Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முண்டே பங்கஜா கோபிநாத்ராவ்

முண்டே பங்கஜா கோபிநாத்ராவ்
இந்திய அரசியலின் புதிய முகம் பங்கஜ முண்டே பால்வி. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.
By Ajay M V | Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

முண்டே பங்கஜா கோபிநாத்ராவ் சுயசரிதை

இந்திய அரசியலின் புதிய முகம் பங்கஜ முண்டே பால்வி. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் மறைந்த கோபிநாத் முண்டேயின் மகள். அவரது தந்தை கோபிநாத் முண்டே 2014ஆம் ஆண்டு ஜூன் 3ம் தேதி அன்று புது தில்லியில் நடந்த சாலை விபத்தில் இறந்தார். அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் ஆவார். மேலும் அவர் மறைந்த பிரமோத் மகாஜனின் மருமகள் மற்றும் ராகுல் மகாஜன் மற்றும் பூனம் மகாஜன் உறவினர் ஆவார். மகாராஷ்டிர மாநிலம் பார்லி என்ற இடத்தில் ஜூலை 26, 1979ம் ஆண்டு பிறந்தார். இளங்கலை பட்டம் மற்றும் வணிக நிர்வாகவியலில் முதுகலை பட்டமும் பெற்றார். டாக்டராக இருந்து தொழிலதிபராக மாறிய அமித் பாலேவை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு ஆரியமன் என்று ஒரு மகன் உள்ளார். அரசியலில் வருவதற்கு முன்னர் அவர் ஒரு அரசு சாரா நிறுவனத்தை நடத்தினார். அவர் பல்வேறு சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

மேலும் படிக்க

முண்டே பங்கஜா கோபிநாத்ராவ் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் முண்டே பங்கஜா கோபிநாத்ராவ்
பிறந்த தேதி 26 Jul 1979 (வயது 46)
பிறந்த இடம் 26 July 1979
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Graduate
தொழில் அரசியல்வாதி
தந்தை பெயர் முண்டே கோபிநாத்ராவ்
தாயார் பெயர் பிரதன்யா முண்டே
துணைவர் பெயர் அமித் பல்வி
துணைவர் தொழில் பண்ணை மற்றும் தொழில்
குழந்தைகள் 1 மகன்(கள்)

முண்டே பங்கஜா கோபிநாத்ராவ் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹7.61 CRORE
சொத்துக்கள்
₹13.75 CRORE
கடன்கள்
₹6.13 CRORE

முண்டே பங்கஜா கோபிநாத்ராவ் சுவாரசிய தகவல்கள்

"புன்ஹா சங்கர்ஷ் யாத்ரா" மூலமாக 379 சட்டசபைத் தொகுதிகளில் 500 கிலோமீட்டர் சாலைப் பயணமாக கடந்து 600 கூட்டங்களை நடத்தியுள்ளார். இந்த கூட்டங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. பார்லி தொகுதி மக்களின் நலனுக்காக பங்கஜாவும், அவரது குழுவினரும் அயராது பாடுபட்டு வருகின்றனர். பெண்கள் முன்னேற்றம், சமூக நலத் திட்டங்களுக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். பெண் சிசுக் கொலைக்கு எதிராக தீவிரமாக போராடி வருபவர். பெண்கள் சுய வேலை வாய்ப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படக் கூடியவர்.

முண்டே பங்கஜா கோபிநாத்ராவ் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2018: மகாராஷ்டிர மாநில அரசில், கிராமப்புற மேம்பாட்டுத் துறை, மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சராக உள்ளார். மேலும் மஹாராஷ்டிரா மாநிலம் லாதூர் மாவட்டம் மற்றும் பீட் மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சராகவும் இருக்கிறார்.
  • 2015: எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி இவர் ஊழலில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டியது. டெண்டர் இல்லாமல் கொள்முதல் செய்வதில் அவர் விதிமுறைகளுக்கு எதிராக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ஊழல் குற்றச்சாட்டுகளை முண்டே நிராகரித்தார். அரசு விதிகளின்படியே ஒப்பந்தங்களை வழங்கியதாக விளக்கம் அளித்தார்.
  • 2014: சட்டசபை தேர்தலுக்கு முன், அவர் "புன்ஹா சங்கர்ஷ் யாத்ரா" என்ற யாத்திரையை நடத்தினார். இந்த யாத்திரையின் மூலமாக அவர் மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் 79 சட்டசபைத் தொகுதிகளில் 600 கூட்டங்களை நடத்தினார். மொத்தம் 3500 கிலோமீட்டர் தொலைவை அவர் பயணித்தார். சாலை மார்க்கமான இந்த யாத்திரை 2014 ஆகஸ்ட் 27ம் தேதி ஆரம்பித்து 14 நாட்கள் நீடித்தது.
  • 2014: அக்டோபர் 31ம் தேதி அன்று மகாராஷ்டிரா மாநில அமைச்சரவையில் அமைச்சராக பதவியேற்றார். கிராம அபிவிருத்தி, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை மற்றும் நீர் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
  • 2012: பாரதிய ஜனதா இளைஞர் மோர்ச்சாவின் மாநிலத் தலைவராக பணியாற்றினார்.
  • 2009: மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்தில் பார்லி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முந்தைய வரலாறு

  • 2018: பங்கஜா முண்டே தற்போது மகாராஷ்டிர மாநில கிராமப்புற மேம்பாட்டுத் துறை, மகளிர் மற்றும் குழந்தை நலத் துறை அமைச்சராகவும் , லாதூர் மாவட்டம் மற்றும் பீட் மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சராகவும் இருக்கிறார்.
  • 2014: அக்டோபர் 31ம் தேதி அன்று மகாராஷ்டிரா அமைச்சராக பதவியேற்றார். கிராம அபிவிருத்தி, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை மற்றும் நீர் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 2012: பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் மோர்ச்சா மாநிலத் தலைவராக பொறுப்பேற்றார்.

முண்டே பங்கஜா கோபிநாத்ராவ் சாதனைகள்

மிகச் சிறந்த முறையில் சேவையாற்றக் கூடியவர் பங்கஜா. சட்டசபையில் சிறப்பாக பேசியமைக்காக பாராட்டப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+