Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமதி மீனாட்சி லேகி

திருமதி மீனாட்சி லேகி
மீனாட்சி லேகி பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.

தற்போது அவர் மக்களவையில் புது தில்லி தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.
By Keshav Karna | Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

திருமதி மீனாட்சி லேகி சுயசரிதை

மீனாட்சி லேகி பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.

தற்போது அவர் மக்களவையில் புது தில்லி தொகுதியின் உறுப்பினராக உள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும், உச்சநீதிமன்ற வழக்கறிஞராகவும் உள்ளார். மீனாட்சி லேகி, பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். தி வீக் இதழில் 'ஃபோர்த்ரைட்' என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதி வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பத்திரிகைகளில் பல்வேறு பிரச்சினைகள் பற்றி அவர் விவாதங்களில் பங்கேற்கிறார்.

தேசிய மனித உரிமை ஆணையத்தில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இவர் உரையாற்றியுள்ளார். பாலின பயிற்சி திட்டங்கள் தொடர்பாக பல்வேறு அமைச்சகங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். "மகளிர் இட ஒதுக்கீடு மசோதா" மற்றும் "பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் பிரச்சனை" பற்றிய நாடாளுமன்ற வரைவு குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். மீனாட்சி 1967ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 தேதி அன்று புது தில்லியில் பிறந்தார். ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் இருந்து வந்த ஒரு அற்புதமான பெண் அவர். அவர் தில்லி பல்கலைக் கழகத்தின் புகழ்பெற்ற இந்துக் கல்லூரியில் இருந்து இளங்கலை தாவரவியல் துறையில் பட்டம் பெற்றார். பின்னர், தொலைதூர கல்வி வழியில் தனது சட்டபடிப்பை முடித்தார். 1990 ஆம் ஆண்டு தில்லி-பார் கவுன்சிலில் பதிவு செய்தார். அவரது மாமனார் மறைந்த பிரன்நாத் லேகி, புகழ்பெற்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக இருந்தவராவார். உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞரான அமன் லேகியை காதலித்து கரம் பிடித்தவர் மீனாட்சி லேகி. பார் கவுன்சில் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் போது மீனாட்சிலேகி அமன் லேகியை சந்தித்தார். இவர்கள் 1992ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் நாள் அன்று திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

மேலும் படிக்க

திருமதி மீனாட்சி லேகி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் திருமதி மீனாட்சி லேகி
பிறந்த தேதி 30 Apr 1967 (வயது 58)
பிறந்த இடம் புது தில்லி
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Graduate Professional
தொழில் வழக்கறிஞர், அரசியவாதி மற்றும் சமூக சேவகர்
தந்தை பெயர் ஸ்ரீ பகவான் கன்னா
தாயார் பெயர் திருமதி. அமர்லதா கன்னா
துணைவர் பெயர் ஸ்ரீ அமன் லேகி
துணைவர் தொழில் வழக்கறிஞர்
குழந்தைகள் 2 மகன்(கள்) 1 மகள்(கள்)
இணையதளம் http://www.meenakshilekhi.com

திருமதி மீனாட்சி லேகி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹34.66 CRORE
சொத்துக்கள்
₹34.99 CRORE
கடன்கள்
₹32.76 LAKHS

திருமதி மீனாட்சி லேகி சுவாரசிய தகவல்கள்

மீனாட்சி லேகி சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் சமூக நீதி பாதுகாப்பு தொடர்பாகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறார். இந்திய பார்வையற்றோர் நிவாரண சங்கத்தில் இணை செயலாளராக இருக்கிறார். பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளராக இருக்கிறார். பாஜகவின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களை மக்களிடையே கொண்டு செல்கிறார். தேசிய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்த தொலைக்காட்சி விவாதங்களிலும் தீவிரமாக கலந்து கொள்கிறார்.

திருமதி மீனாட்சி லேகி அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2014: 16வது லோக்சபாவுக்கு புது தில்லி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆம் ஆத்மி கட்சியின் ஆஷிஷ் கேத்தனை தோற்கடித்தார்.
  • 2010: மீனாட்சி லேகி ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு அங்கமான சுதேசி ஜாக்ரன் மன்ச் அமைப்பில் பணி புரிந்து வந்தார். அப்போது, லேகியை பாரதிய ஜனதா கட்சியில் இணைவதற்கு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் நிதின் கட்கரி அழைத்தார். மீனாட்சி இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் பிரிவில் சேர்ந்தார். விரைவில் அவர் பாஜக மகளிர் பிரிவின் தேசியத் தலைவர் ஆனார்.
  • 20 July 2016: நாடாளுமன்ற உரிமைக் குழுவின் தலைவராக 2016 ஜூலை 20ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 12 June 2014: ஜூன் 12ம் தேதி, நாடாளுமன்ற அவைக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 11 Dec 2014: பணி ஆதாய இணைக் கமிட்டியின் உறுப்பினராக 2014 டிசம்பர் 11ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 3 Nov 2017: 2017 நவம்பர் 3ம் தேதி பிரஸ் கவுன்சில் இந்தியாவின் உறுப்பினரானார்.
  • 1 Sep 2014: 2014ம் ஆண்டு செப்டம்பர் 1 முதல் 2016 ஜூலை 20 வரை பிரஸ் கவுன்சின் உரிமைக் குழு உறுப்பினராக இருந்தார். மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறையின் நிலைக்குழு உறுப்பினாகவும் பணியாற்றினார்.

முந்தைய வரலாறு

  • 2013: 201ம் ஆண்டு தில்லி கூட்டு பலாத்கார சம்பவத்திற்குப் பிறகு மத்திய அரசு 2013ல் கிரிமினல் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்தது. அதுதொடர்பான குழுவில் மீனாட்சி லேகியும் முக்கியமாக இடம் பெற்றிருந்தார். மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை உருவாக்கிய வரைவுக் குழுவிலும் மீனாட்சி இடம் பெற்றிருந்தார். மேலும் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றத் தடுப்பு மசோதாவிலும் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
  • 2011-2012: சாந்தி முகுந்த் மருத்துவமனை பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்டவருக்காக மீனாட்சி லேகி வாதாடினார். நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் மீடியாவில் செய்திகள் தொடர்ந்து வருவதற்கு விதிக்கப்பட்ட தடையை வாதாடி நீக்கினார். இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளின் பணியை நிரந்தரமாக்க வாதிட்டு வெற்றி பெற்றார்.
  • 2000s: தேசிய மகளிர் ஆணைய சிறப்புக் குழுவில் இடம் பெற்றுள்ளார். மகளிர் மேம்பாட்டு சிறப்பு செயல்பாட்டுக் குழுவின் தலைவராக இருந்துள்ளார். புது தில்லி ஜேபிஎம் பார்வையற்றோர் பள்ளியின் துணைத் தலைவராக இருந்துள்ளார். பார்வையற்றோர் மறு வாழ்வு சங்கத்தின் இணை செயலாளராக இருந்துள்ளார்.
  • 1990: மீனாட்சி லேகி 1990 ஆம் ஆண்டு டெல்லி-பார் கவுன்சிலில் பதிவு செய்தார். உச்ச நீதிமன்றம், தில்லி உயர் நீதிமன்றம், பிற நீதிமன்றங்கள் மற்றும் டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் அவர் வாதிட்டுள்ளார். ஜாமீன் மனுக்கள், மறு பரிசீலனை வழக்குகள், அப்பீல்கள், கிரிமினல் வழக்குகள், ஊழல் தடுப்பு வழக்குகள், பெரா, சுங்கத்துறை வழக்குகள், வீட்டு வன்முறை, குடும்ப நலச் சட்டங்களின் கீழான வழக்குகளில் அவர் ஆஜராகியுள்ளார்.

திருமதி மீனாட்சி லேகி சாதனைகள்

2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி, மீனாட்சி லேகி பதினாறாவது மக்களவைத் தேர்தலில் 95 விவாதங்களில் (தேசிய சராசரி 57.9) பங்கேற்றார். அவர் மக்களவையில் 378 கேள்விகளை கேட்டுள்ளார். தேசிய சராசரி 251 ஆகும். லோக்சபாவில் 15 தனி நபர் மசோதாக்களை தாக்கல் செய்தார் (தேசிய சராசரி 1.8) .பாராளுமன்ற வருகைப்பதிவு 95 சதவீதமாகும். தேசிய சராசரி 80% ஆகும்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+