முகப்பு
 » 
மல்லிகார்ஜூன கார்கே

மல்லிகார்ஜூன கார்கே

மல்லிகார்ஜூன கார்கே

மல்லிகார்ஜூன் கார்கே ஒரு மூத்த கர்நாடகா அரசியல்வாதி மற்றும் பதினாறாவது மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கர்நாடகாவின் குல்பர்கா தொகுதியில் இருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மல்லிகார்ஜூன கார்கே சுயசரிதை

மல்லிகார்ஜூன் கார்கே ஒரு மூத்த கர்நாடகா அரசியல்வாதி மற்றும் பதினாறாவது மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கர்நாடகாவின் குல்பர்கா தொகுதியில் இருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய ரயில்வே அமைச்சராக இருந்துள்ளார். தூய்மையான அரசியல்வாதி. அரசியலமைப்பு, சட்டம் மற்றும் நிர்வாகத்தில் நல்ல ஞானம் மிக்கவர். தற்போது அவர் லோக்சபா காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து 10 தேர்தல்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர் கார்கே. அதில் 9 முறை சட்டசபைக்கும் கடைசியாக குல்பர்கா லோக்சபா தொகுதியிலும் அவர் வெற்றி பெற்றார். கார்கே, தலித் வகுப்பைச் சேர்ந்தவர். 40 வருடம் எம்எல்ஏவாகவும், 5 வருடம் எம்பியாகவும் இருந்துள்ளார்.

மேலும் படிக்க
By Zainab Ashraf Updated: Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

மல்லிகார்ஜூன கார்கே தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் மல்லிகார்ஜூன கார்கே
பிறந்த தேதி 21 Jul 1942 (வயது 81)
பிறந்த இடம் வர்வாட்டி, பால்கி தாலுகா, பீதர் மாவட்டம்
கட்சி பெயர் Indian National Congress
கல்வி Graduate Professional
தொழில் அரசியல்வாதி மற்றும் வழக்கறிஞர்
தந்தை பெயர் ஸ்ரீ மபண்ணா
தாயார் பெயர் திருமதி. சாய்பவ்வா
மதம் பவுத்தம்
இணையதளம் NIL
சமூக வலைதளங்கள் சமூக வலைதளங்கள்:

மல்லிகார்ஜூன கார்கே நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹15.46 CRORE
சொத்துக்கள்:₹15.77 CRORE
கடன்கள்: ₹31.22 LAKHS

மல்லிகார்ஜூன கார்கே சுவாரசிய தகவல்கள்

புத்தகங்கள் படித்தல், பகுத்தறிவு சிந்தனை, மூடநம்பிக்கைகள் மற்றும் பழமைவாத நடைமுறைகளுக்கு எதிராக போராடுவது ஆகியவற்றை பொழுதுபோக்காக கொண்டுள்ளார். மேலும் கபடி, ஹாக்கி, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர். குல்பர்காவில் உள்ள மாணவர் ஒன்றியத்தின் மாணவர் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

மல்லிகார்ஜூன கார்கே அரசியலில் கடந்து வந்த பாதை

2014
  • 2014ம் ஆண்டு பொதுத் தேர்தலில், குல்பர்கா பாராளுமன்ற தொகுதியில் இருந்து போட்டியிட்டு, 73,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சி போட்டியாளரை வென்றார். ஜூன் மாதம் அவர் மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார்.
2009
  • 2009ம் ஆண்டு குல்பர்கா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இது அவருக்கு தொடர்ச்சியான 10வது தேர்தல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
2008
  • 2008 ஆம் ஆண்டு கர்நாடக சட்டசபைக்கு 9வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்தார். இந்த முறை சித்தாபூர் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். 2005 தேர்தலுடன் ஒப்பிடும்போது காங்கிரஸ் சிறப்பாகவே செயல்பட்டது என்றாலும் கூட பல முன்னணி தலைவர்கள் தோல்வியுற்று, கராங்கிரஸால் ஆட்சியையும் பிடிக்க முடியவில்லை. 2008ல் 2வது முறையாக கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார் கார்கே.
2005
  • 2005ம் ஆண்டு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக கார்கே நியமிக்கப்பட்டார். அதன் பிறகு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை வென்றது. போட்டியாளர்களான பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதளத்தை தோற்கடித்தது காங்கிரஸ். இதன் மூலம் ஊரகப் பகுதிகளில் காங்கிரஸ் வலுவாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
2004
  • மல்லிகார்ஜுன கார்கே 2004 ஆம் ஆண்டு கர்நாடகா சட்டசபைக்கு எட்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் முதல்வர் பதவிக்கு இவரது பெயர் அடிபட்டது. ஆனால் தரம் சிங் முதல்வரானார். தரம்சிங் அமைச்சரவையில், போக்குவரத்து மற்றும் நீர்வள ஆதார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
1999
  • 1999ம் ஆண்டு கர்நாடகா சட்டசபைக்கு ஏழாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கர்நாடக முதல்வர் பதவிக்கு இவரது பெயர் முன்னணியில் அடிபட்டது.
1994
  • 1994 ஆம் ஆண்டு, குர்மித்கல் தொகுதியில் இருந்து கர்நாடகா சட்டசபைக்கு ஆறாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டார்.
1992
  • 1992 மற்றும் 1994 ஆண்டுகளில், வீரப்ப மொய்லி அமைச்சரவையில் கூட்டுறவு, நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலை துறை அமைச்சராக இருந்தார்.
1990
  • 1990ல் பங்காரப்பா அமைச்சரவையில் வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக இணைந்தார். தனது துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்தார்.
1989
  • மல்லிகார்ஜூன் கார்கே 1989ம் ஆண்டு 5வது முறையாக குர்மித்கல் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1985
  • 1985ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் குர்மித்கல் தொகுதியிலில் வெற்றி பெற்று 4வது முறையாக கர்நாடக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
1983
  • மல்லிகார்ஜூன் கார்கே 1983 ஆம் ஆண்டில், குர்மித்கல் தொகுதியில் இருந்து கர்நாடகா சட்டசபைக்கு மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1980
  • 1980 ஆம் ஆண்டு குண்டு ராவ் அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்த காலகட்டத்தில், நில சீர்திருத்த நடவடிக்கையில் அவர் இறங்கினார். இதனால் நிலமில்லாத பல லட்சம் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், விவசாயக் கூலிகளுக்கு நில உரிமை கிடைத்து பயனடைந்தனர்.
1978
  • 1978 ஆம் ஆண்டு குர்மித்கல் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் தேவராஜ் அர்ஸ் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
1976
  • 1976ம் ஆண்டு கர்நாடக அமைச்சரவையில் தொடக்கக் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலத்தில் காலியாக இருந்த 16,000 எஸ்சி, எஸ்டி ஆசிரியர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட்டன.
1974
  • 1974ம் ஆண்டு கர்நாடக அரசுக்குச் சொந்தமான தோல் வளர்ச்சி கமிழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் . இந்தப் பதவியில் இருந்தபோது, ஆயிரக்கணக்கான தோல் பதனிடும் தொழிலாளர்களின் நல் வாழ்வுக்காக பாடுபட்டார். அவர்களது வாழ்க்கை முறை மேம்பட உதவினார்.
1973
  • 1973ம் ஆண்டு ஆக்ட்ராய் வரி ஒழிப்புக் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த கமிட்டியின் மூலமாக கர்நாடக உள்ளாட்சி அமைப்புகளின் பொருளாதார நிலையில் பெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டது.
1972
  • மல்லிகார்ஜூன் கார்கே முதலில் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் 1972 ஆம் ஆண்டு போட்டியிட்டு குர்மித்கல் தொகுதியில் வெற்றி பெற்றார்.

முந்தைய வரலாறு

1969
  • 1969 ஆம் ஆண்டில் எம்.எஸ்.கே மில்ஸ் ஊழியர் சங்கத்தின் சட்ட ஆலோசகராக இருந்தார். சம்யுக்த மஜ்தூர் சங்கத்தின் தலைவராக இருந்தார். தொழிலாளர்கள் உரிமைக்காக பல போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியுள்ளார். அதே ஆண்டு அவர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். குல்பர்கா நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரானார்.
Early 60s
  • குல்பர்காவில் உள்ள நூதன் வித்யாலயா பள்ளியில் படிப்பை முடித்தார் கார்கே. பின்னர் குல்பர்கா அரசுக் கல்லூரியில் இளங்கலை படிப்பையும், குல்பர்கா சங்கர்லால் லஹோத்தி சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தார். குல்பர்கா அரசுக் கல்லூரியில் படித்த சமயத்தில் அவருக்கு அரசியல் ஈடுபாடு ஏற்பட்டு அரசியல் பக்கம் திரும்பினார். மாணவர் சங்க பொதுச் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டார்.

மல்லிகார்ஜூன கார்கே சாதனைகள்

சித்தார்த் விஹார் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். இந்த அமைப்புதான் குல்பர்காவில் உள்ள புத்த விகாரை நிறுவியது. பெங்களூரில் உள்ள மிக பிரபலமான செளடய்யா மெமோரியல் ஹாலின் புரவலராக விளங்குகிறார். இங்கு பல்வேறு கச்சேரிகள், நாடகங்கள் உள்ளிட்டவை நடைபெறும். இந்த அரங்கத்தை புனரமைக்கவும், புதுப்பிக்கவும் மத்திய அரசிடமிருந்து பல்வேறு உதவிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார் கார்கே.
குல்பர்காவில் உள்ள மக்கள் கல்விக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆவார் (2012 வரை)
தும்கூர், சித்தார்தா கல்விக் கழகத்தின் தலைவர் ) 194 முதல் 1996 வரை.
கர்நாடகத்தில் மருத்துவ, தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருமளவில் வர காரணமாக இருந்துள்ளார்.

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X