முகப்பு
 » 
டாக்டர் சசி தரூர்

டாக்டர் சசி தரூர்

டாக்டர் சசி தரூர்

முன்னாள் தூதர். சசி தரூர் கேரளாவைச் சேர்ந்தவர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்.

டாக்டர் சசி தரூர் சுயசரிதை

முன்னாள் தூதர். சசி தரூர் கேரளாவைச் சேர்ந்தவர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். தற்போது திருவனந்தபுரம் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2 முறை இத்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மன்மோகன் சிங் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்துள்ளார். 1956ம் ஆண்டு பிறந்தவரான சசி தரூர், இந்தியா மற்றும் அமெரிக்காவில் கல்வி பயின்றார். 1978ம் ஆண்டு பிஎச்டி படிப்பை முடித்தார். ஐ.நா. சபையில் பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.

மேலும் படிக்க
By Ajay M V Updated: Friday, March 29, 2019, 05:35:24 PM [IST]

டாக்டர் சசி தரூர் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் டாக்டர் சசி தரூர்
பிறந்த தேதி 09 Mar 1956 (வயது 68)
பிறந்த இடம் லண்டன், இங்கிலாந்து
கட்சி பெயர் Indian National Congress
கல்வி Doctorate
தொழில் தூதர், எழுத்தாளர், சர்வதேச சிவில் சர்வன்ட்
தந்தை பெயர் சந்திரன் தரூர்
தாயார் பெயர் லில்லி தரூர்
துணைவர் பெயர் சுனந்தா புஷ்கர்
துணைவர் தொழில் தகவல் இல்லை
குழந்தைகள் 2 மகன்(கள்)
மதம் இந்து
நிரந்தர முகவரி 15/1443(2),கோண்டூர் மேரி கோல்ட், வழுதக்காடு, திருவனந்தபுரம்- 695014
தற்காலிக முகவரி 97, லோதி எஸ்டேட், புது டெல்லி - 110 003
தொடர்பு எண் 09013180980
மின்னஞ்சல் [email protected]
இணையதளம் http://shashitharoor.in/
சமூக வலைதளங்கள் சமூக வலைதளங்கள்:

டாக்டர் சசி தரூர் நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹35 CRORE
சொத்துக்கள்:₹35 CRORE
கடன்கள்: N/A

Disclaimer: The information relating to the candidate is an archive based on the self-declared affidavit filed at the time of elections. The current status may be different. For the latest on the candidate kindly refer to the affidavit filed by the candidate with the Election Commission of India in the recent election.

டாக்டர் சசி தரூர் சுவாரசிய தகவல்கள்

தரூர் ஒரு எழுத்தாளர், கட்டுரை ஆசிரியர். நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், கார்டின் உள்ளிட்ட பல சர்வதேச பத்திரிகைகளுக்கு எழுதியுள்ளார். நியூஸ் வீக் இன்டர்நேஷனல் இதழுக்கு கான்ட்ரிபியூட்டிங் எடிட்டராக இருந்துள்ளார். 2006ம் ஆண்டு ஐநா. பொதுச் செயலாளர் பதவிக்கான வேட்பாளராக சசி தரூரை இந்தியா நிறுத்தியது. தரூர் 2வது இடத்தைப் பிடித்தார். பான் கி மூன் பொதுச் செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

டாக்டர் சசி தரூர் அரசியலில் கடந்து வந்த பாதை

2014
  • திருவனந்தபுரம் தொகுதியிலிருந்து பாஜக வேட்பாளர் ஓ. ராஜகோபாலை தோற்கடித்து மீண்டும் வெற்றி பெற்றார் சசி தரூர்.
2012
  • மனித வளத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார் தரூர்.
2010
  • மத்திய வர்த்தகத்துறை கமிட்டி உறுப்பினர்.
2009
  • மன்மோகன் சிங் அரசில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2009
  • 15வது லோக்சபாவுக்கு திருவனந்தபுரம் தொகுதியிலிருந்து தெர்ந்தெடுக்கப்பட்டார். பி.ராமச்சந்திரன் நாயரை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார்.

முந்தைய வரலாறு

1989
  • அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா. துணைச் செயாளராக நியமிக்கப்பட்டார். இந்தப் பிரிவு பின்னர் நியூயார்க்கில் அமைதி காக்கும் பணித் துறையாக மாற்றப்பட்டது.
1978
  • ஐ.நா. அகதிகளுக்கான துணை தூதராக இருந்தார்.

டாக்டர் சசி தரூர் சாதனைகள்

18 புத்தகங்களை எழுதியுள்ளார் சசி தரூர். உலகம் முழுவதும் பல்வேறு நூல்கள், பத்திரிகைகளுக்கு அவர் எழுதி வருகிறார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X