Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உபேந்திர குஷ்வாஹா

உபேந்திர குஷ்வாஹா
உபேந்திர குஷ்வாஹா 1960ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி அன்று பிறந்தார். அவர் இந்திய அரசியல்வாதி மற்றும் மத்திய மனித மேம்பாட்டு அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
By Rashmi | Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

உபேந்திர குஷ்வாஹா சுயசரிதை

உபேந்திர குஷ்வாஹா 1960ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி அன்று பிறந்தார். அவர் இந்திய அரசியல்வாதி மற்றும் மத்திய மனித மேம்பாட்டு அமைச்சராக பணியாற்றியுள்ளார். அவர் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள காரகாத் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். குஷ்வாஹா இன மக்கள் அதிகம் உள்ள தொகுதி காரகாத். பீகார் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராஷ்ட்ரிய லோக் சமாதா கட்சியின் தலைவராக இருக்கிறார்.

மேலும் படிக்க

உபேந்திர குஷ்வாஹா தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் உபேந்திர குஷ்வாஹா
பிறந்த தேதி 06 Feb 1960 (வயது 66)
பிறந்த இடம் ஜவாஜ்,வைஷாலி மாவட்டம் , பீகார்
கட்சி பெயர் Rashtriya Lok Samta Party
கல்வி Post Graduate
தொழில் விவசாயி
தந்தை பெயர் மறைந்த ஸ்ரீ முனீஸ்வர் சிங்
தாயார் பெயர் திருமதி முனீஸ்வரி தேவி
துணைவர் பெயர் திருமதி ஸ்னேகலதா
குழந்தைகள் 1 மகன்(கள்) 1 மகள்(கள்)

உபேந்திர குஷ்வாஹா நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹1.69 CRORE
சொத்துக்கள்
₹1.81 CRORE
கடன்கள்
₹12.64 LAKHS

உபேந்திர குஷ்வாஹா சுவாரசிய தகவல்கள்

இசை கேட்பதில் ஆர்வம் கொண்டவர்.

உபேந்திர குஷ்வாஹா அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2014: மத்திய மனித வள மேம்பாட்டு இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 2014: ராஷ்டிரிய லோக் சமதா கட்சியின் சார்பில் பதினாறாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2010-2013: உபேந்திர குஷ்வஹா 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை விவசாய அமைச்சக நிலைக் குழுவின் உறுப்பினராக இருந்துள்ளார்.
  • 2010 - 2013: உபேந்திர குஷ்வஹா மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
  • 2002 - 2004: பீகார் மாநில சட்டமன்றத்தில் சமதா கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • 2000 - 2005: பீகார் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
  • 1994-2002: சமதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆனார்.
  • 1988-1993: யுவ ஜனதா தளம் கட்சியின் தேசிய பொது செயலாளராக இருந்தார்.
  • 1985-1988: யுவ லோக்தள் கட்சியின் மாநில பொதுச் செயலாளராகப் பணியாற்றினார்.
  • 27 May 2014 - 9 Nov. 2014: மத்திய அமைச்சரவையில் கிராமப்புற வளர்ச்சித்துறை இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
  • : பீகார் மாநில சமாதா கட்சியின் தலைவராக இருந்தார். மேலும் பீகார் மாநில சட்டமன்றத்தின் எதிர்கட்சி தலைவராகவும் செயல்பட்டார்.

முந்தைய வரலாறு

  • 1985: அரசியல் அறிவியல் துறையில் விரிவுரையாளராக ஜந்தகாவில் (வைஷாலி) உள்ள சம்தா கல்லூரியில் பணியாற்றினார். இப்போது முனேஷ்வர் சிங் முனீஸ்வரி சாம்தா கல்லூரி என்று இது அழைக்கப்படுகிறது.

உபேந்திர குஷ்வாஹா சாதனைகள்

1985 ஆம் ஆண்டில் வைஷாலி மாவட்டம் ஜந்தகா நகரில் உள்ள சம்தா கல்லூரியில் அரசியல்அறிவியல் விரிவுரையாளராக இருந்தார். இப்போது அக்கல்லுரி முனுஷ்வர் சிங் முனீஸ்வரி சம்தா கல்லூரி என்று அழைக்கப்படுகிறது. 1985-88 ஆம் ஆண்டில் யுவ லோக்தள் கட்சியின் மாநில பொது செயலாளராக இருந்தார். பின்னர் 1994ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை சமதா கட்சியில் இருந்தார். அவர் 1988 முதல் 1993 வரை யுவ ஜனதள் கட்சியின் தேசிய பொது செயலாளராக நியமிக்கப்பட்டார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+