Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஃபரூக் அப்துல்லா

ஃபரூக் அப்துல்லா
டாக்டர் ஃபரூக் அப்துல்லா ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆவார். அவர் தற்போது ஸ்ரீநகர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.
By Rashmi | Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

ஃபரூக் அப்துல்லா சுயசரிதை

டாக்டர் ஃபரூக் அப்துல்லா ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆவார். அவர் தற்போது ஸ்ரீநகர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் தேசிய மாநாட்டின் தலைவரான ஷேக் அப்துல்லாவிற்குப் பிறந்தார். அவர் டின்டேல் பிஸ்கோஸ் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து சென்றார். அங்கு மருத்துவராக பணியாற்றினார். 1980ஆம் ஆண்டு ஃபரூக் அப்துல்லா ஏழாவது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அவரது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து 1983 ஆம் ஆண்டில் மாநிலத்தின் முதலமைச்சராக ஆனார். மீண்டும் பலமுறை முதலமைச்சராக இருந்துள்ளார்.

மேலும் படிக்க

ஃபரூக் அப்துல்லா தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் ஃபரூக் அப்துல்லா
பிறந்த தேதி 21 Oct 1937 (வயது 88)
பிறந்த இடம் ஸ்ரீநகர், (ஜம்மு & காஷ்மீர்)
கட்சி பெயர் Jammu & Kashmir National Conference
கல்வி Graduate Professional
தொழில் சமூக சேவகர்
தந்தை பெயர் மறைந்த திரு. ஷேக் முகமது அப்துல்லா
தாயார் பெயர் மறைந்த திருமதி. அக்பர் ஜெகான் பேகம்
துணைவர் பெயர் திருமதி. மோலி அப்துல்லா
துணைவர் தொழில் முன்னாள் செவிலியர்
குழந்தைகள் 1 மகன்(கள்) 3 மகள்(கள்)
மதம் முஸ்லீம்

ஃபரூக் அப்துல்லா நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹12.19 CRORE
சொத்துக்கள்
₹12.19 CRORE
கடன்கள்
N/A

ஃபரூக் அப்துல்லா சுவாரசிய தகவல்கள்

டாக்டர் ஃபரூக் அப்துல்லா பிரிட்டிஷ் நாட்டு செவிலியரான மோலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவர்களில் ஒருவர் தான் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆவார். அவரது மகள்களில் ஒருவரான சாரா பிரபல காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சச்சின் பைலட்டை திருமணம் செய்து கொண்டார்.

ஃபரூக் அப்துல்லா அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2017: ஸ்ரீகநகர் லோக்சபா தொகுதி இடைத் தேர்தலில் ஃபரூக் அப்துல்லா வெற்றி பெற்றார். அவர் மக்கள் ஜனநாயக் கட்சியின் நசீர் அகமது கானை வீழத்தினார்.
  • 2014: 2014 மக்களவை தேர்தலில் மீண்டும் ஸ்ரீநகர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தாரிக் ஹமீத் கர்ராவால் தோற்கடிக்கப்பட்டார்.
  • 2009: மக்களவை தேர்தலில் ஸ்ரீநகர் தொகுதியில் இருந்து போட்டியிட்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூட்டணி அமைச்சரவையில் இணைந்தார். மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் கேபினட் அமைச்சராகவும், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
  • 2009: 2009 பிப்ரவரியில் மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் மே 2009 ல் மாநிலங்களவையில் இருந்து ராஜினாமா செய்தார். மீண்டும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2006: சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் பாராளுமன்ற மக்கள்தொகை மற்றும் பொது சுகாதார கமிட்டி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2004: சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழுவின் உறுப்பினரானார் (ஆகஸ்ட் 2004 - நவம்பர் 2008).
  • 2003: அவர் 2003ம் ஆண்டு ஜனவரி முதல் 2004ம் ஆண்டு பிப்ரவரி முதல் பாதுகாப்புத்துரையின் கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
  • 2002: ஃபரூக் அப்துல்லா நவம்பர் 2002ல் ராஜ்யசபாவுகக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தேசிய மாநாட்டின் தலைவராக பதவியேற்றார். அவரது மகன் ஓமர் கட்சிக்கு பொறுப்பேற்றார்.
  • 1996: அப்துல்லா மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஜம்மு மற்றும் காஷ்மீரின் முதலமைச்சராக 1996 ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002ம் ஆண்டு அக்டோபர் 18 வரை அவர் முதல்வராக பணியாற்றினார்
  • 1986: ஃபரூக் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று 1986 நவம்பர் 7 அன்று முதலமைச்சராக பதவியேற்றார். 1990 ம் ஆண்டு ஜனவரி 19 வரை இந்த பதவியில் பணியாற்றினார்.
  • 1984: தேசிய மாநாடு கட்சி பிளவு பட்டது. குலாம் முகம்மது ஷா கட்சியில் இருந்து பிரிந்ததால் அப்துல்லாவின் ஆட்சி கலைந்தது. 1984 ம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.
  • 1983: ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1982-83: டாக்டர் ஃபரூக் அப்துல்லா காஷ்மீர் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜம்மு & காஷ்மீர் மாநில சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டா்.
  • 1981: ஜம்மு & காஷ்மீர் மாநில தேசிய மாநாட்டின் தலைவரானார்.
  • 1980: டாக்டர் ஃபரூக் அப்துல்லா ஸ்ரீநகர் தொகுதியில் இருந்து ஏழாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1970s: டாக்டர் ஃபரூக் அப்துல்லா அவரது தந்தை ஷேக் அப்துல்லாவால் நிறுவப்பட்ட ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
  • : 1982 ஆம் ஆண்டில் ஃபரூக் அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, ஜம்மு மற்றும் காஷ்மீரின் முதலமைச்சராக 1982 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஃபரூக் அப்துல்லா சாதனைகள்

டாக்டர் ஃபரூக் அப்துல்லா, மருத்துவம் மற்றும் அரசியல் வாழ்க்கையில் பல விருதுகளை பெற்றுள்ளார். அவற்றுள் சில:

(i) டாக்டர் பி.சி. ராய் விருது - ஒரு மருத்துவராகவும், அரசியல்வாதியாகவும்.
(ii) டி.லிட். (கெளரவ டாக்டர் பட்டம்), அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம்
(iii) டிகிரி ஆப் லெட்டர்ஸ் (கெளரவ டாக்டர் பட்டம்), புதுச்சேரி பல்கலைக்கழகம், புதுச்சேரி

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+