Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹர்சிம்ரத் கெளர் பாதல்

ஹர்சிம்ரத் கெளர் பாதல்
மத்திய அமைச்சரவையில் உணவு பதப்படுத்துதல் துறை கேபினட் அமைச்சராக இருக்கிறார் ஹர்சிம்ரத் கெளர் பாதல். பதிந்தா தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
By Zainab Ashraf | Tuesday, February 19, 2019, 01:51:58 PM [IST]

ஹர்சிம்ரத் கெளர் பாதல் சுயசரிதை

மத்திய அமைச்சரவையில் உணவு பதப்படுத்துதல் துறை கேபினட் அமைச்சராக இருக்கிறார் ஹர்சிம்ரத் கெளர் பாதல். பதிந்தா தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் சிரோன்மணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்தவர். அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் சுக்பீர் சிங் பாதல்பஞ்சாப் துணை முதல்வராக இருந்தவர். சிரோண்மணி அகாலிதளம் தலைவராக இருக்கிறார். ஹர்சிம்ரத் கெளர் பாதல் 1966ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி டெல்லியில் பிறந்தவர். இவரது குடும்பம் மஜிதியா குடும்பம் என அழைக்கப்படுகிறது. பெற்றோர் சத்யஜித் மஜிதியா மற்றும் சுக்மஞ்சுஸ் மஜிதியா. ஹர்சிம்ரத் கெளர் டெல்லி லோரெட்டோ கான்வென்ட் பள்ளியில் படித்தவர். ஆடை வடிவமைப்பில் டிப்ளமோ முடித்துள்ளார். 1991ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி சுக்பீர் சிங் பாதலுக்கும், இவருக்கும் திருமணம் நடந்தது. ஒரு தொழிதிபராகவும் இவர் இருந்துள்ளார்.

மேலும் படிக்க

ஹர்சிம்ரத் கெளர் பாதல் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் ஹர்சிம்ரத் கெளர் பாதல்
பிறந்த தேதி 25 Jul 1966 (வயது 59)
பிறந்த இடம் டெல்லி
கட்சி பெயர் Shiromani Akali Dal
கல்வி 10th Pass
தொழில் அரசியல்வாதி, சமூக சேவகர்
தந்தை பெயர் சத்யஜித் சிங் மஜிதியா
தாயார் பெயர் சுக்மஞ்சுஸ் மஜிதியா
துணைவர் பெயர் சுக்பீர் சிங் பாதல்
துணைவர் தொழில் அரசியல்வாதி
குழந்தைகள் 1 மகன்(கள்) 2 மகள்(கள்)
மதம் சீக்கியர்

ஹர்சிம்ரத் கெளர் பாதல் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹144.04 CRORE
சொத்துக்கள்
₹198.52 CRORE
கடன்கள்
₹54.48 CRORE

ஹர்சிம்ரத் கெளர் பாதல் சுவாரசிய தகவல்கள்

விவசாயம், மீடியா, ஹோட்டல் துறையில் மிகப் பெரிய அளவில் ஈடுபட்டுள்ளார் ஹர்சிம்ரத் கெளர் பாதல். சொந்தமாக இவருக்கு குர்கான் டிரைடென்ட் ஹோட்டலில் நகைக் கடை உள்ளது. இவர் ஒரு ஆடை வடிவமைப்பாளரும் கூட.

ஹர்சிம்ரத் கெளர் பாதல் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2014: பதிந்தா தொகுதியில் மீண்டும் 2014 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார்.
  • 2009: 2009 பொதுத் தேர்தலின்போது அரசியலில் நுழைந்தார். 15வது லோக்சபாவுக்கு பதிந்தா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 31 Aug. 2009: சமூக நீதி மற்றும் அமலாக்கல் துறையின் நிலைக்குழு உறுப்பினரானார்.
  • 27 May, 2014: மோடி அரசில் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 6 Aug. 2009: மதிப்பீட்டுக் கமிட்டியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
  • 5 May 2010: மதிப்பீட்டுக் கமிட்டியின் உறுப்பினரானார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை உறுப்பினர், உணவு மற்றும் பொது விநியோகத்துறையின் நிலைக்குழு உறுப்பினர்.

ஹர்சிம்ரத் கெளர் பாதல் சாதனைகள்

உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக, அவரது அமைச்சகம் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டது. 2015 செப்டம்பர் முதல் 2016 ஜூன் மாதம் வரை உணவு பதப்படுத்துதல் துறையில் 24,084 பேர் சிறப்புப் பயிற்சி பெற்றனர். உதிரி விலை சுதேசி உணவு தயாரிப்பில் 100 சதவீத நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளார் பாதல். இந்தியாவிலேயே இந்த உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் 37 மெகா உணவு பூங்காக்கள் அமைப்பதிலும், 134 குளிருரூட்டப்பட்ட வசதி கொண்ட மையங்கள் அமைப்பதிலும் திறம்பட செயல்பட்டுள்ளார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+