முகப்பு
 » 
ஓ. பன்னீர்செல்வம்

ஓ. பன்னீர்செல்வம்

ஓ. பன்னீர்செல்வம்

பரவலாக ஓபிஎஸ் என அறியப்படும் ஓ. பன்னீர்செல்வம் , தற்போது தமிழகத்தின் துணை முதல்வராகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக 21 .

ஓ. பன்னீர்செல்வம் சுயசரிதை

பரவலாக ஓபிஎஸ் என அறியப்படும் ஓ.பன்னீர்செல்வம் , தற்போது தமிழகத்தின் துணை முதல்வராகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக 21 .08.2017 முதல் பதவி வகித்து வருகிறார். தமிழகத்தின் 7வது முதலமைச்சராக பதவி வகித்தவர். ஜெயலலிதா இரண்டு முறை நீதிமன்றத்தால் தண்டனை பெற்று பதவியிழந்தபோதும், அவருக்கு பதிலாக தமிழகத்தின் முதல்வராக பணியாற்றியவர். 2016ல் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் 3வது முறையாக தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றவர், 2 மாதங்களுக்கு பின்னர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தார்.

மேலும் படிக்க
By Ajay M V Updated: Tuesday, February 19, 2019, 01:36:47 PM [IST]

ஓ. பன்னீர்செல்வம் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் ஓ. பன்னீர்செல்வம்
பிறந்த தேதி 14 Jan 1951 (வயது 73)
பிறந்த இடம் பெரியகுளம், தேனி
கட்சி பெயர் All India Anna Dravida Munnetra Kazhagam
கல்வி 12th Pass
தொழில் விவசாயம்
தந்தை பெயர் ஒட்டக்கார தேவர்
தாயார் பெயர் பழனியம்மாள் நாச்சியார்
துணைவர் பெயர் பி. விஜயலட்சுமி
துணைவர் தொழில் இல்லத்தரசி
குழந்தைகள் 2 மகன்(கள்) 1 மகள்(கள்)
மதம் இந்து
நிரந்தர முகவரி 145/70,தெற்கு அக்ரஹாரம்,தென்கரை,பெரியகுளம்,தேனி-625601
தற்காலிக முகவரி 145/70,தெற்கு அக்ரஹாரம்,தென்கரை,பெரியகுளம்,தேனி-625601
தொடர்பு எண் 04546284567
சமூக வலைதளங்கள் சமூக வலைதளங்கள்:

ஓ. பன்னீர்செல்வம் நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹5.09 CRORE
சொத்துக்கள்:₹7.82 CRORE
கடன்கள்: ₹2.74 CRORE

Disclaimer: The information relating to the candidate is an archive based on the self-declared affidavit filed at the time of elections. The current status may be different. For the latest on the candidate kindly refer to the affidavit filed by the candidate with the Election Commission of India in the recent election.

ஓ. பன்னீர்செல்வம் சுவாரசிய தகவல்கள்

1) இவர் சட்டமன்ற தேர்தல்களில் தோல்வியடைந்தது இல்லை.
2) சசிகலாவிற்கு எதிராக இவர் துவங்கிய தர்மயுத்தம், பொதுமக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு, நேர்மறையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றது.

ஓ. பன்னீர்செல்வம் அரசியலில் கடந்து வந்த பாதை

1969
  • ஒருங்கிணைந்த திமுகவின் தொண்டராக 1969ல் தனது 18வயதில் அரசியல் வாழ்க்கையை துவங்கினார் பன்னீர்செல்வம்

முந்தைய வரலாறு

2017
  • 21 ஆகஸ்ட் 2017ல் மீண்டும் அதிமுக-வை பன்னீர்செல்வம் கைப்பற்றிய பின்னர், தமிழகத்தின் துணை முதல்வர் ஆனார்.
2016
  • மீண்டும் போடிநாயக்கனூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஓபிஎஸ், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மீண்டும் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2016
  • 2006ல் அதிமுக தோல்வியடைந்த பின்னர், தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்கட்சி தலைவரானார்.
2015
  • ஜெயலலிதா விடுவிக்கப்பட்டு மீண்டும் முதல்வராக பதவியேற்ற பின்னர், பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2014
  • இரண்டாவது முறையாக ஜெயலலிதா தண்டனை பெற்றதால், மீண்டும் தமிழக முதல்வராக பணியாற்றினார்.
2011
  • போடிநாயக்கனூர் தொகுதியில் வெற்றி பெற்று, 2011ல் தமிழகத்தின் நிதியமைச்சர் ஆனார்.
2001
  • பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்வான பன்னீர்செல்வம், உச்சநீதிமன்றத்தால் ஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கிய பின்னர், தமிழகத்தின் 13வது முதல்வராக செப்டம்பர்2001ல் பதவியேற்றார்.
1996
  • 1996 முதல்2001 வரை பெரியகுளம் நகராட்சி தலைவராக பணியாற்றினார்
1973
  • திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் பிரிந்த பின்னர் 1973ல் அஇஅதிமுக-ல் இணைந்தார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X