முகப்பு
 » 
தினேஷ் திரிவேதி

தினேஷ் திரிவேதி

தினேஷ் திரிவேதி

முன்னாள் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி அரசியல் பயணத்தில் இறங்குவதற்கு முன்னர் தனது தொழிலில் திறமையானவராக இருந்தார். 1980களில் காங்கிரஸில் இருந்தார்.

தினேஷ் திரிவேதி சுயசரிதை

முன்னாள் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி அரசியல் பயணத்தில் இறங்குவதற்கு முன்னர் தனது தொழிலில் திறமையானவராக இருந்தார். 1980களில் காங்கிரஸில் இருந்தார். 90களில் ஜனதாதளத்திற்குப் போனார். பின்னர் மமதா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் கட்சிக்குத் தாவினார்.

1974ம் ஆண்டில் எம் பி ஏ பட்டம் பெற்றார். அவர் சிகாகோவில் உள்ள டிடெக்ஸ் கம்பெனியில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். இந்தியாவிற்கு திரும்புவதற்கு முன்பு லீ மற்றும் முயர்ஹெட் நிறுவனத்தில் பணியாற்றினார். 1984 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் தனது சொந்த விமான சரக்கு நிறுவனத்தை தொடங்குவதற்காக தனது வேலையை விட்டு வெளியேறினார். நுகர்வோர் பாதுகாப்பு மையத்தையும் அவர் ஆரம்பித்தார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ.) இயக்கத்திற்கு வழிவகுத்த வோஹ்ரா அறிக்கையை உருவாக்கியதில் அவரது சாதனை குறிப்பிடத்தக்கதாக இருந்தது. 2011 ல் ரெயில்வே அமைச்சராக நியமிக்கப்பட்டார். இருப்பினும் அவர் தனது பதவி காலத்தில் ரயில்வே கட்டண உயர்வை முன்மொழிந்ததன் மூலம் கட்சியின் தலைவரான மம்தாவின் கோபத்திற்கு ஆளானதால் பதவி விலகினார். மோடி அரசுக்கு ஒரு கடுமையான விமர்சகராக இருந்தார்.

மேலும் படிக்க
By Briti Roy Updated: Thursday, May 30, 2019, 04:03:42 PM [IST]

தினேஷ் திரிவேதி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் தினேஷ் திரிவேதி
பிறந்த தேதி 04 Jun 1950 (வயது 73)
பிறந்த இடம் புது தில்லி
கட்சி பெயர் All India Trinamool Congress
கல்வி Post Graduate
தொழில் அரசியல்வாதி மற்றும் சமூக சேவகர்
தந்தை பெயர் மறைந்த திரு ஹிராலால் திரிவேதி
தாயார் பெயர் மறைந்த திருமதி ஊர்மிளாபென் திரிவேதி

தினேஷ் திரிவேதி நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹5.03 CRORE
சொத்துக்கள்:₹6.62 CRORE
கடன்கள்: ₹1.59 CRORE

தினேஷ் திரிவேதி சுவாரசிய தகவல்கள்

இந்திய விமானப்படையில் சேர வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தவர், அமெரிக்காவில் தங்கியிருந்தபோது பைலட் பயிற்சி பெற்றார்.

ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி வங்காளத்தின் முதலமைச்சராக அறிவிக்கப்பட்ட பின்னர் இவர் ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றார்.

தினேஷ் திரிவேதி அரசியலில் கடந்து வந்த பாதை

2017
  • நிதி குழுவில் உறுப்பினர்.
2014
  • பாரக்பூர் தொகுதியில் இருந்து பதினாறாவது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்த முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான சுபாஷினி அலியை விட 2,06,773 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2012
  • ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
2011
  • ரயில்வே துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2009
  • மேற்கு வங்காளத்தின் பாரக்பூர் தொகுதியில் இருந்து பதினைந்தாவது மக்களவைக்கு திரிமூனால் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான தரிட் பரண் டொப்ட்டாவை தோற்கடித்தார்.
2002
  • ராஜ்ய சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் ( 2வது முறை )
1990
  • குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996 ம் ஆண்டில் அவர் குஜராத்தில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மூலம் மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். இருப்பினும் அவர் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

முந்தைய வரலாறு

1984
  • கொல்கத்தாவில் தனது சொந்த விமான சரக்கு நிறுவனத்தை தொடங்குவதற்காக லீ மற்றும் மூர்ஹெட் பணியில் இருந்து ராஜினாமா செய்தார்.
1974
  • சிகாகோவில் உள்ள டிடெக்ஸ் கம்பெனியில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார், அதன் பின் அவர் இந்தியாவுக்கு திரும்பி வந்து லீ மற்றும் மூர்ஹெட் நிறுவனத்தில் பணியாற்றினார்.

தினேஷ் திரிவேதி சாதனைகள்

பல முன்னணி செய்தித்தாள்கள் மற்றும் பல தேசிய மற்றும் சர்வதேச மன்றங்களில் அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், மேலாண்மை, உள்நாட்டு விமான போக்குவரத்து, வரலாறு உட்பட பல்வேறு பாடங்களில் அவர் விரிவுரைகளை எழுதியுள்ளார்.

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X