Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்பானந்தா சோனோவால்

சர்பானந்தா  சோனோவால்
சர்பானந்தா சோனோவால் அஸ்ஸாம் மாநிலத்தின் பதினான்காவது முதமைச்சர் ஆவார். சோனோவால் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்.
By Zainab Ashraf | Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

சர்பானந்தா சோனோவால் சுயசரிதை

சர்பானந்தா சோனோவால் அஸ்ஸாம் மாநிலத்தின் பதினான்காவது முதமைச்சர் ஆவார். சோனோவால் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர். அஸ்ஸாம் மாநிலத்தின் மஜுலி தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தனது இளங்கலைப் படிப்பை திப்ருகார் பல்கலைகழகத்திலும் கவுஹாத்தி பல்கலைகழகத்தில் தனது சட்டபடிப்பையும் முடித்தார். இளைய அரசியல்வாதியான இவர் சிறந்த செயல் வீரரும் கூட. ஜாதிய நாயக் அஸ்ஸாம் என்று அஸ்ஸாமின் மிகப் பழமையான மாணவர் அமைப்பான அனைத்து அஸ்ஸாம் மாணவர் கூட்டமைப்பால் பாராட்டப்பட்டவர் சோனோவால்.

மேலும் படிக்க

சர்பானந்தா சோனோவால் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் சர்பானந்தா சோனோவால்
பிறந்த தேதி 31 Oct 1961 (வயது 64)
பிறந்த இடம் மோலோக்கோவன், திப்ரூகர் மாவட்டம், அஸ்ஸாம்
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Graduate Professional
தொழில் அரசியல்வாதி, ஆலோசகர், விவசாயி
தந்தை பெயர் ஜிபேஸ்வர் சோனோவால்
தாயார் பெயர் திருமதி தினேஸ்வரி சோனோவால்
துணைவர் பெயர் பிரம்மச்சாரி
இணையதளம் https://cm.assam.gov.in/

சர்பானந்தா சோனோவால் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹4.5 CRORE
சொத்துக்கள்
₹4.76 CRORE
கடன்கள்
₹25.78 LAKHS

சர்பானந்தா சோனோவால் சுவாரசிய தகவல்கள்

சர்பானந்தா சோனோவால் கல்லூரியில் பயிலும் போது மிஸ்டர் திப்ருகார் ஸ்ட்ராங்மேன் என்ற பட்டதையும் வென்றார். அதிவேக கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர் .அஸ்ஸாமின் முதல்வராக பதவியேற்ற இவர் பாரதிய ஜனதா கட்சியின் முதல் முதலமைச்சர் இரண்டாவது பழங்குடியின முதலமைச்சரும் ஆவார். மீன் பிடிப்பதை விருப்பமாக கொண்டவர்.

சர்பானந்தா சோனோவால் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2016: அஸ்ஸாம் மாநில முதல்வராக 19 மே 2௦16 அன்று பதவி ஏற்றார். மஜுலி தொகுதியில் இருந்து அஸ்ஸாம் மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
  • 2014: மத்திய அமைச்சரவையில், தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக சோனோவால் நியமிக்கப்பட்டார். பின்னர் 2016-ல் மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
  • 2014: அஸ்ஸாம் பாரதிய ஜனதா கட்சியின் பிரசாரத்தை தலைமை ஏற்று நடத்தி 16வது மக்களவை தேர்தலில் பாஜகவை வெற்றி பெறச் செய்தார்.. மேலும் லக்கிபூர் தொகுதியில் இருந்து 16வது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 2012: அஸ்ஸாம் மாநில பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்
  • 2011: சோனோவால், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்பு அஸ்ஸாம் மாநில பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும், தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவியிலும் அமர்ந்தார்.
  • 2011: பாரதிய ஜனதாகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரானார்
  • 2006: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
  • 2005: மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்தார்.
  • 2004-2009: 14வது நாடாளுமன்றத்திற்கு, திப்ருகார் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2001-2004: மோரன் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2001: அஸ்ஸாம் கன பரிஷத் கட்சியின் உறுப்பினர் ஆனார்.
  • 1996-2000: வடகிழக்கு மாணவர் அமைப்பின் தலைவரானார்.
  • 1992: சர்பானந்தா சோனோவால் அனைத்து மாணவர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவர் 1999 வரை அதே பதவியில் நீடித்தார்.

சர்பானந்தா சோனோவால் சாதனைகள்

சோனோவால் சர்ச்சைக்குரிய சட்டவிரோத இடம்பெயர்வு சட்டத்தை கொண்டு வந்தவர். பின்னர் இதை உச்சநீதிமன்றம் 2005ம் ஆண்டு செல்லாது என்று அறிவித்தது. பிரம்மபுத்திரா மற்றும் லோஹித் ஆறுகளை இணைத்து டோலா - சதியா இடையே கட்டப்பட்ட இந்தியாவின் நீண்ட பாலமானது அஸ்ஸாம் , அருணாச்சல பிரதேசம் மற்றும் வடகிழக்கு முழுவதும் புதிய பொருளாதார புரட்சியை ஏற்படுத்தியது

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+