Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அஜய் மேக்கன்

அஜய் மேக்கன்
அஜய் மேக்கன் இந்திய அரசியல்வாதி. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
By Rashmi | Tuesday, February 19, 2019, 01:51:58 PM [IST]

அஜய் மேக்கன் சுயசரிதை

அஜய் மேக்கன் இந்திய அரசியல்வாதி. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அஜய் மேக்கன் 2 முறை நாடாளுமன்றத்திற்கும், 3 முறை டெல்லி சட்டசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மத்திய அமைச்சரவையில் வீட்டு வசதித்துறை மற்றும் வறுமை ஒழிப்புத்துறை அமைச்சராக இருந்துள்ளார். அஜய் மேக்கன் டெல்லியில் 1964ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி பிறந்தார். டெல்லி செயின்ட் சேவியர் பள்ளியில் படித்தார். பிஎஸ்சி வேதியியில் பட்டப் படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்தார். இவரது மனைவி பெயர் திருமதி ராதிகா மேக்கன். இத்தம்பதிக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

மேலும் படிக்க

அஜய் மேக்கன் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் அஜய் மேக்கன்
பிறந்த தேதி 12 Jan 1964 (வயது 62)
பிறந்த இடம் டெல்லி
கட்சி பெயர் Indian National Congress
கல்வி Post Graduate
தொழில் தொழிலதிபர், அரசியல்வாதி
தந்தை பெயர் சிபி மேக்கன்
தாயார் பெயர் திருமதி சந்தோஷ் மேக்கன்
துணைவர் பெயர் திருமதி ராதிகா மேக்கன்
துணைவர் தொழில் தகவல் இல்லை
குழந்தைகள் 1 மகன்(கள்) 2 மகள்(கள்)

அஜய் மேக்கன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹6.06 CRORE
சொத்துக்கள்
₹6.11 CRORE
கடன்கள்
₹5 LAKHS

அஜய் மேக்கன் சுவாரசிய தகவல்கள்

39 வயதில் சட்டசபை சபாநாயகராகி, நாட்டிலேயே இளம் சபாநாயகர் என்ற பெருமையைப் பெற்றவர் மேக்கன். சுற்றுச்சூழல் குறித்த ஆர்வம் அதிகம் கொண்டவர் மேக்கன். நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தீவிரமாக கலந்து கொள்பவர். கிரிக்கெட், கோல்ப் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்டவர்.

அஜய் மேக்கன் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2014: 2014 லோக்சபா தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் பாஜகவின் மீனாட்சி லேகியிடம் தோல்வியுற்றார். பின்னர் 2015 வரை காங்கிரஸ் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.
  • 2012-2013: வீட்டு வசதித்துறை மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத்துறை கேபினட் அமைச்சராகப் பணியாற்றினார்.
  • 2011-2012: மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இணை அமைச்சராக தனிப்பொறுப்புடன் செயல்பட்டார்.
  • 2009 - 2011: மத்திய உள்துறை இணை அமைச்சராக செயல்பட்டார்.
  • 2007: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் நிரந்தர அழைப்பாளர், உறுப்பினர். மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு)
  • 2006: மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை அமைச்சரானார்.
  • 2004: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
  • 2004: வகிக்கும் பதவிகள் - பொது நோக்க கமிட்டியின் உறுப்பினர், ரூல்ஸ் கமிட்டி உறுப்பினர், தகவல் தொடர்பு கமிட்டி உறுப்பினர், ஹவுஸ் கமிட்டி உறுப்பினர், லோக்சபா பேனல் சேர்மன்.
  • 2004: 14வது லோக்சபாவுக்கு நடந்த தேர்தலில் புது டெல்லி தொகுதியில் போட்டியிட்டு பாஜகவின் ஜக்மோகனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
  • 2004: டெல்லி சட்டசபையின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2001-2003: டெல்லி அரசில், போக்குவரத்து, மின்துறை கேபினட் அமைச்சராகப் பணியாற்றினார்.
  • 1999-2001: டெல்லி அரசில், ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தபோது அவருக்கு சட்டசபை செயலாளராகப் பணியாற்றினார்.
  • 1993: டெல்லி சட்டசபைக்கு 1993ம் ஆண்டு ரஜோரி கார்டன் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1998, 2003 ஆகிய ஆண்டுகளிலும் அவர் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டிலேயே மிகவும் இள வயதில் சபாநாயகர் ஆன பெருமைக்குரியவர். 2001-2003ல் மின்சாரம், போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அப்போது இந்தப் பதவியை வகித்த இளம் வயதுக்குரியவர் என்ற பெருமையை அவர் பெற்றார். அப்போது அவருக்கு வெறும் 37 வயதுதான்.

முந்தைய வரலாறு

  • 1985: டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் மேக்கன். டெல்லி மாணவர் சங்க தலைவராக 1985ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிப்படையில் அஜய் மேக்கன் ஒரு தொழிலதிபர் ஆவார்.

அஜய் மேக்கன் சாதனைகள்

தகவல் இல்லை

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+