Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்மிருதி ஜுபின் இராணி

ஸ்மிருதி ஜுபின் இராணி
நடிகையான ஸ்மிருதி ஜுபின் இராணி பின்னர் அரசியல்வாதியாக மாறினார். தில்லியை சார்ந்த அவர் பஞ்சாபி நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.
By Rashmi | Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

ஸ்மிருதி ஜுபின் இராணி சுயசரிதை

நடிகையான ஸ்மிருதி ஜுபின் இராணி பின்னர் அரசியல்வாதியாக மாறினார். தில்லியை சார்ந்த அவர் பஞ்சாபி நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். அவரது தந்தை அஜய் குமார் மல்ஹோத்ரா பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர். அவர் ஒரு சிறிய கூரியர் நிறுவனத்தை நடத்தி வந்தார். அவரது தாய் ஒரு பெங்காலி ஆவார். இந்தியாவில் மிகவும் முற்போக்கான பெண் அரசியல்வாதிகள் மத்தியில் இவர் பெயரும் இணைந்துள்ளது. ஆரம்பத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பெண்கள் பிரிவில் பணியாற்றினார். பின்னர் குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் கபில் சிபல்க்கு எதிராகவும் மற்றும் மக்களவை தேர்தலில் ராகுல் காந்திக்கு எதிராகவும் போட்டியிட்டார். ஆனால் இரு தேர்தல்களிலும் தோல்வி அடைந்தார். 2014 ஆம் ஆண்டின் மத்தியிலிருந்து 2016 ஆம் ஆண்டு மத்தி வரை அவர் மத்திய மனிதவள அமைச்சராக பணியாற்றினார். தற்போது அவர் பிரதமர் மோடி அமைச்சரவையில் ஜவுளித் துறை அமைச்சராக உள்ளார்.

மேலும் படிக்க

ஸ்மிருதி ஜுபின் இராணி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் ஸ்மிருதி ஜுபின் இராணி
பிறந்த தேதி 23 Mar 1976 (வயது 49)
பிறந்த இடம் புது தில்லி
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி 12th Pass
தொழில் நடிப்பு
தந்தை பெயர் அஜய் குமார் மல்ஹோத்ரா
தாயார் பெயர் ஷிபானி பாக்சி
துணைவர் பெயர் ஜுபின் இராணி
துணைவர் தொழில் தொழில்
குழந்தைகள் 1 மகன்(கள்) 1 மகள்(கள்)
மதம் இந்து

ஸ்மிருதி ஜுபின் இராணி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹17.4 CRORE
சொத்துக்கள்
₹17.57 CRORE
கடன்கள்
₹16.56 LAKHS

ஸ்மிருதி ஜுபின் இராணி சுவாரசிய தகவல்கள்

ஸ்மிருதி இராணி தனது பள்ளி படிப்பை ஹோலி சைல்ட் ஆக்ஸிலிம், தில்லி மற்றும் தொலைத்தொடர்பு கல்வி வழியிலும் மேற்கொண்டார். தற்போது அவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ளார். புற்றுநோய் நோயாளிகள் உதவி மையம் மற்றும் வட்சல்யா ஸ்ட்ரீட் கிட்ஸ் அறக்கட்டளை போன்ற பல்வேறு அரசு சாரா நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளார். மான்டே கார்லோவில் நடந்த தொலைக்காட்சி விழாவில் இந்தியப் பிரதிநிதியாக கலந்து கொண்டவர். உலக சுகாதார அமைப்பின் ஓரல் ரீஹைட்ரேஷன் சொல்யூஷன் திட்டத்திற்கான தூதராக நியமிக்கப்பட்டவர். 2007ம் ஆண்டில் சொந்தமாக 'மாற்றத்திற்கான மக்கள்' என்ற ஒரு அரசு சாரா நிறுவனத்தை தொடங்கினார். இந்த அமைப்பானது, நாசிக்கில் விளையாட்டு உதவித் தொகையையும் மகாராஷ்டிராவில் உள்ள 35 கிராமங்கள் மீது புனர்வாழ்வு அளிக்கும் வசதிகளையும், பல்வேறு கிராமப்புற குடிநீர்த் திட்டங்களையும் வழங்கியுள்ளது. 2007ம் ஆண்டில் மும்பை வெள்ளத்தின் போது 92.5 வானொலி நிலையத்துடன் இணைந்து பத்து டன் நிவாரண பொருட்களை வழங்கியது. இந்த அமைப்பு, பொருளாதார ரீதியில் பலவீனமான பின்னணியில் உள்ள குழந்தைகளுக்கு உயர்கல்விக்கான கல்வி உதவித்தொகைகளை வழங்குகிறது. மற்றும் 'பெண்கள் & செல்வம்' என்ற பெயரில் பெண்களுக்கான நிதியியல் கல்வியறிவுத் திட்டங்களை வழங்கி கொண்டுள்ளது.

ஸ்மிருதி ஜுபின் இராணி அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2016: 2016ம் ஆண்டு ஜூலை மாதம் , மனித வள மேம்பாட்டு அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, ஜவுளித் துறை பொறுப்பு அளிக்கப்பட்டது.
  • 2011: 2011ம் ஆண்டு ஆகஸ்ட்டில், குஜராத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக மாநிலங்களவைக்கு தேந்தெடுக்கப்பட்டார்.
  • 2010: 2010 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜூன் 24 ம் தேதி அவர் பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து இந்திய மகளிர் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • 2009: 2009ம் ஆண்டு மே மாதம் புது தில்லியில் பாஜக வேட்பாளர் விஜய் கோயலுக்காக பிரச்சாரம் செய்தார். டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பிரசாரத்தில் பிரதானமாக பேசினார். பாலியல் பலாத்காரங்களுக்கு பெரும் தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கூறினார்.
  • 2004: 2004ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில இளைஞர் அணியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டின் பதினான்காவது மக்களவைத் தேர்தலில், தில்லி சாந்தினி சௌக் தொகுதியில் இருந்து கபில் சிபலுக்கு எதிராக போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார்.பாரதிய ஜனதா கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
  • 2003: 2003ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

ஸ்மிருதி ஜுபின் இராணி சாதனைகள்

இந்திய தொலைக்காட்சி அகாடமியால் ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாக சிறந்த நடிகை என்ற விருது பெற்றுள்ளார். இந்திய அமெரிக்க இளம் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார். 2001, 2002, 2003 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் சிறந்த நாடக நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் இந்திய தொலைக்காட்சி விருது விழாவில், சிறந்த நடிகைக்கான விருதும் 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் சிறந்த நடிகைக்கான இந்திய டெலி விருதும் பெற்றார். 2003ம் ஆண்டில் சிறந்த தொலைக்காட்சி ஆளுமைக்கான விருதும் பெற்றுள்ளார். 2010 இல் இந்திய தொலைக்காட்சி அகாடெமி மைல்கல் விருது வழங்கியது. 'க்யூன்கி சாஸ் பி கபி பாஹு தி' என்ற படத்தின் சிறந்த நடிப்பிற்காக இந்திய தொலைக்காட்சி அகாடமி மற்றும் டெலி விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த நடிகைக்கான (ஜூரி) டெலி விருது அவரது 'விருத்' தொலைக்காட்சித் தொடருக்குக் கிடைத்தது.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+