Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கமல்நாத்

கமல்நாத்
கமல்நாத் முன்னாள் மத்திய அமைச்சர். நீண்ட காலம் லோக்சபா உறுப்பினராக இருந்த முக்கியத் தலைவர்களில் இவரும் ஒருவர்.
By Zainab Ashraf | Friday, March 29, 2019, 05:35:24 PM [IST]

கமல்நாத் சுயசரிதை

கமல்நாத் முன்னாள் மத்திய அமைச்சர். நீண்ட காலம் லோக்சபா உறுப்பினராக இருந்த முக்கியத் தலைவர்களில் இவரும் ஒருவர். மத்தியப் பிரதேச முதல்வராக தற்போது இருக்கிறார். இவரது தலைமையில் 2018ம் ஆண்டு நவம்பர் - டிசம்பரில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் சிறப்பான வெற்றியைப் பெற்றது.

கமல்நாத் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் கமல்நாத்
பிறந்த தேதி 18 Nov 1946 (வயது 79)
பிறந்த இடம் கான்பூர், உத்தரப் பிரதேசம்
கட்சி பெயர் Indian National Congress
கல்வி Graduate
தொழில் அரசியல்வாதி
தந்தை பெயர் ஸ்ரீமகேந்திர நாத்
தாயார் பெயர் லீலா நாத்
துணைவர் பெயர் அல்கா நாத்
துணைவர் தொழில் இல்லத்தரசி
குழந்தைகள் 2 மகன்(கள்)
இணையதளம் N/A

கமல்நாத் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹134.13 CRORE
சொத்துக்கள்
₹134.25 CRORE
கடன்கள்
₹12 LAKHS

கமல்நாத் சுவாரசிய தகவல்கள்

2011ல் ரூ. 2.74 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் இருந்த கமல்நாத், அமைச்சர்களிலேயே மிகப் பெரிய கோடீஸ்வரராக விளங்கினார்.

கமல்நாத் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2018 : மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தலைமையில் 2018 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.
  • 2014 : 9வது முறையாக 16வது லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2009 - 18 Jan 2011 : சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 2009 : 8வது முறையாக 15வது லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2004 : 7வது முறையாக 14வது லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2001-2004 : இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
  • 2000-2004 : சுரங்கம் மற்றும் தாது அமைச்சக ஆலோசனைக் குழு உறுப்பினரானார்.
  • 1999-2000 : நிதித்துறை நிலைக்குழு உறுப்பினரானார்.
  • 1999 : 6வது முறையாக 13வது லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1998 : 5வது முறையாக 12வது லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றார்.
  • 1995-96 : தனிப் பொறுப்புடன் கூடிய ஜவுளித்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 1991-95 : தனிப்பொறுப்புடன் கூடிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராகப் பதவியேற்றார்.
  • 1991 : 10வது லோக்சபாவுக்கு 4வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜகவின் செளத்ரி சந்தர்பானை அவர் தோற்கடித்தார்.
  • 1989 : 9வது லோக்சபாவுக்கு 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனதாதள வேட்பாளர் மாதவ் லால் துபேயை அவர் தோற்கடித்தார்.
  • 1985 : 8வது லோக்சபாவுக்கு சிந்த்வாரா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1980 : 7வது லோக்சபாவுக்கு சிந்த்வாரா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜேஎன்பி கட்சியின் பிரதுல் சந்திர திவிவேதியை அவர் வீழ்த்தினார்.
  • 28 Oct. 2012 - 26 May 2014 : நாடாளுமன்ற விவகாரத்துறை கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 23 May 2004 - 2009 : வர்த்தகம் மற்றும் தொழில்துறை கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 19 Jan 2011 - 26 May 2014 : நகர்ப்புற வளர்ச்சித்துறை கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 04 June - 06 June 2014 : லோக்சபா தற்காலிக சபாநாயகராக செயல்பட்டார்.
  • 1 Sep. 2014 : வர்த்தகத்துறை நிலைக்குழு உறுப்பினர், நிதி மற்றும் கம்பெனி விவகாரத்துறை ஆலோசனைக் குழு உறுப்பினர், போக்குவரத்துத் துறை கமிட்டி உறுப்பினராக இருந்துள்ளார்.

கமல்நாத் சாதனைகள்

2006ம் ஆண்டு ஜபல்பூர் ராணி துர்கா்வதி பல்கலைக்கழகம், இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

2007ம் ஆண்டு எப்டிஐ பத்திரிகையானது கமல்நாத்துக்கு எப்டிஐ பெர்சனாலிட்டி விருது வழங்கியது.

2008ம் ஆண்டு கமல்நாத்துக்கு எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிகை சிறந்த சீர்திருத்தவியலாளர் விருது வழங்கிக் கெளரவித்தது.

2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அமைச்சர்களிலேயே மிகப் பெரிய கோடீஸ்வர அமைச்சராக உயர்ந்தார்.

2012ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆசிய பிசினஸ் லீடர்ஷிப் போரம் சார்பில் அவருக்கு விருது அளிக்கப்பட்டது.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+