Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திரிவேந்திர சிங் ராவத்

திரிவேந்திர சிங் ராவத்
1960ம் ஆண்டு டிசம்பர் மாதம் கைராய்சன் கிராமத்தில் பிறந்தார். திரிவேந்திர சிங் உத்தரகாண்ட் மாநிலத்தின் எட்டாவது மற்றும் தற்போதைய முதல்வர் ஆவார்.
By Keshav Karna | Thursday, May 30, 2019, 04:03:42 PM [IST]

திரிவேந்திர சிங் ராவத் சுயசரிதை

1960ம் ஆண்டு டிசம்பர் மாதம் கைராய்சன் கிராமத்தில் பிறந்தார். திரிவேந்திர சிங் உத்தரகாண்ட் மாநிலத்தின் எட்டாவது மற்றும் தற்போதைய முதல்வர் ஆவார். அவர் குடும்பத்தில் ஒன்பதாவது மற்றும் இளைய குழந்தை இவர். பிரதாப் சிங் ராவத் மற்றும் போச்சா தேவி ஆகியோருக்கு இவர் பிறந்தார். ராவத் ஸ்ரீநகரில் உள்ள பிர்லா வளாகத்தில் பத்திரிகை துறையில் தனது முதுகலை பட்டம் பெற்றார். 1979 முதல் 2002 வரை ராவத் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். மேலும் உத்தரகண்ட் பகுதியின் ஒருங்கிணைப்பு செயலாளர் பதவியையும் வகித்தார். 2002 ஆம் ஆண்டில் மாநில முதல் சட்டமன்றத் தேர்தலில் தோய்வாலா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007ம் ஆண்டு தேர்தல்கள் வரை அவர் தனது இடங்களைத் தக்க வைத்துக் கொண்டார் மற்றும் வேளாண் அமைச்சராகவும் பணியாற்றினார். அவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக ஜார்கண்ட் இன் பொறுப்பாளராகவும் உத்தரகண்ட் பாரதிய ஜனதா கட்சி தலைவராகவும் பணியாற்றினார். 2017 ஆம் ஆண்டில் தோய்வாலாவிலிருந்து அவரது கட்சி பெரும்பான்மையை வென்றதன் பின்னர் முதலமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார்.

மேலும் படிக்க

திரிவேந்திர சிங் ராவத் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் திரிவேந்திர சிங் ராவத்
பிறந்த தேதி 20 Sep 1960 (வயது 65)
பிறந்த இடம் கைரசாய்ன்
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Post Graduate
தொழில் சமூக சேவகர் மற்றும் சட்டசபை உறுப்பினர்
தந்தை பெயர் பிரதாப் சிங் ராவத்
தாயார் பெயர் போச்சா தேவி
துணைவர் பெயர் சுனிதா ராவத்
துணைவர் தொழில் ஆசிரியர்

திரிவேந்திர சிங் ராவத் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹1.04 CRORE
சொத்துக்கள்
₹1.16 CRORE
கடன்கள்
₹11.59 LAKHS

திரிவேந்திர சிங் ராவத் சுவாரசிய தகவல்கள்

திரிவேந்திர சிங் ராவத் மலை வாழ் ஸ்தலங்களை விரும்புபவர். அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தனது மலை கிராமத்துக்குப் போய் விடுவார். குளிர்காலத்தில் அவர் மந்துவா என்ற தினை ரொட்டியை விரும்பி சாப்பிடுவார்.

திரிவேந்திர சிங் ராவத் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2017 : உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 70 இடங்களில் 57 இடங்களை பாரதிய ஜனதா கட்சி பெற்றதன் மூலம் உத்திரகாண்டின் எட்டாவது முதலமைச்சராக பதவியேற்றார்.
  • 2014 : ஜார்கண்ட் மாநில பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். புனித கங்கையை சுத்தம் செய்வதற்காக "நமாமி கங்கை"யின் உறுப்பினர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டார்.
  • 2010 : திரிவேந்திரா பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார்.
  • 2007 : மீண்டும் தோய்வாலா தொகுதியில் இருந்து சட்டசபை உறுப்பினராக பணியாற்றினார்.
  • 2002 : தோய்வாலா தொகுதியிலிருந்து சட்ட சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1997 : திரிவேந்திர சிங் உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநில பாரதிய ஜனதா கட்சி செயலாளராக (அமைப்பு) பணியாற்றினார்.2002ம் ஆண்டில் மீண்டும் அவர் அதே பதவியில் பணியாற்றினார்.
  • 1993 : திரிவேந்திர சிங் ராவத் பாரதிய ஜனதா கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

முந்தைய வரலாறு

  • 1989: உத்திரப்பிரதேச மாநிலம் மீரட்டில் ராஷ்ட்ரதேவ் இதழின் ஆசிரியரானார்.
  • 1985: உத்தரகண்ட்டின் டேராடூன் ஆர்.எஸ்.எஸ் நகர் பிரச்சாரகராக நியமிக்கப்பட்டார்.
  • 1983: உத்தரகண்ட்டில் உள்ள ஸ்ரீநகரில் ஆர்.எஸ்.எஸ் தெஷில் பிரச்சாரராக ஆனார்.
  • 1981: சங்க பிரச்சாரராக செயல்பட்டார்.
  • 1979: ராவத் ராஷ்டிரிய ஸ்வயம் சேவாக் சங்கத்தில் சேர்ந்தார்.

திரிவேந்திர சிங் ராவத் சாதனைகள்

திரிவேந்திர சிங் ராவத் ஒரு சிறந்த நிர்வாகி. ஜார்கண்ட் மாநிலத்தில் 2014 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றி தேடித் தந்தார். உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற போராட்டங்களில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றுள்ளார். ஹல்வாணியில் உள்ள வான் டிரஸ்ட் மருத்துவ கல்லூரியின் கல்வி கட்டணத்தை ரூ.1.5 லட்சத்திலிருந்து இருந்து ரூ 25,000ஆக குறைக்க தீவிரமாக போராடியதில் முக்கிய பங்காற்றினார். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 70 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக போராடி கோர்ட் மூலம் அதை உறுதிப்படுத்தினார். உத்தரகண்ட் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஆண்டுக்கு இரண்டு முறை விவசாயிகள் கூட்டத்தை நடத்தினார். இதில் 18 துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளைத் தீர்த்து வைத்தனர். விவசாயிகள் தங்களது பொருட்களை நேரடியாக விற்பனை செய்து கொள்ள வசதியாக நம்ம ஊர் உழவர் சந்தை போல அப்னோ பஜார் என்ற மார்க்கெட்டுகளை தொடங்கினார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+