முதல்வராக ஆறாவது முறையாக பொறுப்பேற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்று வரலாறு படைத்தார்.
  • 2015
    தமிழக முதல்வராக ஐந்தாவது முறையாக பொறுப்பேற்ற ஜெயலலிதா, அம்மா மருத்துவ பரிசோதனை திட்டம், அம்மா உணவகம், அம்மா குடிநீர் ,முதியோர் இலவச பஸ் பயண திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூகநல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். மேலும் 2015ல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையும் நடத்தினார்.
  • 2011
    2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிவாகை சூடிய பின்னர், நான்காவது முறையாக தமிழக முதல்வரானார்.
  • 2011
    டிசம்பர்2011ல், தனது நீண்ட கால தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 13 பேரை கட்சியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா.
  • 2003
    மார்ச் 2013ல், மூன்றாவது முறையாக மீண்டும் தமிழக முதல்வரானார் ஜெயலலிதா. டிசம்பர் 2004ல் தமிழகத்தை சுனாமி தாக்கிய போது, இவரது நிர்வாக திறமையை ஒட்டுமொத்த உலகமும் பாராட்டியது.
  • 2001
    தமிழகத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றார். பின்னர் செப்டம்பர் 2001ல் முதல்வர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். தனது விசுவாசியான ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கினார் ஜெயலலிதா.
  • 1998
    அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் தலைமையிலான மத்திய அரசில் இணைந்தது அதிமுக. ஆனால் அடுத்த ஒரு ஆண்டில் தனது ஆதரவை விலக்கிக்கொண்டதால், வாஜ்பாய் அரசு கவிழ்ந்து பொதுத் தேர்தலுக்கு வழிவகுத்தது.
  • 1996
    வண்ணத்தொலைக்காட்சி ஊழலின் காரணமாக ஜெயலலிதா கைது செய்யப்பட்டு, 30 நாள் நீதிமன்ற காவலில் சிறை சென்றார். இவர் 30 மே 2000ல் இவ்வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
  • 1991
    அதிமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற பின்னர் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார் ஜெயலலிதா.
  • 1989
    போடிநாயக்கனூர் தொகுதியில் வென்ற ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். பின்னர் அஇஅதிமுகவின் மற்றொரு அணியும் ஜெயலலிதாவுடன் இணைந்து, ஒருமனதாக அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1987
    எம்ஜிஆர் மறைவிக்கு பின்னர் அதிமுக கட்சி இரண்டாக பிளவுபட்டது. ஜானகி இராமச்சந்திரன் தலைமையில் அஇஅதிமுக(ஜா) என ஒரு அணியும், ஜெயலலிதா தலைமையில் அஇஅதிமுக(ஜெ) என மற்றொரு அணியும் உருவானது. ஜானகி தமிழக முதல்வரானார், ஜெயலலிதா கட்சியில் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்காக தயாராக துவங்கினார்.
  • 1984
    மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான ஜெயலலிதா 1989வரை அப்பதவியில் இருந்தார். 1989 பொதுத்தேர்தலில் காங்கிரஸ்-அதிமுக கூட்டணியின் பிரச்சாரம் இவரது தலைமையில் நடந்தது .
  • 1983
    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கைபரப்பு செயலாளர் ஆனார்.
  • 1982
    அஇஅதிமுக-வின் உறுப்பினராக இணைந்து அரசியலில் அடியெடுத்து வைத்த ஜெயலலிதா, "பெண்ணின் பெருமை" என்ற தலைப்பில் தனது முதல் உரையை ஆற்றினார்.

முந்தைய வரலாறு

  • 1965
    'வெண்ணிற ஆடை' எனும் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலதில் கதாநாயகியாக அறிமுகமானார்.
  • 1964
    'சின்னட கொம்பே' எனும் கன்னட திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.
  • 1962
    'மன்மவ்ஜி' எனும் இந்தி திரைப்படத்தில் கிருஷ்ணர் வேடத்தில் நடித்தார். அதில் மூன்று நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றுவார்.
  • 1961
    கன்னட திரைப்படமான "ஶ்ரீ சைலா மகாத்மே"ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்
  • 1960
    1960ல் 'டீ ஹவுஸ் ஆப் தி ஆகஸ்ட் மூன்' மற்றும் 1964ல் 'அண்டர் செக்ரடரி' எனும் நாடகங்களில் நடித்தார். பின்னர், மாலதி, தி ஹோல் ட்ரூத், காவிரி தந்த கலைச்செல்வி ஆகிய நாடகங்களிலும் நடித்தார்.
நிகர மதிப்பு111.69 CRORE
சொத்துக்கள்113.73 CRORE
கடன்கள்2.04 CRORE

Disclaimer: The information relating to the candidate is an archive based on the self-declared affidavit filed at the time of elections. The current status may be different. For the latest on the candidate kindly refer to the affidavit filed by the candidate with the Election Commission of India in the recent election.

சமூக வலைதளம்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more