முகப்பு
 » 
எம் ஜே அக்பர்

எம் ஜே அக்பர்

எம் ஜே  அக்பர்

புகழ் பெற்ற பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளரான எம். ஜே.

எம் ஜே அக்பர் சுயசரிதை

புகழ் பெற்ற பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளரான எம்.ஜே. அக்பர் 1989ம் ஆண்டு அரசியல் துறையில் நுழைந்தார். அரசியல் அரங்கிற்குள் நுழைவதற்கு முன்னர் அவர் பல்வேறு பத்திரிகைகளின் சிறந்த ஆசிரியராக பெருமைமிக்க புகழைக் கொண்டிருந்தார். அக்பர் 1971 ஆம் ஆண்டில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு பயிற்சி பத்திரிகையாளராக பணிபுரிந்தார். சிறந்த செய்தியாளராக, பத்திரிகையாளராக மாறிய பின்னர் தன்னுடைய சொந்த ஊடக முயற்சிகளைத் தொடங்க முடிவு செய்தார். அக்பரின் முதல் முத்திரை பதிந்த பத்திரிகை நிறுவனம் ஏசியன் ஏஜ் ஆகும். சர்வதேச செய்திகளை மிகவும் விரிவாக பிரசுரித்த முதல் இந்திய ஊடகம் இதுதான். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அலுவலகங்களைக் கொண்டு செயல்பட்டார் அக்பர். பின்னர் அரசியலில் குதித்தார் அக்பர். 1989 ஆம் ஆண்டில் கிஷன்கஞ்ச் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அடுத்த தேர்தலில் தோல்வியுற்றார். இதையடுத்து அரசியலை விட்டு விட்டு மீண்டும் பத்திரிகைத் துறைக்குத் திரும்பினார். பின்னர் 2009ல் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016ம் ஆண்டு மீண்டும் ராஜ்யசபா எம்பி ஆனார். ஆனால் பாலியல் புகார்கள், ஒழுக்கமின்மை, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் முறைகேடான துன்புறுத்தல் ஆகியவ புகார்கள் காரணமாக அவர் பதவி விலக நேரிட்டது. மீ டூ இயக்கத்தின் விளைவாக அக்பர் மீது 20க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார்களைச் சுமத்தினர்.

மேலும் படிக்க
By Anushree Updated: Thursday, May 30, 2019, 04:03:42 PM [IST]

எம் ஜே அக்பர் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் எம் ஜே அக்பர்
பிறந்த தேதி 11 Jan 1959 (வயது 65)
பிறந்த இடம் தெளிணிப்பாரா, ஹுக்ளி மாவட்டம், மேற்கு பெங்கால்
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி
தொழில் எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர், தற்பொழுது பொது வாழ்க்கை
தந்தை பெயர் திரு ஷேக் அக்பர் அலி
தாயார் பெயர் திருமதி இம்தியாஸ் அக்பர்

எம் ஜே அக்பர் நிகர மதிப்பு

நிகர மதிப்பு: N/A
சொத்துக்கள்:N/A
கடன்கள்: N/A

எம் ஜே அக்பர் சுவாரசிய தகவல்கள்

அக்பர் மீது பத்திரிகையாளர்கள் பிரிட்டியா ரமணி, இங்கிலாந்து பத்திரிகையாளர் ரூத் டேவிட், சிஎன்என் பத்திரிகை மஜ்லிஸ் டி புய் காம்ப், பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் கசலா வஹாப், பத்திரிகையாளர் சூடாபா பால் மற்றும் பத்திரிகையாளர் சுப்பர்ணா ஷர்மா ஆகியோர் பாலியல் புகார்களை சுமத்தினர். இதையடுத்து பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் அக்பர்.

எம் ஜே அக்பர் அரசியலில் கடந்து வந்த பாதை

2016
  • வெளியுறவுத்துறை இணை அமைச்சரானார்.
2016
  • மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2016
  • மனுக்கள் குழுவில் உறுப்பினர்.
2016
  • எதிரி சொத்து (திருத்தம் மற்றும் மதிப்பீட்டு) சட்டத்தின் கீழ் மாநிலங்களவை குழு உறுப்பினர்.
2015
  • நிலக்கரி மற்றும் இரும்புத்துறை அமைச்சக உறுப்பினர்.
2015
  • ஜார்கண்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஜூன் மாதம் 17ம் தேதி அன்று ராஜினாமா செய்தார்.
1991
  • மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆலோசகர். அரசியலில் இருந்து விலகி மீண்டும் பத்திரிகை துறைக்கு திரும்பினார்.
1989
  • பீகாரில் உள்ள கிஷன்கஞ்ச் தொகுதியிலிருந்து முதல் முறையாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு ஒன்பதாவது மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றார். அஸ்ரருல் ஹக்கை 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 1991 தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.

முந்தைய வரலாறு

2002
  • இந்தியா டுடே எடிட்டோரியல் இயக்குநர்
1994
  • தி ஏசியன் ஏஜ் ஆசிரியர்
1982
  • தி டெலெக்ராப் ஆசிரியர்
1973
  • ஆன்லூக்கர் ஆசிரியர்
1971
  • டைம்ஸ் ஆஃப் இந்தியா பயிற்சி பத்திரிகையாளர்.

எம் ஜே அக்பர் சாதனைகள்

நேரு: தி மேக்கிங் ஆஃப் இந்தியா என்ற தலைப்பில் ஜக்ஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு உட்பட பல புத்தகங்களை அக்பர் எழுதியுள்ளார். காஷ்மீர் பிஹைண்ட் தி வேல் என்ற தலைப்பில் காஷ்மீர் பற்றியும் தி க்ஷேட் ஆப் ஸ்வார்ட்ஸ் மற்றும் ஜிஹாத் வரலாற்று நூல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார்.

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X