Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏ.கே.ஆண்டனி

ஏ.கே.ஆண்டனி
இந்திய அரசியல்வாதியான ஏ. கே.
By Briti Roy | Thursday, May 30, 2019, 03:56:19 PM [IST]

ஏ.கே.ஆண்டனி சுயசரிதை

இந்திய அரசியல்வாதியான ஏ.கே. ஆண்டனி மூன்று முறை கேரளாவின் முதலமைச்சராக இருந்துள்ளார். கருணாகரன் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த காரணத்தால், முதல்முறையாக முதலமைச்சரான இவர் இருமுறை அப்பதவியில் இருந்தார். 2001ல் முதல்வராக பதவியேற்ற பின்னர் தனது பதவிகாலத்தை முழுமையாக அனுபவித்தார் ஏகே ஆண்டனி. முதலமைச்சராக பணியாற்றியது மட்டுமின்றி, ஐந்து முறை ராஜ்ய சபாவிற்கும், நான்கு முறை சட்டசபை உறுப்பினராகவும் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ஏறக்குறைய ஒரு தசாப்தம் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஏ.கே.ஆண்டனி அத்துறையில் நீண்டகாலம் பணியாற்றிய அமைச்சர் என பெயர்பெற்றார்.

மேலும் படிக்க

ஏ.கே.ஆண்டனி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் ஏ.கே.ஆண்டனி
பிறந்த தேதி 28 Dec 1940 (வயது 85)
பிறந்த இடம் செர்தலா, ஆலப்புழா மாவட்டம் (கேரளா)
கட்சி பெயர் Indian National Congress
கல்வி
தொழில் வழக்கறிஞர், அரசியல்வாதி மற்றும் சமூகசேவகர்
தந்தை பெயர் திரு.அரக்கபரம்பில் குரியன் பிள்ளை
தாயார் பெயர் திருமதி.அலே குட்டி
துணைவர் பெயர் திருமதி. எலிசபெத் ஆண்டனி
துணைவர் தொழில் ஓய்வுபெற்ற கனரா வங்கி மேலாளர்
குழந்தைகள் 2 மகன்(கள்)

ஏ.கே.ஆண்டனி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹80 LAKHS
சொத்துக்கள்
₹83.23 LAKHS
கடன்கள்
₹3.23 LAKHS

ஏ.கே.ஆண்டனி சுவாரசிய தகவல்கள்

1977 ஆம் ஆண்டு, தனது 37வது வயதில் முதல்வராக பதவியேற்று மிகவும் இளம் வயது முதல்வர் என பெயர் பெற்ற ஏ.கே.ஆண்டனி, ஏப்ரல் 27, 1977 முதல் 27 அக்டோபர் 1978 வரை பணியாற்றினார்.

ஏ.கே.ஆண்டனி அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2016 : ஐந்தாவது முறையாக மாநிலங்களவைக்கு தேர்வாகி, வான்வழி போக்குவரத்து துறை அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினரானார்.
  • 2014 : இரயில்வே துறைக்கான குழு உறுப்பினர்
  • 2010 : நான்காவது முறையாக மாநிலங்களவைக்கு தேர்வானார்.
  • 2006 : 2006 முதல் 2014 வரை பாதுகாப்புத்துறை அமைச்சர்
  • 2006 : சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை குழு உறுப்பினர்
  • 2006 : மக்கள்தொகை மற்றும் பொது சுகாதாரத்திற்கான நாடாளுமன்ற குழு உறுப்பினர்
  • 2005 : மூன்றாவது முறையாக மாநிலங்களவைக்கு தேர்வானார்.
  • 2001 : மீண்டும் கேரள முதல்வராக தேர்வானார்.
  • 2001 : மீண்டும் சேர்தலா தொகுதியில் வெற்றபெற்ற இவர், இம்முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சந்திரப்பன்-ஐ 6060 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
  • 1996 : மீண்டும் சேர்தலா தொகுதியில் 8385 வாக்குகள் வெற்றிபெற்று மூன்றாவது கேரள சட்டமன்றத்திற்கு தேர்வான ஏ.கே ஆன்டனி, சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1995 : இரண்டாவது முறையாக கேரள முதல்வராக பணியாற்றிய ஏ.கே. ஆன்டனி, மிககுறுகிய காலமே அப்பதவியில் நீடித்தார்.
  • 1993 : சிவில் சப்ளை, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோக துறை யின் மத்திய அமைச்சரானார்.
  • 1991 : இரண்டாவது முறையாக மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வானார்.
  • 1985 : மாநிலங்களவைக்கு தேர்வானார்.
  • 1977 : திருச்சூர் தொகுதியில் 4150 வாக்குகள் வித்தியாசத்தில் கே.ஜே ஜார்ஜ்-ஐ தோற்கடித்ததன் மூலம் சட்டமன்றத்திற்கு இரண்டாவது முறையாக தேர்வானார். அதனைத் தொடர்ந்து கேரளாவின் முதலமைச்சராக பதவியேற்றார்.
  • 1970 : கேரளாவில் உள்ள சேர்தாலா தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.கே.ஆன்டனி, அவரை எதிர்த்து போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் என்.பி. தன்டாரை தோற்கடித்தார்.

ஏ.கே.ஆண்டனி சாதனைகள்

தனது பதவிகாலத்தில், மாநில ஊழியர்களுக்கு வேலையில்லா கொடுப்பனவு, திருவிழா கொடுப்பனவு போன்றவற்றை அறிமுகப்படுத்தினார். சாராயத்திற்கான தடையை ஆதரித்த இவர், கேரளாவின் பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தார்.பல்வேறு அறிக்கைகள் படி, ஈ.கே. நாயானார்-க்கு பிறகு கேரளாவின் சிறந்த முதலமைச்சராக புகழ்பெற்றவர் ஏ.கே.ஆன்டனி.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+