Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பவன் சாம்லிங்

பவன் சாம்லிங்
பவன் குமார் சாம்லிங் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் ஐந்தாவது சிக்கிம் மாநில முதலமைச்சர் ஆவார். 1994 ஆம் ஆண்டு முதல் ஐந்து முறை தொடர்ந்து மாநிலத்தை ஆட்சி செய்த சிக்கிம் ஜனநாயக முன்னணியின் நிறுவன தலைவராக உள்ளார்.
By Ajay M V | Thursday, May 30, 2019, 04:03:42 PM [IST]

பவன் சாம்லிங் சுயசரிதை

பவன் குமார் சாம்லிங் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் ஐந்தாவது சிக்கிம் மாநில முதலமைச்சர் ஆவார். 1994 ஆம் ஆண்டு முதல் ஐந்து முறை தொடர்ந்து மாநிலத்தை ஆட்சி செய்த சிக்கிம் ஜனநாயக முன்னணியின் நிறுவன தலைவராக உள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மற்ற இந்திய மாநில முதலமைச்சர்களை விட நீண்ட காலமாக முதலமைச்சராக பதவி வகிக்கிறார். அவர் ஜனநாயக முன்னணியை நிறுவுவதற்கு முன்னர் 1989ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரை நார் பகதூர் பண்டாரி அமைச்சரவையில் தொழில்துறை, தகவல் தொடர்பு மற்றும் பொது உறவுகளுக்கான துறையில் பணியாற்றினார்.

மேலும் படிக்க

பவன் சாம்லிங் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் பவன் சாம்லிங்
பிறந்த தேதி 22 Sep 1950 (வயது 75)
பிறந்த இடம் யான்காங்
கட்சி பெயர் Sikkim Democratic Front
கல்வி Doctorate
தொழில் அரசியல்வாதி
தந்தை பெயர் அஷுபஹதுர் சாம்லிங்
தாயார் பெயர் அக்ஷராணி சாம்லிங்
துணைவர் பெயர் திக மாயா / தன் மாயா
துணைவர் தொழில் விவசாயி
குழந்தைகள் 4 மகன்(கள்) 4 மகள்(கள்)
இணையதளம் http://pawanchamling.in/

பவன் சாம்லிங் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹5.66 CRORE
சொத்துக்கள்
₹10.7 CRORE
கடன்கள்
₹5.05 CRORE

பவன் சாம்லிங் சுவாரசிய தகவல்கள்

நேபாள மொழி எழுத்தாளராகவும், சிக்கிம் சாஹித்ய பரிஷத்தால் 2010ம் ஆண்டு பானு புரஸ்கார் விருதும் பெற்றுள்ளார். அவர் பவன் சாம்லிங் கிரண் என்ற பெயரிலும் எழுதுகிறார்.

பவன் சாம்லிங் சாதனைகள்

சிக்கிம் மாநில வளர்ச்சிக்காகவும், அமைதிக்காகவும் பாடுபட்டமையால் சாம்லிங்கின் செல்வாக்கு அம்மாநிலத்தில் குறையாமல் உள்ளது. . 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் தேதி பிரதம மந்திரி நரேந்திர மோடி நாட்டிலேயே கரிம வேளாண்மை முழுவதுமாக நடைமுறைப்படுத்திய முதல் மாநிலம் சிக்கிம் என அறிவித்தார். பொது சேவையில் செய்த சாதனைக்காக மே 15, 2017 ல் முதலாவது பைரொன் சிங் ஷெகாவத் லைஃப் டைம் விருதை வென்றார். 1998 ஆம் ஆண்டில் அவர் "ஆண்டின் சிறந்த மனிதர் விருதை அமெரிக்காவின் பயோகிராபிகல் நிறுவனத்திடமிருந்து பெற்றார். 1999ம் ஆண்டு புது தில்லியிலுள்ள இன்ஸ்டிடியூட் ஆப் எகனாமிக் ஸ்டடீஸ் மாணவ சேவா புரஸ்கர் விருதை அளித்தது. 2001ம் ஆண்டு கொல்கத்தா பொயட் அறக்கட்டளை இலக்கியத்தில் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்பட்டது. நலிந்த பிரிவுகளின் சமூக மேம்பாடு, பின்தங்கிய வகுப்பினர் மற்றும் சிக்கிமின் அனைத்து சுற்று வளர்ச்சிக்கான தலைமைத்துவ மற்றும் நல்லரசு விருது 2003ம் ஆண்டு வழங்கப்பட்டது. 2009ம் ஆண்டு உலகளாவிய அமைதிக் கூட்டமைப்பு மற்றும் மதசார்பற்ற சர்வதேச சம்மேளனத்தால் அங்கீகரிக்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி இலக்கியம், கலை மற்றும் கலாச்சாரம் பற்றிய தடுப்பு மற்றும் வளர்ச்சி பற்றிய நீண்டகால சிறப்பு பங்களிப்பிலிருந்து சிக்கிம் சாஹித்திய பரிஷத் வழங்கிய பனு புரஸ்கர் விருதும் 2010ம் ஆண்டில் தி காங் அம்பாசிடர் பீஸ் விருதும் பாங் லாப்சோல் குழுவால் சிக்கிமின் பல்வேறு சமூகங்களுக்கிடையில் அமைதி மற்றும் ஒற்றுமை பிணைப்புகளை ஏற்படுத்தியதற்காக வழங்கப்பட்டது. பாரத் அஸ்மிதா ஜீவன் கவ்ரவ் புராஸ்கர் விருது 2012 ம் ஆண்டு பாரத் அஸ்மிதா அறக்கட்டளை, புனேயில் உள்ள எம்ஐடி குழுமம் மூலம் வழங்கப்பட்டது. 2016 ம் ஆண்டு மறைந்த கவிஞரான ஷெஸ்தாவின் 105 வது பிறந்த நாள் விழாவில் சித்தீச்சரன் ஷெஸ்தா அகாடமி மூலம் யுக கவி சித்தீச்சரன் விருதை பெற்றார். 2016ம் ஆண்டு நிலையான மேம்பாட்டு தலைவர்களுக்கான விருது எரிசக்தி மற்றும் வள நிறுவனம் (டெரி), புது தில்லியில் வழங்கப்பட்டது. 2017ல் ரபுன்ஸெல் நடுர்கோஸ்ட் மற்றும் சர்வதேச ஆர்கானிக் விவசாய அமைப்பின் சம்மேளனத்தின் விருதினைப் பெற்றார். 2018ம் ஆண்டு லண்டன் உலக சாதனை புத்தகத்தில் இவர் பெயர் இடம் பெற்றுள்ளது.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+