Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கான்ராட் கொங்கல் சங்மா

கான்ராட் கொங்கல் சங்மா
கான்ராட் கொங்கல் சங்மா மேகாலயாவின் முன்னாள் முதலமைச்சர் பி. ஏ.
By Administrator | Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

கான்ராட் கொங்கல் சங்மா சுயசரிதை

கான்ராட் கொங்கல் சங்மா மேகாலயாவின் முன்னாள் முதலமைச்சர் பி.ஏ.சங்மாவின் மகன் ஆவார். படிப்பை முடித்த கையோடு அரசியலுக்கு வந்து விட்டார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் இருந்து தொழில் முனைவோர் நிர்வாகத்தில் வணிக நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். இம்பீரியல் கல்லூரி லண்டனில் இருந்து அவர் தனது முதுகலை வணிக நிர்வாகவியல் பட்டமும் பெற்றார். 2004ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் 182 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

2008 இல் நடந்த அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அவர் சகோதரருடன் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016ம் ஆண்டு மார்ச் மாதம் தனது தந்தையின் மரணத்திற்குப் பின், அவர் தேசிய மக்கள் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் துரா தொகுதியில் இருந்து பதினாறாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அவரது கட்சி 19 இடங்களில் வென்றது. மற்ற சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது மேகாலயா முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவர் நிதி அமைச்சராகவும் இருக்கிறார். அவருக்கு ஒரு சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர். அவரது சகோதரர் ஜேம்ஸ் மற்றும் சகோதரி அகதா ஆகியோரும் அரசியல்வாதிகளாக உள்ளனர்.

மேலும் படிக்க

கான்ராட் கொங்கல் சங்மா தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் கான்ராட் கொங்கல் சங்மா
பிறந்த தேதி 27 Jan 1978 (வயது 48)
பிறந்த இடம் துரா, மேற்கு கரோ மலை, மேகாலயா
கட்சி பெயர் Nationalist Congress Party
கல்வி
தொழில் அரசியல், சமூக சேவை, வர்த்தகம்
தந்தை பெயர் திரு புர்னோ அஜிடாக் சங்மா
தாயார் பெயர் திருமதி சொரதானி கொங்கல் சங்மா
துணைவர் பெயர் மேத்தாப் அஜிடாக் சங்மா
துணைவர் தொழில் டாக்டர்
குழந்தைகள் 2 மகள்(கள்)
மதம் கிறிஸ்தவம்

கான்ராட் கொங்கல் சங்மா நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹13.83 CRORE
சொத்துக்கள்
₹14.07 CRORE
கடன்கள்
₹24.13 LAKHS

கான்ராட் கொங்கல் சங்மா சுவாரசிய தகவல்கள்

2008 ஆம் ஆண்டில் மேகாலயா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் சங்மாவும் அவரது மூத்த சகோதரரும் ஜேம்ஸும் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். மேகாலயாவில் பதவியேற்ற பத்து நாட்களுக்குள் அவர் தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

கான்ராட் கொங்கல் சங்மா அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2018: 2018ம் ஆண்டு மேகாலய சட்டமன்ற தேர்தலில் துரா தொகுதியில் போட்டியிட்டு மேகாலயாவின் பன்னிரண்டாவது முதலமைச்சராக பதவியேற்றார்.
  • 2016: 2016 ஆம் ஆண்டில் எரிசக்தி நிலைக்குழு உறுப்பினராக ஆனார்.
  • 2016: துரா தொகுதியில் இருந்து பதினாறாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1.92 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
  • 2009: மேகலாயா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக 2013 வரை செயல்பட்டார்.
  • 2008: மாநில அமைச்சரவையில் நிதி, மின்சாரம், சுற்றுலா, ஜிஏடி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 2008: செல்செல்லா தொகுதியிலிருந்து மேகாலயா சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிளமென்ட் மராக்கை தோற்கடித்தார்.
  • 2003: 2003ம் ஆண்டு செல்செல்லா தொகுதியிலிருந்து முதல் முறையாக போட்டியிட்டார். இத்தேர்தலில் கிளமென்ட் மராக்கிடம் 182 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
  • 1990s: தனது அரசியல் வாழ்க்கையை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரச்சார மேலாளராக தொடங்கினார் மற்றும் அவரது தந்தை பி ஏ சங்கமாவுக்கு உதவியாக இருந்தார்.

முந்தைய வரலாறு

  • 2009 May: டாக்டர் மேத்தாப் சன்டியை திருமணம் செய்து கொண்டார்.

கான்ராட் கொங்கல் சங்மா சாதனைகள்

கல்வி மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பாக செயல்படும் பி.ஏ. சங்மா அறக்கட்டளையின் தலைவராக இருக்கிறார். மேகாலயாவில் நான்கு கல்லூரிகளை இயக்கி வருகிறார். தற்போது மேகாலயா கிரிக்கெட் சங்கம் மற்றும் விளையாட்டு அகாடமியின் தலைவராக பணியாற்றி வருகிறார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+