Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சச்சின் பைலட்

சச்சின் பைலட்
இந்தியாவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சச்சின் பைலட்டும் ஒருவர். மறைந்த ராஜேஷ் பைலட்டின் மகன்தான் சச்சின் பைலட்.
By Rashmi | Tuesday, February 19, 2019, 01:51:58 PM [IST]

சச்சின் பைலட் சுயசரிதை

இந்தியாவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சச்சின் பைலட்டும் ஒருவர். மறைந்த ராஜேஷ் பைலட்டின் மகன்தான் சச்சின் பைலட். டெல்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பிஏ ஆங்கில இலக்கியம் படித்துள்ளார். படிப்புக்குப் பின்னர் பிபிசியின் டெல்லி பிரிவில் பத்திரிகையாளராக செயல்பட்டார். பின்னர் ஜெனரல் மோட்டார்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பிறகு எம்பிஏ படித்தார். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தனது எம்பிஏ படிப்பை அவர் மேற்கொண்டார். பின்னர் அரசியலில் இணைந்தார். 26 வயதில் அவர் ராஜஸ்தான் மாநிலம் தாஸா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். பின்னர் அஜ்மீர் தொகுதியிலிருந்து 2009ம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அமைச்சராகவும் அவர் செயல்பட்டார். மத்திய அரசில் அவர் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். 2018 சட்டசபைத் தேர்தலில் இவரது பங்கு முக்கியமானதாக இருந்தது. சாரா அப்துல்லாவை 2004ம் ஆண்டு மணந்தார் சச்சின் பைலட். முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் பரூக் அப்துல்லாவின் மகள்தான் சாரா அப்துல்லா.

மேலும் படிக்க

சச்சின் பைலட் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் சச்சின் பைலட்
பிறந்த தேதி 07 Sep 1977 (வயது 48)
பிறந்த இடம் சஹாரன்பூர், உத்தரப் பிரதேசம்
கட்சி பெயர் Indian National Congress
கல்வி Post Graduate
தொழில் விவசாயி, பத்திரிகையாளர், ராணுவ அதிகாரி
தந்தை பெயர் மறைந்த திரு ராஜேஷ் பைலட்
தாயார் பெயர் திருமதி ரமா பைலட்
துணைவர் பெயர் சாரா பைலட்
துணைவர் தொழில் சமூக சேவகர்
குழந்தைகள் 2 மகன்(கள்)
மதம் இந்து
இணையதளம் http://www.sachinpilot.com/

சச்சின் பைலட் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹7.39 CRORE
சொத்துக்கள்
₹7.39 CRORE
கடன்கள்
N/A

சச்சின் பைலட் சுவாரசிய தகவல்கள்

விமானம் ஓட்டுவதிலும், துப்பாக்கிச்சுடும் போட்டிகளிலும் ஆர்வம் கொண்டவர் சச்சின் பைலட். 1995ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தனியார் பைலட் உரிமம் பெற்றுள்ளார். டெல்லியில் நடந்த பல்வேறு தேசிய ரைபிள் மற்றும் பிஸ்டல் துப்பாக்கிச் சூடும் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். டெரிட்டோரியல் ஆர்மியில் லெப்டிெனென்ட் ஆக இருந்துள்ளார். விவசாயிகள், இளைஞர்கள் குறித்த பிரச்சினைகளில் தீவிர அக்கறை காட்டுபவர் சச்சின். உள்ளூர் மற்றும் சர்வதேச செய்திகளில் அக்கறையுடன் இருப்பவர். சர்வதேச பொருளாதாரம், வர்த்தகம், விவசாயம், ஊரக வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துபவர். 2001ம் ஆண்டு தனது தந்தை குறித்து ஒரு நூல் எழுதியுள்ளார். அந்த நூலின் பெயர் "Rajesh Pilot : In Spirit Forever."

சச்சின் பைலட் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2018: 2018 சட்டசபைத் தேர்தலில் டாங்க் தொகுதியிலிருந்து போட்டியிட்டார்.
  • 2014: அஜ்மீர் தொகுதியிலிருந்து சச்சின் பைலட் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார், பாஜகவின் சன்வார் லாலிடம் 1,71,983 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.
  • 2014: 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • 2012: 2012 அக்டோபர் 28 முதல் மே 2014 வரை கம்பெனி விவகாரத்துறை அமைச்சராக தனிப்பொறுப்புடன் கூடிய துறை, பதவி வகித்தார்.
  • 2009: பாஜக வேட்பாளர் கிரண் மகேஸ்வரியை தோற்கடித்து 15வது லோக்சபாவுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2009 முதல் 2012 வரை மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக செயல்பட்டார்.
  • 2006: 2006 முதல் 2009 வரை சிவில் விமானப் போக்குவரத்து துறை உறுப்பினர், உள்துறை அமைச்சக குழு உறுப்பினராக இருந்தார்.
  • 2004: 14வது லோக்சபாவுக்கு ராஜஸ்தான் மாநிலம் தாஸா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜகவின் கர்தார் சிங் பந்தனாவை 1,14,865 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். உள்துறை கமிட்டி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சச்சின் பைலட் சாதனைகள்

26வது வயதில் 2004ம் ஆண்டு நாடாளுமன்றத்திலேயே இளைய எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர். 2008ம் ஆண்டு நடந்த உலக பொருளாதார அமைப்பின் சார்பில் இளம் உலகத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+