கைலாஷ் கெலாட், ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் வழக்கறிஞர் மற்றும் 6வது தில்லி சட்ட மன்றத்தில் உறுப்பினராக இருக்கிறார். புது தில்லியின் நஜப்கர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆம் ஆத்மி கட்சி கட்சியில் உறுப்பினராக உள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அமைச்சரவையில் மைச்சராகவும் உள்ளார். நஜப்கரில் உள்ள மிட்ரான் கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பம் ஒன்பது தலைமுறைகளுக்கு மேல் அந்த பகுதியில் வாழ்ந்து வந்துள்ளது. இவர்கள் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு இடைவிடாமல் சேவை செய்து வந்துள்ளனர்.
தில்லி பல்கலைக்கழகத்திற்குட்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியில் அரசியல் அறிவியல் பிரிவில் (ஹானர்ஸ்) இளங்கலை பட்டம் பெற்றார். 1994-95ல் கல்லூரி மாணவர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தில்லி பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை சட்ட படிப்பையும் முதுகலை சட்டம் முடித்து பட்டம் பெற்றார்.
| முழுப் பெயர் | கைலாஷ் கெலாட் |
| பிறந்த தேதி | 22 Jul 1974 (வயது 51) |
| பிறந்த இடம் | தில்லி |
| கட்சி பெயர் | Aam Aadmi Party |
| கல்வி | Post Graduate |
| தொழில் | அரசியல்வாதி மற்றும் வழக்கறிஞர் |
| தந்தை பெயர் | ராம் சந்தர் கெலாட் |
| தாயார் பெயர் | தகவல் இல்லை |
| துணைவர் பெயர் | மௌஸமி மிஸ்ரா கெலாட் |
| துணைவர் தொழில் | தகவல் இல்லை |
| குழந்தைகள் | 2 மகள்(கள்) |
| மதம் | இந்து |
| இணையதளம் | aamaadmiparty.org/teams/kailash-gahlot/ |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.