Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உதித் ராஜ்

உதித் ராஜ்
டாக்டர் உதித்ராஜ் வடமேற்கு தில்லி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். டாக்டர் ராஜ் அனைத்து இந்திய பிற்படுத்தப்பட்ட சமூக கூட்டமைப்பின் தேசிய தலைவராகவும் உள்ளார்.
By Administrator | Thursday, May 30, 2019, 04:03:42 PM [IST]

உதித் ராஜ் சுயசரிதை

டாக்டர் உதித்ராஜ் வடமேற்கு தில்லி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். டாக்டர் ராஜ் அனைத்து இந்திய பிற்படுத்தப்பட்ட சமூக கூட்டமைப்பின் தேசிய தலைவராகவும் உள்ளார். பாரதீய ஜனதா கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவராகவும் தேசிய எஸ் சி மற்றும் எஸ் டி பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான ஒரு சமூக ஆர்வலராகவும் செயலாற்றுகிறார். அவரது கல்லூரி நாட்களில் அவர் சமூக-அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நிதி பற்றாக்குறையால் அவரது கவனத்தை சமூக நடவடிக்கைகளில் இருந்து திசைதிரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வுக்காகத் தன்னை தயார் படுத்திக்கொள்ள தொடங்கினார். 1988 ஆம் ஆண்டில் அதில் தேர்ச்சி பெற்று இந்திய வருவாய்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எம் ஏ மற்றும் எல் எல் பி பட்டங்களைத் தவிர அவர் ஒரு சர்வதேச பல்கலைக்கழகத்தால் டாக்டர் பட்டமான கௌனரிஸ் கோசாவைப் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க

உதித் ராஜ் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் உதித் ராஜ்
பிறந்த தேதி 01 Jan 1958 (வயது 68)
பிறந்த இடம் ராம் நகர், அலகாபாத், உத்திர பிரதேசம்
கட்சி பெயர் Indian National Congress
கல்வி Doctorate
தொழில் தொழில்,ஆலோசகர், அரசியல்வாதி மற்றும் சமூக சேவகர்
தந்தை பெயர் மறைந்த திரு கள்ளன்
தாயார் பெயர் மறைந்த திருமதி சுக்தேய்
துணைவர் பெயர் திருமதி. சீமா ராஜ்
துணைவர் தொழில் இல்லத்தரசி
குழந்தைகள் 1 மகன்(கள்) 1 மகள்(கள்)
மதம் இந்து
இணையதளம் http://uditraj.com/

உதித் ராஜ் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹4.49 CRORE
சொத்துக்கள்
₹4.49 CRORE
கடன்கள்
N/A

உதித் ராஜ் சுவாரசிய தகவல்கள்

தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் நலனுக்காக அவர் உறுதிப்பாட்டுடன் கடமையாற்றி வருகிறார்.

உதித் ராஜ் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2003 : நவம்பர் 24 ம் தேதி டாக்டர் உதித் ராஜ் தனது இந்திய அரசுப் பணியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். "இந்திய நீதிக் கட்சி" என்ற ஒரு அரசியல் கட்சியை உருவாக்கினார்.
  • 13 May 2015 : நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் (இரண்டாம் திருத்தச் சட்டமூலம்), நியாயமான ஊதியம் மற்றும் வெளிப்படைத் தன்மை பற்றிய கூட்டு குழுவின் உறுப்பினர்.
  • 1 Sep. 2014 : ஆலோசனைக் குழு உறுப்பினர், நிதி மற்றும் பெருநிறுவன அலுவல்கள் அமைச்சகத்தின் உறுப்பினர், விதிகள் குழு உறுப்பினர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் பற்றிய நிலைக்குழுவில் உறுப்பினர்.
  • : .வடகிழக்கு தில்லி தொகுதியின் ஆம் ஆத் மி கட்சியின் வேட்பாளரான ராக்கி பிர்லாவை தோற்கடித்ததன் மூலம் பதினாறாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • : உதித் ராஜ் பாரதிய ஜனதா கட்சியில் பிப்ரவரி 23ம் தேதி இணைந்தார்.

முந்தைய வரலாறு

  • 2008-2009: தில்லி வளர்ச்சி ஆணையத்தில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழலை அம்பலப்படுத்தியதால் தவறிழைத்தவர்கள் சிக்கி சிறைக்குச் செல்ல நேரிட்டது.
  • 2006: விவசாயிகளிடமிருந்து நிலத்தை வாங்கிய சமாஜ்வாடி கட்சி அரசு, அதை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அளித்ததை எதிர்த்து முன்னாள் பிரதமர் விபி சிங் நடத்திய நில மீட்பு இயக்கத்தில் கலந்து கொண்டு அதில் முக்கியப் பங்காற்றினார்.
  • 2003: வருமானவரித் துறையின் கூடுதல் ஆணையாளராக இருந்த தனது பதவியை விட்டு விலகி சமுதாயத்தின் பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் நலனுக்காக செயலாற்றத் தொடங்கினார்.
  • 2001: நவம்பர் மாதத்தில் தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் பௌத்த மதத்திற்கு மாறினார்.
  • 1997: அக்டோபர் மாதம் 2ம் தேதி அன்று எஸ் சி மற்றும் எஸ் டி அமைப்புகளின் அனைத்து இந்திய கூட்டமைப்பை உருவாக்கினார்.
  • 1996: லார்ட் புத்தா கிளப்பை உருவாக்கினார்.
  • 1995: தில்லிக்கு மாற்றப்பட்ட பின்பு அங்கு துணை ஆணையர் மற்றும் கூட்டு ஆணையாளர் மற்றும் வருமான வரி கூடுதல் ஆணையர் ஆகிய குறிப்பிடத்தக்க பதவிகளில் பணியாற்றினார்.
  • 1990: உதித் ராஜ் சிவில் சர்வீஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் முதலில் காஜியாபாத்தில் வருமான வரி உதவி ஆணையராக பணியாற்றினார்.

உதித் ராஜ் சாதனைகள்

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அவருடைய அறிவார்ந்த நுண்ணறிவு திறமை பாராட்டைப் பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடனான உரையாடல்களில் அவர் அதிகம் ஈடுபட்டுள்ளார். தேசிய ஒருங்கிணைப்பு கவுன்சில் உறுப்பினராக இருந்தார். இந்திய அரசின் உள்நாட்டலுவல்களின் உறுப்பினர். 2012-2014 வரை எஸ் சி மற்றும் எஸ் டி வகுப்பினரின் கல்வியில் தேசிய கண்காணிப்புக் குழுவின் உறுப்பினராகவும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+