Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாக்டர் கிரித் சோமையா

டாக்டர் கிரித் சோமையா
தொழில் முறையில் ஆடிட்டர் ஆவார் சோமையா. மாணவராக இருந்தபோதே 1975ம் ஆண்டு அரசியலில் நுழைந்தார்.
By Anushree | Friday, March 29, 2019, 05:35:24 PM [IST]

டாக்டர் கிரித் சோமையா சுயசரிதை

தொழில் முறையில் ஆடிட்டர் ஆவார் சோமையா. மாணவராக இருந்தபோதே 1975ம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். ஜெயப்பிரகாஷ் நாராயணன் இயக்கத்தில் கலந்து கொண்டார். பின்னர் பாஜகவில் இணைந்தார். முலுந்த் எம்எல்ஏவாக 1991ம் ஆண்டு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மும்பை வட கிழக்கு லோக்சபா தொகுதியிலிருந்து 1999ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2வது முறையாக அதே தொகுதியில் 16வது லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் படிக்க

டாக்டர் கிரித் சோமையா தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் டாக்டர் கிரித் சோமையா
பிறந்த தேதி 12 Feb 1954 (வயது 72)
பிறந்த இடம் மும்பை, மகாராஷ்டிரா
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Doctorate
தொழில் சார்டர்ட் அக்கவுண்டன்ட்
தந்தை பெயர் ஜெயந்திலால்
தாயார் பெயர் குணவந்தி
துணைவர் பெயர் டாக்டர் மேதா சோமையா
துணைவர் தொழில் பிசினஸ் (பல்வேறு நிறுவனங்களில் பங்குதாரர்)
குழந்தைகள் 1 மகன்(கள்)

டாக்டர் கிரித் சோமையா நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹6.56 CRORE
சொத்துக்கள்
₹7.22 CRORE
கடன்கள்
₹65.93 LAKHS

டாக்டர் கிரித் சோமையா சுவாரசிய தகவல்கள்

கிரித் சோமையா ஒரு சார்டர்ட் அக்கவுண்டன்ட் ஆவார். அகில இந்திய அளவில் முதல் 50 இடங்களுக்குள் வந்தவர். சிறு தொழில்துறை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு டாகட்ர் பட்டம் பெற்றவர். முலுந்த் எம்எல்ஏவாக சோமையாக இரண்டு சட்டங்களை மகாராஷ்டிர சட்டசபையில் தனி நபர் மசோதாவாக கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளார்.

டாக்டர் கிரித் சோமையா அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2016 : 1 செப்டம்பர் 2016 தொழிலாளர் நலத்துறை நிலைக்குழு தலைவர். 23- செப்டம்பர் 2016- பொது கணக்குக் கமிட்டி சப் கமிட்டியின் உறுப்பினர்.
  • 2015 : 29- ஜனவரி, 2015- பொதுக் கணக்குக் கமிட்டியின் உறுப்பினரானார்.
  • 2014 : 1, செப்டம்பர் 2014 - பொதுக் கணக்கு கமிட்டி உறுப்பினர், நிதித்துறை நிலைக்குழு உறுப்பினர், பிரிவிலஜ் கமிட்டி உறுப்பினர், நகர்ப்புற வளர்ச்சித்துறை ஆலோசனைக் குழு உறுப்பினர். 15, செப்டம்பர் 2014- அட்ஹாக் கமிட்டி உறுப்பினர், விதி மீறல் குழு உறுப்பினர், அரசு அதிகாரிகளுக்கான நடத்தைக் குழு உறுப்பினர், 12, நவம்பர் 2014 முதல் 31 ஆகஸ்ட் 2016 வரை மின்சக்தித் துறை நிலைக்குழு உறுப்பினர்.
  • 2014 : நாடாளுமன்றத்தேர்தலில் அடுத்த தோல்வியைத் தழுவிய நிலையில், 2014 தேர்தலில் மும்பை வட கிழக்கு லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சய் தினா பாட்டீலை தோற்கடித்து வெற்றி பெற்றார். ஹவுஸ் கமிட்டி தலைவராகவும் இருந்தார்.
  • 2009 : 15வது லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு 2933 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தார்.
  • 2000 : மத்திய ரயில்வே துறையின் ஆலோசனைக் குழு உறுப்பினராக 2 வருடம் இருந்தார்.
  • 1999 : 1999 முதல் 2004 வரை மத்திய நிதித்துறை நிலைக்குழு உறுப்பினராக இருந்தார். வர்த்தகம், தொழில்துறை நிலைக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
  • 1999 : 13வது லோக்சபாவுக்கு மும்பை வடகிழக்கு தொகுதியில் போட்டியிட்டு காமத் குருதாஸை 7276 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அதேசமயம், 2004 தேர்தலில் அதே குருதாஸ் காமத்திடம் தோல்வியைத் தழுவினார்.
  • 1995 : முலுந்து தொகுதியில் போட்டியிட்டு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளர் ஆர். ஆர். சிங்கை 43, 527 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வீழ்த்தினார்.
  • 1975 : ஜெயப்பிரகாஷ் நாராணன் நடத்திய இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவர் சோமையா.பின்னர் பாஜகவி்ல இணைந்தார். பாஜகவின் முக்கிய தலைவராக மாறினார். பாஜகவின் மகாராஷ்டிர மாநில பிரிவின் துணைத் தலைவராக இருந்துள்ளார். பிறகு மும்பை பாஜக தலைவரானார். இறுதியாக பாஜகவின் தேசியச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+