முகப்பு
 » 
கேப்டன் அம்ரிந்தர் சிங்

கேப்டன் அம்ரிந்தர் சிங்

கேப்டன் அம்ரிந்தர் சிங்

கேப்டன் அமிரீந்தர் சிங் பஞ்சாப்பின் தற்போதைய (இருபத்தாறாவது) முதலமைச்சர் ஆவார். இதற்கு முன்பு 2002-2007 முதல் பஞ்சாப் முதலமைச்சராக பணியாற்றினார்.

கேப்டன் அம்ரிந்தர் சிங் சுயசரிதை

கேப்டன் அமிரீந்தர் சிங் பஞ்சாப்பின் தற்போதைய (இருபத்தாறாவது) முதலமைச்சர் ஆவார். இதற்கு முன்பு 2002-2007 முதல் பஞ்சாப் முதலமைச்சராக பணியாற்றினார். அவர் பாட்டியாலா தொகுதியில் இருந்து சட்டசபை உறுப்பினராகவும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980ம் ஆண்டு முதல் முறையாக மக்களவையில் வெற்றி பெற்றார். அரசியலோடு மட்டுமல்லாமல், 1963 முதல் 1966 வரை இந்திய இராணுவத்திற்காக பணியாற்றியுள்ளார். பாட்டியாலாவின் சித்து பிராரில் உள்ள புல்கிய வம்சத்தைச் சேர்ந்த மகாராஜா யதாவிந்திர சிங் மற்றும் மஹாராணி மொஹீந்தர் கவுர் ஆகியோருக்கு பிறந்தார். வெல்ஹாம் ஆண்கள் பள்ளி மற்றும் லாரன்ஸ் சானவார் பள்ளி மற்றும் டெஹ்ராடூனில் உள்ள டூன் பள்ளி ஆகியவற்றில் தனது பள்ளி படிப்பை முடித்தார். அவரது மனைவி பிரனீத் கவுர் 2009 முதல் 2014 வரை எம்பியாகவும், மத்திய வெளிவிவகாரத் துறை இணை அமைச்சராகவும் இருந்தார். அவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அரசியலில் சேர்வதற்கு முன் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். 1963ஆம் ஆண்டு தேசிய ராணுவ அகாடமி மற்றும் இந்திய இராணுவ அகாடமிலிருந்து பட்டப்படிப்பை முடித்து இராணுவத்தில் சேர்ந்தார். 1965 ல் இந்திய-பாகிஸ்தான் போரின்போது இந்திய இராணுவத்தில் மீண்டும் இணைந்தார். அவர் சீக்கியப் படைப் பிரிவில் இணைந்து பணியாற்றினார்.

மேலும் படிக்க
By Shalini Updated: Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

கேப்டன் அம்ரிந்தர் சிங் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் கேப்டன் அம்ரிந்தர் சிங்
பிறந்த தேதி 11 Mar 1942 (வயது 82)
பிறந்த இடம் பாட்டியாலா
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Graduate
தொழில் அரசியல்வாதி
தந்தை பெயர் யதவிந்த்ரா சிங்
தாயார் பெயர் மொஹிந்தர் கவுர்
மதம் சீக்கியர்
இணையதளம் http://captainamarindersingh.com/
சமூக வலைதளங்கள் சமூக வலைதளங்கள்:

கேப்டன் அம்ரிந்தர் சிங் நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹59.47 CRORE
சொத்துக்கள்:₹68.73 CRORE
கடன்கள்: ₹9.27 CRORE

கேப்டன் அம்ரிந்தர் சிங் சுவாரசிய தகவல்கள்

கேப்டன் அமரீந்தர் சிங் ஒரு எழுத்தாளர் ஆவார். ஒரு சில புத்தகங்களை எழுதியிருக்கிறார். போர் மற்றும் சீக்கிய வரலாறு தொடர்பா அவர் சில முக்கிய நூல்களை எழுதியுள்ளார். அவை ஒரு ரிட்ஜ் டூ ஃபார், லெஸ்ட வி பார்காட், தி லாஸ்ட் சன்செட்: ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் லாகூர் தர்பார் அண்ட் தி சீக்கியஸ் இன் பிரிட்டன் : 150 ஆண்டுகால புகைப்படங்கள் ஆகும். கிரேட் வார் 1914-1918ல் இந்தியாவின் இராணுவ பங்களிப்பு மற்றும் மழைக்கால போர் ஆகியவை. 1965 இந்தியா பாகிஸ்தான் போர் குறித்த இவரது நினைவுகளையும் புத்தகமாக்கியுள்ளார்.

போலோ, ரைடிங், கிரிக்கெட், ஸ்குவாஷ், பேட்மிண்டன் ஆகியவை இவரது விருப்ப விளையாட்டுகள் ஆகும்.

கேப்டன் அம்ரிந்தர் சிங் அரசியலில் கடந்து வந்த பாதை

2017
  • காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் சட்டமன்றத் தேர்தலில் வென்றது. அமரீந்தர் சிங் முதல்வராக பதவி ஏற்றார். பஞ்சாப் மாநிலத்தின் 26 வது முதலமைச்சராக அவர் பதவி ஏற்றார்.
2016
  • 2016 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி லோக்சபாவிலிருந்து ராஜினாமா செய்தார். பின்னர் முழுமையாக பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் தீவிரப் பிரசாரம் செய்தார்.
2015
  • பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
2014
  • பஞ்சாப் சட்டசபைக்கு ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் பாட்டியாலா (நகர்ப்புற) மூன்று முறை, சாமனா மற்றும் தல்வண்டி சபோ ஆகியவற்றில் தலா ஒருமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பாதுகாப்பு நிலை குழுவில் உறுப்பினர் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் உறுப்பினராகவும் 2014ம் ஆண்டு செப்டம்பர் 1 முதல் 2016 ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி வரை செயல் பட்டார்.
2010
  • பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் (2010 முதல் 2013 வரை)
2008
  • பஞ்சாப் காங்கிரஸ் பிரச்சாரக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்
2002
  • 2002ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி அன்று பஞ்சாப் முதலமைச்சராக பொறுப்பேற்றார். 2007ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் தேதி வரை அவர் முதல்வராக பணியாற்றினார்.
1999
  • பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2002ம் ஆண்டு வரை இந்த பதவியில் இருந்தார்.
1998
  • பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் பாட்டியாலா தொகுதியில் பிரேம் சிங் சந்துமஜராவுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் ஷிரோமணி அகாலி தளம் (பன்திக்) கட்சியை காங்கிரசுடன் இணைத்து தனது பழைய நண்பர்களுடன் இணைந்தார்.
1992
  • அகாலிதளம் கட்சியிலிருந்து அவர் ராஜினாமா செய்தார். பின்னர் ஷிரோமணி அகாலிதளம் (பன்திக்) என்ற கட்சியை உருவாக்கி, பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தார்.
1985
  • அமரிந்தர் சிங், தால்வண்டி சபா தொகுதியில் இருந்து பஞ்சாப் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் காங்கிரஸ் கட்சியின் அவதார் சிங்கை தோற்கடித்தார். பின்னர் அவர் வேளாண்மை துறை , வனத் துறை , வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துகளுக்கான அமைச்சராக விளங்கினார்.
1984
  • ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் காலத்தில் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் பதவிிலிரு்து விலகினார். காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகினார். பின்னர் ஷிரோமணி அகாலி தளம் கட்சியில் சேர்ந்தார்.
1980
  • ராஜீவ் காந்தியால் கேப்டன் அமரிந்தர் சிங் காங்கிரசில் சேர்க்கப்பட்டார். முதலில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜீவ் மற்றும் அமரிந்தர் சிங் ஆகிய இருவரும் பள்ளி பருவ நண்பர்கள் ஆவார்.

முந்தைய வரலாறு

1965
  • 1965 ல் இந்திய-பாகிஸ்தான் போரின் போது கேப்டனாக பணியாற்றினார்
1963
  • தேசிய பாதுகாப்பு அகாடமிலிருந்து பட்டம் பெற்ற பிறகு இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்

கேப்டன் அம்ரிந்தர் சிங் சாதனைகள்

2013 ஆம் ஆண்டு முதல் ஜாட் மஹாசபாவின் தலைவராக உள்ளார். இவர் மர்லேபோன் கிரிக்கெட் கிளப், யுகே கடற்படை மற்றும் இராணுவக் கழகம், லண்டன், கோல்ஃப் கிளப், தில்லி, பாட்டியாலா ஜிம்கானா கிளப் மற்றும் ஓட்டிகேர்ஸ் இன்ஸ்டிடியூட், பட்டியாலா ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார்.

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X