Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தருண் கோகோய்

தருண் கோகோய்
1934ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி பிறந்தவர் கோகோய். அஸ்ஸாம் மாநிலத்தின் முதல்வராக 2001 முதல் 2016 வரை பதவியில் இருந்தார்.
By Keshav Karna | Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

தருண் கோகோய் சுயசரிதை

1934ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி பிறந்தவர் கோகோய். அஸ்ஸாம் மாநிலத்தின் முதல்வராக 2001 முதல் 2016 வரை பதவியில் இருந்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் கோகோய். கட்சியை மாநிலத்தில் 3 முறை ஆட்சியில் அமர்த்திய பெருமைக்குரியவர். தனது ஆரம்ப பள்ளிப் படிப்பை ரங்கஜன் நிம்னா புனியாடி வித்யாலயா பள்ளியில் படித்தார். குவஹாத்தி பல்கலைக்கழகத்தில் 1963ம் ஆண்டு எல்எல்பி படிப்பை முடித்தார். 1972ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி கோகோய், டோலி கோகோயை மணந்தார். இத்தம்பதிக்கு கெளரவ் கோகோய் என்ற மகனும், சந்திரிமா கோகோய் என்ற மகளும் பிறந்தனர்.

கோகோயின் அரசியல் வாழ்க்கையானது 1968ம் ஆண்டு தொடங்கியது. ஜோர்கட் நகராட்சி உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார். இதுதான் அவரது முதல் பதவி. அதன் பின்னர் 1971ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமரானபோது 5வது லோக்சபாவுக்கு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2001 அஸ்ஸாம் சட்டசபைத் தேர்தலில் தருண் கோகோய் தலைமையில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அத்தேர்தலில் திதபார் தொகுதியிலிருந்து கோகோய் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதால் கோகோய் ஆட்சி முடிவுக்கு வந்தது.

1971 முதல் 1985ம் ஆண்டு வரை ஜோர்கட் தொகுதியிலிருந்து கோகோய் ஆறு முறை லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பின்னர் 1991-96, 1998-2002 காலத்தில் கலியாபோர் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் படிக்க

தருண் கோகோய் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் தருண் கோகோய்
பிறந்த தேதி 11 Oct 1934
இறந்த தேதி 23 Nov 2020 (வயது 86)
பிறந்த இடம் ரெங்கமடி, ஜோர்கட்
கட்சி பெயர் Indian National Congress
கல்வி Graduate Professional
தொழில் அரசியல்வாதி
தந்தை பெயர் டாக்டர் கமலேஸ்வர் கோகோய்
தாயார் பெயர் உஷா கோகோய்
துணைவர் பெயர் டோலி கோகோய்
குழந்தைகள் 1 மகன்(கள்) 1 மகள்(கள்)

தருண் கோகோய் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹5.35 CRORE
சொத்துக்கள்
₹5.55 CRORE
கடன்கள்
₹19.4 LAKHS

தருண் கோகோய் சுவாரசிய தகவல்கள்

தருண் கோகோய் அரசியல் ஆர்வத்தை தவிர வாசித்தல் மற்றும் தோட்டக்கலை மீது அதிக ஈடுபாடு கொண்டவர். கிரிக்கெட், கால்பந்து மற்றும் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்ட இவர் கோல்ப் விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர். அனைத்து அஸ்ஸாம் மொயன் பரிசத் மற்றும் குழந்தைகள் அமைப்பின் முன்னாள் பொருளாளராக இருந்தார். பாரத் யுவக் ஜமாஜின் முன்னாள் தலைவராகவும் இருந்தார். அவர் அம்மாநிலத்தில் நீண்ட காலம் முதலமைச்சராக இருந்தார். தொடர்ந்து மூன்று சட்டசபை தேர்தலில் தலைமை ஏற்று காங்கிரஸ் வெற்றி பெற தருண் கோகோய் காரணமாக இருந்தார்.

தருண் கோகோய் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2016: தருண் கோகோய் - இன் காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தோல்வி அடைந்தது. அதனால் கோகோய் ன் பதவி காலம் முடிந்தது.
  • 2011: தருண் கோகோய் தொடர்ந்து சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல் அமைச்சராக பதவி வகித்தார்.
  • 2006: கோகோய் 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அம்மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
  • 2001: தருண் கோகோய் அஸ்ஸாம் மாநில சட்டசபை தேர்தலில் வென்று மாநிலத்தின் முதல் அமைச்சராக பதவி ஏற்றார்.
  • 1999: கோகோய் மீண்டும் 13வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். (ஆறாவது முறை )
  • 1998: கோகோய் 12 வது மக்களவைக்கு மீண்டும் தேந்தெடுக்கப்பட்டார். (ஐந்தாவது முறை )
  • 1997: தருண் கோகோய் அஸ்ஸாம் சட்டமன்ற தேர்தலில் மார்க்கெரிட்டா தொகுதியில் தேர்நதெடுக்கப்பட்டார்.
  • 1993-1995: கோகோய் உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சராக (தனிப் பொறுப்பு ) பொறுப்பேற்றார்.
  • 1991-1993: கோகோய் மத்திய உணவு துறை இணை அமைச்சராக (தனிப்பொறுப்பு) நியமிக்கப்பட்டார்.
  • 1985: கோகோய் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளராக தேர்வு செய்யபட்டார்
  • 1976: தருண் கோகோய் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 1971: இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் கோகோய் ஐந்தாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1968: தருண் கோகோய் 1968ஆம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். அவர் ஜோர்கட் நகர சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

தருண் கோகோய் சாதனைகள்

கோகோய் அஸ்ஸாம் மாநில முதலமைச்சராக இருந்த போது அம்மாநிலத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை கட்டுப்படுத்தினார். தனது ஆட்சி காலத்தில் 85 லட்சத்திற்ற்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தினார். அஸ்ஸாம் மாநிலம் சிறந்த உள்கட்டமைப்புக்கான மாநில விருதையும் கோகோய் ஆட்சி காலத்தில் பெற்றது. பத்தாவது வகுப்பில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மேலும் அவர் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் ஒரு சிறப்பு திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்.2007ஆம் ஆண்டு தருண் கோகோய் தலைமையில் அஸ்ஸாமில் 33வது தேசிய விளையாட்டுகள் நடைபெற்றது.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+