Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சஞ்சய் நிருபம்

சஞ்சய் நிருபம்
15வது லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சஞ்சய் நிருபம். மும்பை வடக்குத் தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.
By Administrator | Tuesday, February 19, 2019, 01:51:58 PM [IST]

சஞ்சய் நிருபம் சுயசரிதை

15வது லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சஞ்சய் நிருபம். மும்பை வடக்குத் தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் முன்பு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மும்பை பிராந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தற்போது இருக்கிறார். ராஜ்யசபாவுக்கு 2 முறை எம்பியாக இருந்திருக்கிறார். ஒருமுறை சிவசேனா சார்பிலும், ஒருமுறை காங்கிரஸ் சார்பிலும் இருந்திருக்கிறார். 1965ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி பீகார் மாநிலம் ரோத்தாஸ் நகரில் பிறந்தவர். 1984ம் ஆண்டு பாட்னா ஏஎன் கல்லூரியில் பிஏ ஹானர்ஸ் படித்தார். 1989ம் ஆண்டு திருமதி கீதாவை மணந்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இவருடைய தொழில் பத்திரிகையாளர் ஆகும். பாஞ்ச் ஜன்யாவில் சப் எடிட்டராக இருந்தார். டொபஹர் கா சாம்னாவில் செயல் ஆசிரியராக இருந்தார். ஜன் சத்தாவிலும் சில காலம் பணியாற்றினார்.

மேலும் படிக்க

சஞ்சய் நிருபம் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் சஞ்சய் நிருபம்
பிறந்த தேதி 06 Feb 1965 (வயது 61)
பிறந்த இடம் ரோத்தாஸ், பீகார்
கட்சி பெயர் Independent
கல்வி Graduate
தொழில் அரசியல்வாதி
தந்தை பெயர் திரு பிரிஜ் கிஷோர் லால்
தாயார் பெயர் பிரேம் தேவி
துணைவர் பெயர் கீதா நிருபம்
துணைவர் தொழில் தகவல் இல்லை
குழந்தைகள் 1 மகள்(கள்)
மதம் இந்து
இணையதளம் SanjayNirupam.com

சஞ்சய் நிருபம் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹11.37 CRORE
சொத்துக்கள்
₹12.21 CRORE
கடன்கள்
₹84 LAKHS

சஞ்சய் நிருபம் சுவாரசிய தகவல்கள்

2008ல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

கவிதை எழுதுவது, நாட்டு நடப்பு குறித்து கட்டுரைகள் எழுதுவது

சஞ்சய் நிருபம் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2017: தேர்தல் தோல்வி காரணமாக மும்பை காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகினார் சஞ்சய் நிருபம்
  • 2015: மும்பை பிராந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்
  • 2014: 2014 லோச்பா தேரத்லில் பாஜக வேட்பாளர் கோபால் ஷெட்டியிடம் தோல்வியுற்றார் சஞ்சய் நிருபம்
  • 2009: 15வது லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 2003-04: குளிர்பானங்கள், பழச்சாறுகள், பிற பானங்களில் பூச்சிக் கொட்டி மருந்துகளின் அளவு மற்றும் பாதுகாப்பு முறை தொடர்பான கூட்டுக் குழுவின் உறுப்பினர்
  • 2000-01: வர்த்தக அமைச்சக கமிட்டி உறுப்பினர்
  • 2000: ராஜ்யசபாவுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (2வது முறை)
  • 1999-Feb, 2004 and Oct. 2004-Mar 2005: சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக ஆலோசனைக் கமிட்டி உறுப்பினர்
  • 1999: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய மசோதா இணைக் கமிட்டியின் உறுப்பினர்
  • 1998-99: வெளியவுறுத்துறை ஆலோசனைக் கமிட்டி உறுப்பினர், நாடாளுமன்ற அரசியல் சாசனக் கழக செயற்குழு உறுப்பினர்
  • 1996-Feb 2004: தொழில்துறை கமிட்டி உறுப்பினர்
  • 1996: ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 1996: ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 31 Aug 2009: மின்துறை கமிட்டி உறுப்பினர்
  • 26 Jul 2010: இந்தியா - சீனா நாடாளுமன்ற நட்பு பிரிவு உறுப்பினர்
  • 23 Sep 2009: உரிமைக் கமிட்டி உறுப்பினர்
  • 21 Jan 2010: இந்தி சலஹகர் கமிட்டி உறுப்பினர், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கல்துறை கமிட்டி உறுப்பினர்
  • 16 Sep 2009: தகவல் தொழில்நுட்பம், தொடர்புத்துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்
  • : நாடாளுமன்ற வளாகத்தில் தேசியத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் படங்கள், சிலைகள் அமைப்பு தொடர்பான கூட்டு நாடாளுமன்றக் கமிட்டியின் உறுப்பினர்
  • : தகவல் தொழில்நுட்பத்துறை கமிட்டி உறுப்பினர்
  • : நிதித்துறை கமிட்டி உறுப்பினர்

முந்தைய வரலாறு

  • 2017: மும்பை காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார் சஞ்சய் நிருபம். தேர்தல் தோல்வி காரணமாக இந்த முடிவை எடுத்தார்.
  • 2015: மும்பை பிராந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரானார்.
  • 2014: 2014 லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளர் கோபால் ஷெட்டியிடம் தோல்வியடைந்தார் சஞ்சய் நிருபம்
  • 2009: 2009 முதல் 2014 வரை மும்பை வடக்கு லோக்சபா தொகுதி உறுப்பினராக இருந்தார் நிருபம்
  • 1988: 1988ம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து வந்த வேலைவாய்ப்பை ஏற்றுக் கொண்டார். அதன் மூலம் அவர் மும்பைக்கு இடம் பெயர்ந்து வந்தார்.

சஞ்சய் நிருபம் சாதனைகள்

தகவல் இல்லை

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+