ஜுவல் ஓரம் ஒடிசாவைச் சேர்ந்த மூத்த பா.ஜ.க தலைவர். அவர் ஒடிஷாவின் சுந்தர்கர் மாவட்டம் லஹனிபரா கென்டுதிஹி என்ற ஊரில் பிறந்தார். அவர் ரூர்கேலாவில் மின் பொறியியல் கல்வி பயின்றார். பொறியியலாளர், தொழிற்சங்கவாதியான இவர் பின்னர் அரசியல்வாதியானர். பதினாறாவது மக்களவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒடிசாவின் சுந்தர்கர் தொகுதியிலிருந்து பாஜக சார்பில் லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 12, 13, 14 வது மக்களவையிலும் அவர் உறுப்பினராகவும் இருந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். இப்போது பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக உள்ளார். ஒடிசா சட்டசபைக்கு முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட2 பாஜக எம்எல்ஏக்களில் இவரும் ஒருவர் ஆவார். ஒடிசா மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பணியாற்றினார். ஒடிசா சட்டமன்றத்தில் பாஜக எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றியுள்ளார்.
| முழுப் பெயர் | ஜுவல் ஓரம் |
| பிறந்த தேதி | 22 Mar 1961 (வயது 65) |
| பிறந்த இடம் | கெண்டுதிஹி , லஹனிபரா, சுந்தர்கர் மாவட்டம், ஒடிசா |
| கட்சி பெயர் | Bharatiya Janta Party |
| கல்வி | Others |
| தொழில் | வேளாண் பொறியியலாளர், தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி |
| தந்தை பெயர் | மறைந்த திரு தெரியா என்ற தில்கா ஓரம் |
| தாயார் பெயர் | திருமதி. புதுக்கி ஓரம் |
| துணைவர் பெயர் | ஜஹிங்கியா ஓரம் |
| துணைவர் தொழில் | இல்லத்தரசி |
| குழந்தைகள் | 2 மகள்(கள்) |
| மதம் | இந்து |
| இணையதளம் | jualoram.org |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.