Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிராக் குமார் பஸ்வான்

சிராக் குமார் பஸ்வான்
சிராக் பஸ்வான் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் லோக் ஜன்சக்தி கட்சியை சேர்ந்தவர்.
By Rashmi | Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

சிராக் குமார் பஸ்வான் சுயசரிதை

சிராக் பஸ்வான் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் லோக் ஜன்சக்தி கட்சியை சேர்ந்தவர். அரசியல் அனுபவம் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மகன் ஆவார். தற்போது அவர் லோக் ஜன்சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். சிராக், 2014 ஆம் ஆண்டில் பதினாறாவது மக்களவைக்கு ஜமுய் தொகுதியிலிருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியலில் நுழைவதற்கு முன் பாலிவுட்டில் அறிமுகமானார். ஆனால் அங்குஅவருக்கு சரியான வாய்ப்பு அமையவில்லை. சிராக் பஸ்வான் 1982 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி பீகாரின் காகரியாவில் பிறந்தார். புது தில்லியில் உள்ள தேசிய திறந்த வெளி பள்ளியான ஸ்வதேசியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார்.

2003ம் ஆண்டு பிடெக் கணினி தொழில்நுட்ப அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்றார். ஜான்சியில் உள்ள புந்தெல்கன் பல்கலைக்கழகத்தில் பிடெக் கம்ப்யூட்டர் என்ஜீனியரிங் படிப்பில் சேர்ந்த அவர் 3வது செமஸ்டர் வரை படித்துள்ளார்.

மேலும் படிக்க

சிராக் குமார் பஸ்வான் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் சிராக் குமார் பஸ்வான்
பிறந்த தேதி 31 Oct 1982 (வயது 43)
பிறந்த இடம் காகரியா, பீகார்
கட்சி பெயர் Lok Jan Shakti Party
கல்வி 12th Pass
தொழில் அரசியல்வாதி
தந்தை பெயர் ஸ்ரீ ராம் விலாஸ் பஸ்வான்
தாயார் பெயர் திருமதி. ரீனா பஸ்வான்
துணைவர் பெயர் தகவல் இல்லை
துணைவர் தொழில் தகவல் இல்லை
மதம் இந்து
இணையதளம் NA

சிராக் குமார் பஸ்வான் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹2.69 CRORE
சொத்துக்கள்
₹2.69 CRORE
கடன்கள்
N/A

சிராக் குமார் பஸ்வான் சுவாரசிய தகவல்கள்

சிராக் பஸ்வான் அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அரசு சாரா நிறுவனத்தை சிராக் பஸ்வான் சொந்தமாக தொடங்கினார்.

சிராக் குமார் பஸ்வான் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2014: 16வது லோக்சபாவுக்கு ஜமுய் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் சிராக் பஸ்வான். தேர்தலில் அவர் சுதன்ஷு சேகர் பாஸ்கரை 1,99,407 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
  • 25 March, 2015: அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் வனத்துறை நிலைக்குழு உறுப்பினராக இருந்தார்.
  • 15 Sep. 2014: ஜமுய், ஊழல் கண்காணிப்பு பிரிவின் தலைவராக செயல்பட்டார்.
  • 15 Sep. 2014: இந்தி ஆலோசனைக் குழு உறுப்பினர், பொருளாதார விவகாரம் மற்றும் நிதி சேவைத் துறையின் ஆலோசனைக் குழு உறுப்பினர்
  • 15 Sep. 2014: நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சித் திட்ட கமிட்டி உறுப்பினராக செயல்பட்டார்.
  • 13 May 2015: 2015ல் கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் (இரண்டாம் திருத்தம்) , இழப்பீடு சட்ட திருத்த சட்ட மசோதாவுக்கான இணைக் குழுவின் உறுப்பினராக இருந்தார்.
  • 11 May 2016 onwards: கடன் மீட்பு மற்றும் கந்து வட்டிப் பாதுகாப்பு, இதர ஒதுக்கீடுகள் திருத்தச் சட்டக் கமிட்டியின் இணைக் குழு உறுப்பினராக இருந்தார்.
  • 1 Sep. 2014: மனித வள மேம்பாட்டுத் துறையின் ஆலோசனைக் கமிட்டியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
  • 1 Sep. 2014: சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்..

முந்தைய வரலாறு

  • 2011: சிராக் பஸ்வான் அரசியலில் நுழைவதற்கு முன் நடிகராக இருந்தார். 2011 ஆம் ஆண்டில் வெளியான மிலே நா மிலே ஹம் என்ற இந்திப் படத்தில் நடித்திருந்தார்.

சிராக் குமார் பஸ்வான் சாதனைகள்

2012ம் ஆண்டு சிராக் ஸ்டார்டஸ்ட் விருதை பெற்றார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+