Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சு. திருநாவுக்கரசர்

சு. திருநாவுக்கரசர்
தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான திருநாவுக்கரசர், தற்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழ் மாநில தலைவராக உள்ளார். இளம்வயதிலேயே தமிழக சட்டமன்றத்தின் துணை சபாநாயகராக பணியாற்றிய இவர், 1980 முதல் 1987 வரை எம்ஜிஆர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்து பல்வேறு துறைகளை கவனித்துவந்தார்.
By Samraj | Tuesday, February 19, 2019, 01:36:47 PM [IST]

சு. திருநாவுக்கரசர் சுயசரிதை

தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான திருநாவுக்கரசர், தற்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழ் மாநில தலைவராக உள்ளார். இளம்வயதிலேயே தமிழக சட்டமன்றத்தின் துணை சபாநாயகராக பணியாற்றிய இவர், 1980 முதல் 1987 வரை எம்ஜிஆர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்து பல்வேறு துறைகளை கவனித்துவந்தார். மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ள திருநாவுக்கரசர், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து சில காலம் பணியாற்றி மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

மேலும் படிக்க

சு. திருநாவுக்கரசர் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் சு. திருநாவுக்கரசர்
பிறந்த தேதி 13 Jul 1949 (வயது 76)
பிறந்த இடம் தீயாத்தூர், புதுக்கோட்டை மாவட்டம்
கட்சி பெயர் Indian National Congress
கல்வி Post Graduate
தொழில் அரசியல்வாதி/ வழக்கறிஞர்
தந்தை பெயர் திரு. சுப்புராமன்
தாயார் பெயர் திருமதி.காளியம்மாள்
துணைவர் பெயர் ஜெயந்தி
துணைவர் தொழில் இல்லத்தரசி
குழந்தைகள் 3 மகன்(கள்) 2 மகள்(கள்)
இணையதளம் NIL

சு. திருநாவுக்கரசர் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹1.73 CRORE
சொத்துக்கள்
₹1.79 CRORE
கடன்கள்
₹5.56 LAKHS

சு. திருநாவுக்கரசர் சுவாரசிய தகவல்கள்

இந்திய தேசிய காங்கிரஸின் தமிழ்மாநில கிளையை நியூயார்க், அமெரிக்கா என சர்வதேச அளவில் துவங்கிவைக்க திருநாவுக்கரசர் அழைக்கப்பட்டார். 1998 நாடாளுமன்ற தேர்தலில், இவர் துவங்கிய எம்.ஜி.ஆர் அதிமுக கட்சி காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இந்திய அரசியலில் மிகவும் பிரபலமாக இருக்கும் இவர், தனது எளிமை மற்றும் தொலைநோக்கு பார்வையின் காரணமாக தமிழகத்தில் மிகப்பெரிய தொண்டர்படையை வைத்துள்ளார். "அக்கரை சீமையில் ஆறு வாரங்கள்" எனும் புத்தகத்தை எழுதியுள்ள திருநாவுக்கரசர், "பொன் மனம்" எனும் வார இதழை துவங்கி அதன் ஆசிரியராகவும் இருந்தார்.

சு. திருநாவுக்கரசர் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2017: 2017 ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். முன்னதாக 2010 முதல் 2017 வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்தார்.
  • 2009: 2009 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், அப்போதிருந்து இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து பணியாற்றிவருகிறார். அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியால் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக நியமிக்கப்பட்டு, தெலுங்கானா மாநில பொறுப்பாளராக இருந்து ஜனாரெட்டியை எதிர்கட்சிதலைவராக தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்காற்றினார்.
  • 1999: 1999ல் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்று, முதலில் கப்பல்துறை இணை அமைச்சராகவும், பின்னர் 2004 வரை தொலைதொடர்பு மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சராகவும் இருந்தார். ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
  • 1980: 1980 முதல் 1987வரை எம்ஜிஆர் அமைச்சரவையில், தொழில்நிறுவனங்கள், வணிகவரி மற்றும் கைத்தறி துறை அமைச்சராக பணியாற்றினார்.
  • 1976: தனது 27 வயதிலேயே சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக சட்டமன்றத்தின துணை சபாநாயகரான திருநாவுக்கரசர் 15 அக்டோபர் 1999ல் இராஜினாமா செய்தார்.

முந்தைய வரலாறு

  • Early 70's: சென்னை மெட்ராஸ் பல்கலைகழகம் மற்றும் திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைகழகத்தில் எம்.ஏ பி.எல் படித்துள்ளார்.

சு. திருநாவுக்கரசர் சாதனைகள்

எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் தொழில்நிறுவனங்கள், கைத்தறி மற்றும் வணிகவரித்துறை அமைச்சராக இருக்கும்போதே, சட்டமன்ற துணை சபாநாயகராகவும் பணியாற்றினார்.
தமிழகத்தில் உள்ள தாது வளங்களை ஆராயும் வகையில் தமிழ்நாடு மேக்னசைட் கார்பொரேசன் மற்றும் தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் நிறுவனங்களை துவங்கினார்.
சிப்காட் எனப்படும் தொழில்வளாகங்களை பல இடங்களில் நிறுவிய திருநாவுக்கரசர், பல்வேறு காகித மற்றும் சர்க்கரை ஆலைகளையும் நிறுவியுள்ளார்.
இவர் 1980களில் பல்வேறு பள்ளிகள், பாலிடெக்னிக் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளையும் துவக்கினார். ஆறுகளின் குறுக்கே சிறு தடுப்பணைகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களையும் கட்டியுள்ளார். இவையனைத்தும் நீர்சேமிப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான எந்தவொரு விழிப்புணர்வும் இல்லாதபோதே நடைபெற்றவை.
கப்பல்துறை அமைச்சராக இருந்தபோது, கப்பல் துறைக்கு கடல்சார் படிப்பு அவசியமானது என கருதிய திருநாவுக்கரசர், தொழில்நுட்ப மற்றும் அறிவியல் பயிற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, தேசிய துறைமுக மேலாண்மை நிறுவனம் அதிக நபர்களை பயிற்றுவிக்க ஊக்கப்படுத்தினார். கடல்சார் படிப்பு மற்றும் பயிற்சி மையத்தின் புதிய வளாகங்களை துவங்கிவைத்தார்.
ஏழை, அடித்தட்டு மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் வகையில், பாரதரத்னா டாக்டர்.எம்ஜிஆர் அறக்கட்டளையை துவக்கினார். இவர் விளையாட்டு மற்றும் கலாச்சாரம் போன்றவற்றில் ஆர்வமுடையவர்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+