முகப்பு
 » 
பூபிந்தர் சிங் ஹூடா

பூபிந்தர் சிங் ஹூடா

பூபிந்தர் சிங் ஹூடா

பூபிந்தர் சிங் ஹூடா இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். ஹரியானா முதல்வராக 2004 முதல் 2014 வரை இருந்தார்.

பூபிந்தர் சிங் ஹூடா சுயசரிதை

பூபிந்தர் சிங் ஹூடா இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். ஹரியானா முதல்வராக 2004 முதல் 2014 வரை இருந்தார். 2009ம் ஆண்டு 2வது முறையாக அவர் முதல்வரானபோது, 1972ம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து 2வது முறை ஆட்சியைப் பிடித்த முதல் முதல்வர் என்ற சாதனையை அவர் படைத்தார். பஞ்சாப் - ஹரியானா பார் கவுன்சில் உறுப்பினராகவும் ஹூடா இருக்கிறார். 2010ம் ஆண்டு ஹூடா தலைமையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் விவசாய உற்பத்திக்கான செயல் படையை உருவாக்கினார்.

மேலும் படிக்க
By Ajay M V Updated: Friday, March 29, 2019, 05:35:24 PM [IST]

பூபிந்தர் சிங் ஹூடா தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் பூபிந்தர் சிங் ஹூடா
பிறந்த தேதி 15 Sep 1947 (வயது 76)
பிறந்த இடம் சங்கி கிராமம், ரோதக் மாவட்டம், ஹரியானா
கட்சி பெயர் Indian National Congress
கல்வி Graduate Professional
தொழில் அரசியல்வாதி, விவசாயி
தந்தை பெயர் ரன் பீர் சிங் ஹூடா
தாயார் பெயர் ஹர் தேவி ஹூடா
துணைவர் பெயர் ஆஷா ஹூடா
துணைவர் தொழில் இல்லத்தரசி
குழந்தைகள் 1 மகன்(கள்) 1 மகள்(கள்)
மதம் இந்து
நிரந்தர முகவரி மாது ராம் பவன், மாடல் டவுன், டெல்லி சாலை, ரோத்தக் - 124001 (ஹரியானா)
தற்காலிக முகவரி தகவல் இல்லை
தொடர்பு எண் 01262211777, 01722749394
மின்னஞ்சல் [email protected]
இணையதளம் N/A
சமூக வலைதளங்கள் சமூக வலைதளங்கள்:

பூபிந்தர் சிங் ஹூடா நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹15.38 CRORE
சொத்துக்கள்:₹15.53 CRORE
கடன்கள்: ₹14.4 LAKHS

Disclaimer: The information relating to the candidate is an archive based on the self-declared affidavit filed at the time of elections. The current status may be different. For the latest on the candidate kindly refer to the affidavit filed by the candidate with the Election Commission of India in the recent election.

பூபிந்தர் சிங் ஹூடா சுவாரசிய தகவல்கள்

அரசியல் தவிர கீழ்க்கண்ட பணிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
1) ரோதக் ஜாட் கல்விக் கழக செயலாளர்.
2) ஹரியானா, ஹசன்கர், டிஏவி கல்விக் கழக நிர்வாக கமிட்டி உறுப்பினர்.
ஹரியானாவில் பல்வேறு விவசாய இயக்கங்களில் ஈடுபட்டுள்ளார்.

பூபிந்தர் சிங் ஹூடா அரசியலில் கடந்து வந்த பாதை

2014
  • ஹரியானா சட்டசபைக்கு கர்ஹி சம்பா கிலோய் தொகுதியிலிருந்து வெற்றி.
2009
  • ஹரியானா முதல்வராக 2வது முறையாக 2009ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி தேர்வானார்.
2009
  • 11வது ஹரியானா சட்டசபைக்கு கர்ஹி சம்பா கிலோய் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார்.
2005
  • ஹரியானா முதல்வராக முதல் முறையாக 2005ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி பதவியேற்றார்.
2004
  • கர்ஹி சம்பா கிலோய் தொகுதியிலிருந்து 10வது ஹரியானா சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2004
  • 14வது லோக்சபாவுக்கு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது 4வது முறை. பாஜகவின் அபிமன்யுவை 1 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வீழ்த்தினார்.
2002
  • 2002 முதல் 2004 வரை ஹரியானா எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார்.
1999
  • ஹரியானா சட்டசபைக்கு கர்ஹி சம்பா கிலோய் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1998
  • 12வது லோக்சபாவுக்கு 3வது முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனதா வேட்பாளர் தேவி லாலை 383 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
1997
  • ஹரியானா பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1996
  • ரோதக் தொகுதியிலிருந்து 2வது முறையாக 11வது லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேவிலாலை 2664 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
1991
  • ஜனதா கட்சியின் தேவிலாலை ரோதக் தொகுதியில் 30,000 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி 10வது லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1980
  • 1980ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை ஹரியானா பிரதேச இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்தார். ரோதக் பஞ்சாயத்து சமிதி தலைவர், ஹரியானா பஞ்சாயத்து பரிஷத் தலைவராக இருந்தார்.
1972
  • ஹரியானாவின் கிலோய் தாலுகா காங்கிரஸ் கமிட்டி தலைவராக 1972 முதல் 1979 வரை செயல்பட்டார்.

பூபிந்தர் சிங் ஹூடா சாதனைகள்

ஹரியானா முதல்வராக 2 முறை தொடர்ந்து பதவி வகித்துள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X