Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசோக் கெலாட்

அசோக் கெலாட்
1998 முதல் 2003 வரையிலும், பின்னர் 2008 முதல் 2013 வரைிலும் இரு முறை ராஜஸ்தான் முதல்வராகப் பணியாற்றியுள்ளார். பலமுறை மத்திய அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
By Administrator | Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

அசோக் கெலாட் சுயசரிதை

1998 முதல் 2003 வரையிலும், பின்னர் 2008 முதல் 2013 வரைிலும் இரு முறை ராஜஸ்தான் முதல்வராகப் பணியாற்றியுள்ளார். பலமுறை மத்திய அமைச்சராக பணியாற்றியுள்ளார். அறிவியல், சட்டம் ஆகியவற்றில் இள நிலை பட்டமும், பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

அசோக் கெலாட் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் அசோக் கெலாட்
பிறந்த தேதி 03 May 1951 (வயது 74)
பிறந்த இடம் மஹாமந்திர், ஜோத்பூர், ராஜஸ்தான்
கட்சி பெயர் Indian National Congress
கல்வி Post Graduate
தொழில் ராஜஸ்தான் சட்டசபை உறுப்பினர், முதல்வர்.
தந்தை பெயர் பாபு லட்சுமண் சிங் கெலாட்
தாயார் பெயர் தகவல் இல்லை
துணைவர் பெயர் சுனிதா கெலாட்
துணைவர் தொழில் இல்லத்தரசி
குழந்தைகள் 1 மகன்(கள்) 1 மகள்(கள்)
மதம் இந்து
இணையதளம் ashokgehlot.in

அசோக் கெலாட் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹11.69 CRORE
சொத்துக்கள்
₹11.69 CRORE
கடன்கள்
N/A

அசோக் கெலாட் சுவாரசிய தகவல்கள்

1971 ஆம் ஆண்டில், கிழக்கு பெங்காலி அகதிகள் பிரச்சினை உருவெடுத்தபோது, அகதிகள் முகாம்களில் கெலாட் பணியாற்றினார். அப்போது அந்த முகாமுக்கு வந்த பிரதமர் இந்திரா காந்தி அசோக் கெலாட்டை சந்தித்தார். அவரது நிர்வாகத் திறமையால் ஈர்க்கப்பட்ட இந்திரா கா்தி, கெலாட்டை ராஜஸ்தான் இந்திய தேசிய மாணவ சங்கத்தின் தலைவராக நியமித்தார். ராஜஸ்தான் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் முதல் தலைவர் கெலாட்தான்.

அசோக் கெலாட் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2017: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
  • 2008 - 2013: சட்டசபை தேர்தலில் சர்தார்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ராஜஸ்தானின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். 2013ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி வரை ஆட்சியில் நீடித்து தனது ஐந்து ஆண்டு கால ஆட்சியை நிறைவுசெய்தார்.
  • 2004 - 2008: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
  • 2003: ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வசுந்தரா ராஜே முதல்வராக பதவி வகிக்க, கெலாட் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டார்.
  • 1998 - 2003: 1998ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி ராஜஸ்தான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்தர்பூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி வரை அவர் முதல்வராக பணியாற்றினார்.
  • 1998: பன்னிரண்டாவது மக்களவைக்கு தேந்தெடுக்கப்பட்டார். அவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஜஸ்வந்த் சிங் பிஷ்னோய் யை மீண்டும் தோற்கடித்தார். ஆனால் டிசம்பர் மாதம் அவர் லோக்சபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
  • 1997 - 1999: ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.
  • 1996 - 1998: மக்களவை வெளி விவகாரத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
  • 1996 - 1998: மக்களவை தேர்தலில் ஜோத்பூர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். அவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஜஸ்வந்த் சிங்கை 2,42,176 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
  • 1994 - 1997: ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1991 - 1998: 10 மற்றும் 11வது மக்களவையில் ரயில்வே துறை நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
  • 1991 - 1996: மக்களவை தகவல் தொடர்பு ஆலோசனை குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1991 - 1993: மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராக (தனிப் பொறுப்பு) நியமிக்கப்பட்டார்.
  • 1991 - 1996: ஜோத்பூர் தொகுதியில் இருந்து பத்தாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ராம் நரைன் பிஷ்னோய்யை தோற்கடித்தார்.
  • 1989 - 1989: ராஜஸ்தான் மாநில உள்துறை மற்றும் பொது சுகாதாரத் துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 1985 - 1989: ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1984 - 1989: ஜோத்பூர் லோக்சபா தொகுதியிலிருந்து எட்டாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பல்விர் சிங்கை தோற்கடித்தார்.
  • 1984 - 1985: மத்திய சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 1984 - 1984: மத்திய விளையாட்டுத்துறை இணை அமைச்சராக செயல்பட்டார்.
  • 1983 - 1984: மத்திய சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 1982 - 1983: மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 1982: ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டார்.
  • 1980 - 1982: மக்களவை பொதுக் கணக்குக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
  • 1980 - 1984: ஜோத்பூர் லோக்சபா தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜேஎன்பி கட்சியின் வேட்பாளர் பல்பீர் சிங் கச்வாவை அவர் தேர்தலில் தோற்கடித்தார்.
  • 1979 - 1982: ஜோத்பூர் நகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1974 - 1979: இந்திய தேசிய மாணவர் சங்கத்தில் சேர்ந்தார்.விரைவில் ராஜஸ்தான் மாநில பிரிவின் தலைவரானார்.

முந்தைய வரலாறு

  • 1971: அசோக் கெலாட் இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் உள்ள அகதி முகாம்களில் (கிழக்கு வங்காள அகதிகள்) பணியாற்றியுள்ளார்.

அசோக் கெலாட் சாதனைகள்

அசோக் கெலாட் பாரத் சேவா சன்ஸ்தான் அமைப்பை நிறுவியவர். ராஜீவ் காந்தி நினைவு புத்தக வங்கி மூலம் இந்த அமைப்பஆனது இலவச ஆம்புலன்ஸ் சேவை மற்றும் இலவச புத்தகங்களை விநியோகித்து வருகிறது.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+