Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாக்டர் ஹர்ஷ் வர்த்தன்

டாக்டர் ஹர்ஷ் வர்த்தன்
டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் இந்திய அரசியல்வாதி ஆவார். பாஜகவை சேர்ந்தவர்.
By Zainab Ashraf | Tuesday, February 19, 2019, 01:51:58 PM [IST]

டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் சுயசரிதை

டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் இந்திய அரசியல்வாதி ஆவார். பாஜகவை சேர்ந்தவர். தற்போது அவர் மத்திய அரசில் அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சராக இருக்கிறார். டெல்லி சாந்தினி செளக் தொகுதியிலிருந்து 16வது லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்து வந்தார். டெல்லி முதல்வர் வேட்பாளராக 2013 சட்டசபைத் தேர்தலின்போது பாஜகவால் அறிவிக்கப்பட்டவர். 1993ம் ஆண்டு டெல்லி சட்டசபைக்கு கிருஷ்ணா நகர் தொகுதியிலிருந்து முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் 1954ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி டெல்லியில் பிறந்தார்.

வட இந்தியாவின் மிகப் பழமையான பள்ளிகளில் ஒன்றான டெல்லி தார்யாகஞ்ச் பகுதியில் உள்ள ஆங்கிலோ சான்ஸ்கிரிட் விக்டோரியா ஜூபிளி சீனியர் செகண்டரி பள்ளியில் படித்தார். எம்பிபிஎஸ் படிப்பையும், எம்எஸ் படிப்பையும் ஜிஎஸ்விஎம் மருத்துவக் கல்லூரி, கான்பூரில் 1979 மற்றும் 1983ல் படித்தார். அதன் பின்னர் டெல்லியில் காது மூக்குத் தொண்ட நிபுணராக மருத்துவப் பணியை தொடங்கினார். 1982ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி நூதனை மணந்தார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் ஒரு ஆர்எஸ்எஸ் சேவகர் ஆவார். இதுவே பின்னர் அவர் படிப்படியாக அரசியலில் பெரும் பங்கை அளிக்க உதவியாக இருந்தது.

மேலும் படிக்க

டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன்
பிறந்த தேதி 13 Dec 1954 (வயது 71)
பிறந்த இடம் டெல்லி
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Post Graduate
தொழில் மருத்துவர், காது மூக்கு தொண்டை நிபுணர்
தந்தை பெயர் திரு ஓம் பிரகாஷ்
தாயார் பெயர் திருமதி ஸ்னேக லதா
துணைவர் பெயர் திருமதி நூதன்
துணைவர் தொழில் தகவல் இல்லை
குழந்தைகள் 2 மகன்(கள்) 1 மகள்(கள்)
இணையதளம் www.drharshvardhan.com

டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹3.02 CRORE
சொத்துக்கள்
₹3.02 CRORE
கடன்கள்
N/A

டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் சுவாரசிய தகவல்கள்

போலியோ ஒழிப்பு, புகையிலை கட்டுப்பாடு, மருந்துக் கொள்கை, உறுப்பு தானம் உள்ளிட்டவை தொடர்பாக தேசிய, சர்வதேச அளவில் பல முக்கியப் பங்காற்றியுள்ளார்.

டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2014: சாந்தினி சவுக் தொகுதியிலிருந்து 16வது லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஹர்ஷ் வர்த்தன். பிரபல டிவி செய்தியாளரும், ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டவருமான அசுதோஷை வீழ்த்தினார் வர்த்தன்.
  • 2013: டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளராக டாக்டர் வர்த்தன் அறிவிக்கப்பட்டார். ஆனால் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனால் பாஜகவால் ஆட்சியமைக்க முடியாமல் போனது.
  • 1996: டெல்லி அரசில் கல்வித்துறை இணை அமைச்சரானார். 1997ல் சுகாதாரத் துறை அமைச்சராக புகை பிடிக்கும் பழக்கத்தை தடை செய்வததிலும், புகை தடை சட்டத்தைக் கொண்டு வந்ததிலும் முக்கியப் பங்காற்றினார். இந்திய அளவில் ஒரு மாநிலத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் புகைப் பழக்கத்திற்கு எதிரான சட்டமாகும்.
  • 1993 - 1998: டெல்லி அரசின் சுகாதாரம், கல்வி, சட்டம் நீதி மற்றும் சட்டசபை விவகாரத்துறை அமைச்சர். 1994ம் ஆண்டு சுகாதாரத்துறை இணை அமைச்சராக ஒட்டுமொத்த போலியோ தடுப்புத் திட்டத்தை நிறைவேற்றினார். இந்தத் திட்டத்தின் கீழ் டெல்லியில் 3 வயதுக்குட்பட்ட 10 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து தரப்பட்டது.
  • 1993 - 2014: டெல்லி சட்டசபைக்கு கிருஷ்ணா நகர் தொகுதியிலிருந்து 5 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன்.
  • 27 May 2014 - 9 Nov 2014: மத்திய அரசில் சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 18 May 2017: மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் சூழலியல் மாற்றத் துறை கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றார்.
  • 9 Nov, 2014: 2014, நவம்பர் 10ம் தேதி மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

முந்தைய வரலாறு

  • 1983: இளம் பிராயத்திலிருந்தே டாக்டர் ஹர்ஷ்வர்த்தன் ஆர்எஸ்எஸ் சேவகர் ஆவார். இதுவே பின்னர் அரசியலில் அவர் மாபெரும் பங்களிப்பை அளிக்க உதவியது.

டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் சாதனைகள்

உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகராக பல வருடம் பணியாற்றியுள்ளார். பல்வேறு சர்வதேச தொழில்நுட்பக் கமிட்டிகளில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 1994ம் ஆண்டு ஐஎம்ஏ தலைவர் சிறப்பு விருது பெற்றார். 1995ம் ஆண்டு ஒட்டுமொத்த போலியோ சொட்டு மருந்துத் திட்டத்தை தொடங்கினார். நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் 8.8 கோடி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலமாக 2014ம் ஆண்டு இந்தியா போலியோ இல்லாத நாடாக உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.

1996ம் ஆண்டு இத்தாலியின் மிலன் நகரில் உள்ள சர்வதேச பாலிபதி கழகத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1998ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம், இவருக்கு இயக்குநர் ஜெனரல் போலியோ ஒழிப்பு சாம்பியன் விருதினை வழங்கிக் கெளரவித்தது. 2001ல் ரோட்டரி இன்டர்நேஷனல் நிறுவனம் இவருக்கு போலியோ ஒழிப்பு சாம்பியன் விருதினை வழங்கியது.

2001ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், இவருக்கு போலியோ ஒழிப்பு சாம்பியன் விருதினை வழங்கி கெளரவித்தார். 2002ம் ஆண்டு போலியோ பிளஸ் சர்வதேச தலைவர் மாநாட்டில் இவர் கெளரவிக்கப்பட்டார்.

டெல்லி ரோட்டரி கிளப், இவருக்கு வொகேஷனல் எக்சல்லன்ஸ் விருது வழங்கிக் கெளரவித்தது. 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லியில் உள்ள காலிப் அகாடமி இவருக்கு சிறந்த தொழில்முறையாளர் விருதினை வழங்கிக் கெளரவித்தது.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+