Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேனகா சஞ்சய் காந்தி

மேனகா சஞ்சய் காந்தி
காந்தி குடும்பத்தின் போராளி என்று வர்ணிக்கப்படுபவர் மேனகா காந்தி. அரசியலில் ஒரு புயல் போல நுழைந்தவர்.
By Zainab Ashraf | Friday, March 29, 2019, 05:33:11 PM [IST]

மேனகா சஞ்சய் காந்தி சுயசரிதை

காந்தி குடும்பத்தின் போராளி என்று வர்ணிக்கப்படுபவர் மேனகா காந்தி. அரசியலில் ஒரு புயல் போல நுழைந்தவர். தனது கணவர் சஞ்சய் காந்தி மரணமடைந்த பிறகு மாமியார் இந்திரா காந்தியால் குடும்பத்திலிருந்தே வெளியேற்றப்பட்டார். தனது மகன் ராஜீவ் காந்திக்காக தான் செய்து வந்த வேலைகளுக்கு மேனகா குந்தகம் விளைவிப்பதாக இந்திரா காந்தி கருதினார். ஆனால் யாருக்கும் இடையூறாக இல்லாமல் தனக்கென தனிப் பாதை வகுத்து அரசியலில் முன்னேறி சாதித்தார் மேனகா காந்தி. தனது மகன் வருண் காந்தியுடன், இந்திரா குடும்பத்துக்கு எதிராக தீரத்துடன் போராடினார். அவர் தனது போராட்டத்தில் சற்றும் பின்வாங்கியதே இல்லை. அமேதி தொகுதியில் 1984ம் ஆண்டு ராஜீவ் காந்திக்கு எதிராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1989ம் ஆண்டு அவர் ஜனதாதளத்தில் இணைந்தார். பிலிபிட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்து ஜனதாதளம் கட்சி ஆட்சியைப் பிடித்தது. பிலிபிட் தொகுதியிலிருந்து மொத்தம் 6 முறை போட்டியிட்டு வென்றவர் மேனகா காந்தி. 1998 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் அவர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2004ம் ஆண்டு அவரும், அவரது மகனும் பாஜகவில் இணைந்தநர். அதன் பிறகு தொடர்ந்து பிலிபிட் தொகுதியில் மேனகாதான் வென்று வருகிறார். தற்போது மேனகா காந்தி மத்திய அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார்.

மேலும் படிக்க

மேனகா சஞ்சய் காந்தி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் மேனகா சஞ்சய் காந்தி
பிறந்த தேதி 26 Aug 1956 (வயது 69)
பிறந்த இடம் புது தில்லி
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி 12th Pass
தொழில் எழுத்தாளர்
தந்தை பெயர் மறைந்த திரு டி எஸ் ஆனந்த்
தாயார் பெயர் மறைந்த திருமதி அம்தேஸ்வர் ஆனந்த்
துணைவர் பெயர் மறைந்த திரு சஞ்சய் காந்தி
துணைவர் தொழில் தகவல் இல்லை
குழந்தைகள் 1 மகன்(கள்)
மதம் சீக்கியர்

மேனகா சஞ்சய் காந்தி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹54.5 CRORE
சொத்துக்கள்
₹55.69 CRORE
கடன்கள்
₹1.19 CRORE

மேனகா சஞ்சய் காந்தி சுவாரசிய தகவல்கள்

மேனகா காந்தி தனது மாமியார் இந்திரா காந்தி மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அதேசமயம், தனது கொழுந்தனாரனா ராஜீவ் காந்தி மீது அவருக்கு நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. ராஜீவ் காந்திக்கு பணம்தான் முக்கியம். நாட்டையே ஒரு பொருளாதார சந்தையாகத்தான் அவர் பார்த்தார். எதை விற்பதை, எதை வாங்குவது என்றுதான் அவர் பார்த்தார் என்று கூறியுள்ளார் மேனகா காந்தி. மேனகா காந்தியின் கணவர் சஞ்சய் காந்தி மரணமடைந்தபோது மேனகாவுக்கு வயது 23தான். அவரது மகன் வருண் காந்தி பிறந்து 100 நாட்களே ஆகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேனகா சஞ்சய் காந்தி சாதனைகள்

சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் உரிமைகளுக்கான போராளி. விலங்குகள் உரிமைக்காக போராடியமைக்காக பல சர்வதேச விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். 1995ம் ஆண்டு விலங்குகளின் மீதான சோதனைகளை கட்டுப்படுத்தும் ஆலோசனை மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+